மகாபாரதம் – பகுதி 3 – பாண்டவர்கள்..!

  • by
mahabharatam part -3 about pandavas

மகாபாரதத்தை நீங்கள் படிக்க ஆரம்பித்தால் உங்களை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஒரு காவியம் தான் இது. இந்த மகாபாரதத்தில் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையைப் போதித்து வாழ்க்கையின் யதார்த்த நிலையை நமக்கு சுட்டிக் காட்டுகிறார். மேலும் இந்த மகாபாரதத்தின் மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் நல்ல குணங்கள் மற்றும் தீய குணங்கள் என்ன என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

ஆரம்பத்தில் கெட்டவர்களின் சூழ்ச்சியால் தங்களது நாட்டை பாண்டவர்கள் இழந்தாலும், அதற்குப் பிறகு அவர்கள் முயற்சியின் மூலம் அவர்களது நாட்டை மீட்டு எடுப்பது போல் இந்த காவியம் உள்ளது. அவர்களது உரிமையைப் பெற பாண்டவர்கள் எவ்வாறு போராடி ஜெயிக்கிறார்கள் என்பதே இந்த கதை.

துன்பத்தைத் தீர்க்கும் கடவுள்தான் ஸ்ரீகிருஷ்ணர் என்பது நம் முன்னோர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். அப்படித்தான் திரௌபதியும் இந்த மகாபாரத கதையில் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கும் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை உச்சரிக்கிறார். அப்பொழுது கிருஷ்ணர் அவரது முன் தோன்றும் காட்சி உங்களை நெகிழ வைக்கும். 

மகாபாரதத்தில் தருமர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய கதாபாத்திரம் பெரும் பங்கு வகிக்கின்றன. இவர்கள் ஐந்து பேர்தான் பாண்டவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க – மகாபாரதம் பகுதி-2 : விநாயகரால் எழுதப்பட்ட மகாபாரதம்!!!

தர்மர்

தர்மர், பாண்டுவிற்கும் குந்திக்கும் மகனாக பிறந்தவர். இவர்தான் மூத்த சகோதரர் ஆவார். ஏற்கனவே குந்தி பெற்ற வரத்தினை நாம் பார்த்திருந்தோம். அப்படி குந்திக்கும், எமதர்மனுக்கு பிறந்தவர்தான் இந்த தருமர். குருசேத்திரப் போரின் தலைவர் தர்மர் தான். மிகவும் சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட இவர் தான் அஸ்தினாபுரத்தின் அரசராக விளங்கினார் 

பீமன்

இவர் பாண்டுவிற்கும் குந்திக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். குந்தி பெற்ற வரத்தினால் வாயு பகவானுக்கும், குந்திக்கும் உருவானவர். பீமா எனும் ஆறு இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. 

அர்ஜுனன்

வீரத்தில் சிறந்த அர்ஜுனன் பாண்டுவிற்கும்  குந்திக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஆவார். அர்ஜுனன் கிருஷ்ணன் அவர்களின் மிகவும் நெருங்கிய நண்பர். வில்வித்தையில் சிறந்த அர்ஜுனன் துரோணரின் முதன்மையான சீடன் ஆவார். 

மேலும் படிக்க – மகாபாரதம் – பகுதி 1- வியாச முனிவர் பிறந்த கதை!!!

நகுலன்

நகுலன் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு மகனாக பிறந்தவர் ஆவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர் ஆவார். மிகவும் அழகான தோற்றம் உடைய நகுலன் வாள்வீச்சில்  சிறந்து விளங்கினார். நகுலனும், சகாதேவனும் இரட்டையர்கள்.

சகாதேவன்

முன்னர் கூறியது போலவே பாண்டுவிற்கும், பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் மகனாக பிறந்தவர் இவர். இந்த ஐந்து சகோதரர்களில் சகாதேவனே இளைய சகோதரர் ஆவார். மிகவும் அறிவாளியான சகாதேவன் பின்னர் நடக்கவிருக்கும் செயல்களை முன்கூட்டியே கணிக்கும் திறமை உடையவர். மேலும் நகுலனை போலவே இவரும் வாள்வீச்சில் சிறந்து விளங்கியவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன