மகாபாரதம் – பகுதி 1- வியாச முனிவர் பிறந்த கதை!!!

  • by
mahabharatam part -1, vysa munivar birth story

இந்திய பாரதத்தின் மிக முக்கிய இதிகாசங்களுள் இராமாயணமும் மகாபாரதமும் அடங்கும். 

இந்த இந்து சமயத்தின் முக்கிய நூல்களில் ஒன்றாக வருவதே பகவத்கீதை. பாண்டு, திருதராஷ்டிரன் ஆகிய இரு சகோதரர்களின் பிள்ளைகளுக்கு இடையே நடக்கும் ஒரு போரை மையமாகக் கொண்டே இந்த காப்பியம் உருவாக்கப்பட்டது. 

இந்த மானுட வாழ்க்கையில் எவ்வாறு அறநெறி என்னும் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்பதை பற்றி  நமக்கு கூறுவதே இந்த மகாபாரதத்தின் நோக்கமாகும். மனிதனாகிய நாம் அனைவரும் தர்மத்தின் வழி தவறாமல் நடக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த மகாபாரதம் நமக்கு எடுத்துரைக்கிறது. அதனால் தான் இந்த காவியம் பாரத மகாகாவியம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த காவியத்தில் அறச்சிந்தனைகள், பண்பாட்டுச் சிந்தனைகள் ஆகியவை கலந்து நமக்கு வாசிக்க படைக்கப்படுகின்றன. 

இந்த மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அத்தினாபுரம் அரியணைகாக பங்காளிகளான கௌரவர்களும், பாண்டவர்களும் இந்தப் போரை செய்கிறார்கள். இந்த போர் குருஷேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றதால் இந்த போருக்கு குருஷேத்திர போர் என்ற பெயர் வந்தது. கிட்டத்தட்ட 18 நாட்கள் நடந்த பின் இந்தப் போர் இறுதியில் முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்க – ராம நவமியை வீட்டில் கொண்டாடுவது எப்படி..!

வியாச முனிவர் பிறந்த கதை

வேதவியாசர் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கியவர். இவர்தான் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் கொள்ளுத்தாத்தா. இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்த மகாபாரதத்தை இயற்றிய வேதவியாசர், பராசர மகரிஷி என்பவருக்கும் சத்யவதி என்ற மீனவப் குலத்தைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கும் பிறந்தவராவார். 

இவருடைய தந்தையான பராசர மகரிஷி, விஷ்ணு புராணத்தை இயற்றியவர் ஆவார். ஒருமுறை இவர் யமுனை நதியின் வழியே பயணம் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மீனவ பெண் நதியை கடப்பதற்காக தன்னுடைய மரப்படகில் அங்கு உள்ளவர்களுக்கு உதவி செய்வதை கண்டார். அந்தப் பெண்ணுடைய அழகால் ஈர்க்கப்பட்ட மகரிஷி முனிவர், அந்தப் பெண்ணிடம் சென்று அவரை அக்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். 

அதன்படியே அந்த மீனவ பெண்ணும் அவரை மரப் படகில் ஏற்றி பயணப்பட்டாள். அப்போது பராசர மகரிஷி அவர் அந்தப் பெண் மீது கொண்டுள்ள காதலை அவளிடத்தில் வெளிப்படுத்தினார். 

மீனவப் பெண்ணான சத்யவதி முதலில் அவரது விருப்பத்திற்கு தயங்கினாலும் பராசர மகரிஷியின் தொடர்ந்த வற்புறுத்தலால் வேறுவழியின்றி, அவளுடைய நிபந்தனைக்கு சம்மதித்தால் மட்டுமே அவரை திருமணம் செய்வதாக ஒப்புவித்தாள். அதற்கு மகரிஷி அது என்ன நிபந்தனையை என்று அவளிடத்தில் வினவினார். 

மேலும் படிக்க – ஆச்சரியப்படுத்தும் 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த்..!

நிபந்தனைகள் 

சத்தியவதி மூன்று நிபந்தனைகளை அவருக்கு விதித்தாள். முதலாவது நிபந்தனையாக அவர்கள் இருவரையும் யாரும் காணக் கூடாது என்றால்.

இரண்டாவது நிபந்தனையாக அவள் மீதுள்ள மீன் நாற்றத்தை வாசனையாக மாற்ற வேண்டும் என்று கூறினாள். மேலும் மகரிஷி முனிவருடன் இவர் சேர்ந்து வாழ்ந்தாலும் அந்த பெண் கற்புடையவளாகவே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். இந்த இரண்டு வரங்களையும் மகரிஷி அவளுக்கு வழங்கினார். 

சத்தியவதி மூன்றாவது நிபந்தனையாக அவளுடைய குழந்தை அறிவாளியாகவும், நன்கு படித்தவன் ஆகவும், மீனவனாக இல்லாமல் ஒரு முனிவனாகவும் இருக்க வேண்டும் என்று கூறி வரத்தை கேட்டாள்.

அவள் கூறிய மூன்று நிபந்தனைகளுக்கும் ஒத்துக் கொண்ட முனிவர், சத்தியவதி கூறிய நிபந்தனைகளின் படி நடந்து கொண்டார். 

பின்னர் அன்றைய தினம் அவர்கள் இருவரும் ஒரு தீவில் தங்களுடைய இல்வாழ்க்கையை தொடங்கினர். அதே தினத்தில் சத்தியவதி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவர் தான் நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கும் வேத வியாசர் என்னும் முனிவர். பிறக்கும் பொழுதே வேதவியாசர் கருமை நிறத்தில் இருந்ததால் இவர் கிருஷ்ணர் என்று அழைக்கப்பட்டார். தீவு பகுதியில் இவர் பிறந்ததன் காரணத்தினால் இவர் த்வைபாயனர் என்றும் அழைக்கப்பட்டார். இவரது முழுப்பெயர் கிருஷ்ண த்வைபாயனர் வேத வியாசர் என்பதாகும். இதுதான் இந்த மிக சிறந்த மகாபாரதத்தை இயற்றிய வேதவியாசரின் கதை ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன