மகத்துவம் நிறைந்த சிவராத்திரி கொண்டாட்டங்கள்

  • by

மகா சிவராத்திரியில்   முந்தின நாள் மாலை குளித்து  விநாயகர் அருள் பெற்று சிவராத்தி கொண்டாட்டத்தை  தொடங்கிவிட வேண்டும். மகா சிவராத்திரி அன்று திரி கர்ண சுத்தி செய்தல் என்பது அவசியம் ஆகும். மனம், வாக்கு, உடல் இந்த மூன்றிலும் செய்வதி திரி கர்ண சுத்தி ஆகும். மனத்தை ஒரு நிலைப்படுத்த தியானம் செய்ய வேண்டும்.

எண்ணத்தை எப்பவும் பாசிட்டாவா வைக்க வேண்டும் எண்னங்களை  ஒரு நிலைப்படுத்த வேண்டும். மனதை மன்னிக்க செய்ய வேண்டும் மன்னிப்பு கோற வேண்டும். மகா சிவராத்திரி அன்று ஒரு வேளைக்காவது சாப்பிடாமல் இருப்பது நல்லது. மூன்று வேளையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வாக்கு சுத்தம் என்பது அவசியம் கொண்டிருந்தல் என்பது அவசியம் ஆகும். நல்ல சொற்களை பேச வேண்டியது அவசியம் ஆகும்.     நல்ல சிந்தனையுடன் பேசும் சொற்கள் பலிக்க மந்திர உச்சாடணம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

மகா சிவாராத்திரி  அன்று சிவ பெருமானுக்கு பால் அபிசேகம் செய்வது சாதரண மக்கள். எரித்த  சாம்பலை வைத்து சிவபெருமானுக்கு படைத்தல் போன்றவை அகோரிகள் செய்து வருவார்கள்.   

நந்தியார் அனுமதி:

சிவராத்திரி அன்று சிவ பெருமானை தரிசித்து வணங்க வேண்டுமெனில்  நந்தியார் இடம் அனுமதி பெற்றுதான் வணங்க வேண்டும். சிவராத்திரி அன்று நந்தி பகவானை வணங்கி சிவபெருமானை வணங்குவோம்.  சிவபெருமான அருள் கிடைக்கும் முன் நந்தியார் அனுமதி அவசியம் ஆகும். 

காஸ்மிக் கதிர்கள்: 

காஸ்மிக் கதிர்கள்   அன்று அதிகமாக பூமியில் கிடைக்கும். உடல் மனதும்  ஆரோக்கியம் பெற அந்த மகாசிவராத்திரி இரவு நமக்கு உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்வில்  செய்ய வேண்டிய முக்கிய கடமை ஒன்று எனில் அது சிவராத்திரி ஆகும். 

மேலும் படிக்க: சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

மந்திர உச்சரிப்பு:

சிவபெருமானை வணங்கி  சிவாய நம, ஓம் நமச்சிவாய,  சொல்லி நமது பிரார்த்தனை செய்யும் பொழுது சிவபெருமான அருள் பெற்று வாழலாம். இந்த மகாசிவராத்திரியில் அம்பாள் நமக்காக சிவனை வேண்டி பெற்று தந்த வரத்தை பின்ப்பற்றி வரங்கள் பல பெற்று வாழ்வை வளமாக்குவோம். 

தமிழ்நாட்டில் சிவராத்திரி: 

தமிழ் நாட்டில் தஞ்சை பெரிய கோவில், சிதம்பரம் சிவன் கோவில்களில் விழாகோலங்களில் ஊரே  ஜொலிக்கின்றது. காரைக்காலில் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவில், கைலாசநாதர் கோவில், சென்னை கபாலீஸ்வரர் கோவில்,  திருவண்ணாமலையர் கோவில் போன்ற கோவில்களில் அபிசேகங்கள் நடக்கவுள்ளது. அதிக கூட்டங்கள் இருக்கும் என்பதால் அதனை எவ்வாறு  சமாளிப்பது என்பது குறித்த கோவில் நிர்வாகங்கள் எல்லாம் திட்டமிட்டு இளைஞர்கள் மூலம் சரி செய்து வருகின்றனர். அதுபோல் இந்தியாவில் முக்கிய இடங்களில் சிவ பெருமானை வணங்கி பல்வேறு பூஜைகள் செய்யப்படும்.  

மேலும் படிக்க: சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

திருவாசகம், சிவபுராணம், சிவாய போற்றி, லிங்கோத்பவர் போன்ற மந்திரங்கள் அனைத்தும் விண்ணை முட்டும், இமயமலையில் இருந்து  இராமேஷ்வரம் வரை தொடர்ந்து நாம் செய்யும் சிவ அர்ச்சனைகள் அவரை நம்மீது திரும்பச் செய்யும். நமது பக்தியை எப்பொழுது ஏற்றுக் கொள்வார். 

மேலும் படிக்க: சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்

மாதந்தோறும் வரும் சிவராத்திரியைவிட இது பிரசித்திப் பெற்றது ஆகும். மனிதர்கள் நிலைத்து வாழ மனமானது அமைதி  பெற்று ஒரு நிலைத்து இருக்க வேண்டும். இம்முறை சிவராத்திரி பிரதோச நாளில் வருகின்றது. இரண்டும் ஒரு சேர மகாசிவராத்திரியை  கொண்டாடி மகாதேவரிடம் இருந்து மகத்துவமான அன்பை பெறலாம். உணவு, தூக்கம் ஆகிய இரண்டையும் விலக்கி சிவபெருமானை நோக்கி நாம் இருக்கும் இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தாக இருக்கும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன