ஊரடங்கிள் மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா..!

  • by
madurai meenakshi amman temple chithirai thiruvizha during lock down

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அன்று மதுரையில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை மிகக் கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவது மற்றும் கூட்டம் கூட்டமாக காவடி தூக்குவது மட்டும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஏராளமான செயல்களை பக்தர்கள் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் மக்களை பாதிக்காமல் இருப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசு ஊரடங்கை பின்பற்றி வருகிறது. இதனால் இந்த சித்திரை திருவிழாவை மக்கள் இல்லாமல் மதுரையில் கொண்டாட முடிவெடுத்துள்ளார்கள்.

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் இந்துக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும். இது அவர்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளை செய்து இந்த திருவிழாவை கொண்டாடுவார்கள். தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவை மிகக் கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டில் வைரஸ் பாதிப்பினால் சித்திரை திருவிழாவிற்கு தடை விதித்தார்கள். ஒரு சில குருக்களை வைத்து பூஜை செய்து இந்த சித்திரை திருவிழாவை அமைதியான முறையில் மதுரையில் கொண்டாட முடிவு எடுத்துள்ளார்கள்.

மேலும் படிக்க – மகாபாரதம் – பகுதி 3 – பாண்டவர்கள்..!

மிகப் பெரிய கொண்டாட்டம்

மதுரையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை கிட்டத்தட்ட ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனா  வைரஸ் பாதிப்பினால் ஏராளமான கட்டுப்பாடுடன் இவர்கள் இந்த ஆண்டு இந்தத் திருவிழாவைக் கொண்டாட உள்ளார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்து அலங்காரம் செய்வதற்கு மட்டும் ஒரு சில குருக்கள் கோவிலுக்கு செல்வார்கள், இதைத்தவிர்த்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் இந்த பூஜைக்கு அனுமதி இல்லை. இதுவரை இதுபோன்ற சூழ்நிலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிகழ்ந்ததில்லை, இருந்தும் வைரஸ் பாதிப்பால் இந்த திருவிழா தடைபட்டாலும் பூஜையில் தடைபடாமல் இருப்பதற்கு இந்த செயலை அறநிலைத்துறை உதவியுடன் குறுக்கலைகள் பூஜைகளை செய்ய உள்ளார்கள்.

கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டதற்கு மிக முக்கியமான காரணம் மக்களிடையே இருக்கும் கடவுள் நம்பிக்கைதான். ஒவ்வொரு மதத்தினரும் இந்த நிலை மோசமாக செல்லக்கூடாது என்பதற்காக தங்கள் கடவுளை அவர்கள் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தார்கள். இதன் மூலமாகவே ஒரு சிலருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியது. எனவே இதை அனைவரும் கருத்தில்கொண்டு மக்களாகிய நாம் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றி அழிக்க முடியும். அதை தவிர்த்து இதுபோன்ற விழாக்களில் கலந்து கொண்டு பூஜை செய்தால் இதற்கு தீர்வு இருக்காது. எனவே மக்கள் அனைவரும் உங்கள் நம்பிக்கைகளை உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் காண்பித்து இந்த சித்திரை திருவிழாவை வீட்டில் இருந்தபடி கொண்டாடுங்கள்.

மேலும் படிக்க – பீஜ மந்திரத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

கடந்த சில மாதங்களாகவே அனைத்து விதமான வழிபாட்டு தலங்களும் முடங்கிக் கிடக்கிறது. இதன் மூலமாகவே இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பரவுவதை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது. எனவே இதுவரை ஒத்துழைத்த அனைத்து மக்களும் இனி வரப்போகும் காலங்களில் இது போல் கூட்டம் அதிகமாக சேரும் இடங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன