அலங்காநல்லூரில் சரவெடியாய் ஜல்லிக்கட்டு தெறிக்கின்றது

  • by

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை  கோலகல கொண்டாட்டத்தில் மக்கள் திளைத்துக் கொண்டிருக்க  ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் தொடங்கி நடைபெறுகின்றது. 

தொடங்கியது ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுகளின் போட்டிகள் ஏற்கனவே கடந்த இரண்டு  தினங்களாக பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கடடு தொடங்கி நடைபெற்று சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. 

அலங்காநல்லூல் ஜல்லிக்கட்டில் மொத்தம்  700 காளைகள், 921 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்று அசத்துகின்றனர். போட்டி துவங்கும் முன்னர் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தபின் வீரர்கள் களத்தில் இறங்க ஆயுத்தமானார்கள்.  ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கோயில் காளைகளுக்கு மரியாதை செய்தபின் அதனை தொடர்ந்து . கலெக்டர் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் அதனை ஏற்று கொண்டனர்.

மேலும் படிக்க – காணும் பொங்கல் சிறப்புகள் கண்டு உண்டு மகிழ வேண்டும்!

அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.  கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து அனுப்பி வைக்கப்பட்டது.  

தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

அலாங்கா நல்லூர் ஜல்லிக்கட்டினை காண வெளிநாட்டிற்கான தனி கேலரி  அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டான ஒரு சுற்றுக்கு 75 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவது விதிமுறையாகும்.

 
தெறிக்கவிடும் காளை:

ஜல்லிக்கட்டில் வீரர்களை  ஓட வைக்கும் காளைக்களுக்கு  வீரர்களுக்கு முதல்பரிசாக கார் வழங்கப்படுகின்றது. அதே போல்  அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு கார் வழங்கப்படுகின்றது. அழகர் கோவிலை சேர்ந்த கார்திக் 12  காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மேலும் படிக்க – பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் பொங்கல்!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகளான சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் களத்தில் நின்று விளையாடியது. எந்த  வீரரையும் நெருங்க விடாமல் களத்தில் கெத்து காட்டியது. அந்த மாடுகளை எந்த வீரரும் பிடிக்க முடியாததால் மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிறந்த மாடுபிடி வீரர்:

சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன