மார்கழி மாத இறுதிநாள் பழையன கழிந்தது!

  • by

தமிழ் மாதத்தில் மிகவும் குளிர்ச்சி உடைய மாதம் மார்கழி மாதம், அதுமட்டுமல்லாமல் மார்கழி மாதம் என்பது இறைவனுக்கு உகந்த மாதம் என்பார்கள். வருடத்தின் முடிவில் வருவதினால் இந்த மாதத்தை சிறப்பானதாக போற்றி அதிகாலை முதல் எழுந்து பஜனைகள் மூலமாக கடவுளைப் போற்றிப் பாடுவார்கள். மார்கழி மாதத்தில் எல்லா கோவில்களிலும் அதிகாலையில் திறந்து சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள். இதைத்தவிர்த்து மக்களுக்கான பிரார்த்தனை மற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளும் செய்து, மார்கழி மாதம் தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஏகப்பட்ட கன்னிப் பெண்கள் விரதமிருந்து பிரார்த்தனை செய்வார்கள்.

மார்கழி மாத நோன்பு என்பது இந்து பெண்கள் கடைப்பிடிக்கும் விரதமாகும். மார்கழி மாதம் முழுவதும் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள் அதிலும் இறுதி நாளில் இந்த விரதம் சிறப்புடையதாக அமைகிறது. இந்நாளில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு சுத்தமான ஆடையை அணிந்து அவரவர்களுக்கு விருப்பமான கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்வார்கள்.

மேலும் படிக்க – சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்


திருப்பாவை:

ஆண்டாள் எழுதிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி கன்னிப் பெண்கள் அதிகாலையில் பிற கன்னிப் பெண்களுடன் இத்துயில்களைப் பாடி அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வார்கள்.

திருப்பாவை பாசுரத்தின் பாடலில் சொல்லி இருப்பதைப் போல் கன்னிப்பெண்கள் நோம்பு சமயங்களில் நெய் மற்றும் பால் பொருட்களை உண்ணாமல், கண்ணுக்கு மை இடுதல், தலை சீவுதல், மலர்களைச் சூடிக் கொள்ளுதல் போன்ற அழகு மேற்கொள்ளும் எந்த வேலையும் செய்யாமல், எந்த ஒரு கெட்ட எண்ணங்களை பற்றி சிந்திக்காமல் நல்லதை மட்டும் செய்து இறைவனை முழுமையாக மனதில் நினைத்துக் கொண்டு செய்யப்படும் நோன்பு தான் இந்த மார்கழி மாத சிறப்பு நோன்பு.


திருவாதிரை நோன்பு

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திற்கு 9 நாட்களுக்கு முன்பு இந்துக்களால் தொடங்கப்படும் நோன்பு தான் திருவெண்பா நோன்பு. இந்த நோன்பை கன்னிப் பெண்கள் கூடுதலாக கடைபிடிப்பார்கள். இதற்காக அதிகாலை முதல் இறைவனை துதித்து அன்று முழுவதும் ஒரு நேர உணவாக அவித்த உணவை மட்டும் உண்பார்கள். காலையில் கோவிலில் சிவகாமியுடன் இருக்கும் நடராஜரை கண்டு அங்கு நடக்கும் வழிபாடுகளில் கலந்து கொள்வார்கள்.

திருவெண்பா நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்தின் நன்னாளில் மேற்கொள்ளும் நோன்பாகும். மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு பத்துத் திங்கள் திருவெம்பா நோன்பினை மேற்கொள்கிறார்கள். இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாககும், இதனால் சிவபெருமானை அதிரைக்கு முதல்வன் என்றும், ஆருத்திரர் என்றும் கூறுவார்கள். இந்த நோன்பை மிகச் சிறப்பு மிக்க நோன்பாக மார்கழி மாதங்கள் கன்னிப்பெண்கள் மற்றும் பிற பக்தர்கள் மேற்கொள்வார்கள். இந்த சிறப்பு நாள் மார்கழி மாத கடைசி நாளில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.

மேலும் படிக்க – காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

கன்னிப்பெண்கள் நலனுக்காகவும், குடும்பத்தில் சச்சரவு இல்லாத சந்தோஷத்திற்காகவும், கடவுள் மேல் வைத்திருக்கும் அன்பிற்காகவும், இந்த மார்கழி நோன்புகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நமது உடல் மற்றும் மனம் வலிமை அடையும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன