மா கா பா ஆனந்தின் பப்ஜி திட்டங்கள்..!

  • by
Ma Ka Pa anand tweet on pubg

ஊரடங்கு சமயத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பொழுதை கழிக்க பெரிதாக உதவுவது இணையதள விளையாட்டுகள். அதிலும் பப்ஜி மற்றும் ஃபிரீ ஃபால் என்ற விளையாட்டை உலகில் உள்ள அதிகமான மக்கள் தற்போது விளையாடி வருகிறார்கள். இச்சமயத்தில் பப்ஜி விளையாட்டை உலகக் கோப்பையைப் போல் நடத்தி வருகிறார்கள். இதில் தென்னிந்தியாவில் உள்ள அணியில் “டீம் தமிழன்” என்ற அணியும் இடம்பெற்றிருந்தது.

டீம் தமிழன்

அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்த அணி பம்ஜி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இந்த அணியின் வளர்ச்சிக்கு மா கா பா ஆனந்தும் உதவியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விளையாட்டின் 5 மணி நேர காணொளியை பகிர்ந்துள்ளார். உலகம் முழுக்க இருக்கும் சிறந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் அணிகளை பதிவு செய்து அதில் ஐந்து நபர்கள் என இந்த போட்டியில் பங்குபெற்ற விளையாடி வருகிறார்கள்.

மேலும் படிக்க – டெண்டிங்காகும் சிவகார்த்திகேயன் ஹஸ்டாக்..!

மா கா பா ஆனந்த்

மக்கள் அனைவரும் வீட்டில் தனிமையில் கஷ்டப்படும் சூழ்நிலையில் இது போன்ற விளையாட்டுகளில் பங்குபொற்றும் அல்லது விளையாட்டுகளை பார்த்தும் தங்கள் நேரத்தை கழிக்கலாம் என சிந்தனையை மாகாபா ஆனந்த் அவர்கள் கொடுத்துள்ளார். இதைத் தவிர்த்து இதுபோன்ற ஒரு விளையாட்டுப் போட்டியை தான் தொடங்க உள்ளதாக ஒரு சில கருத்துக்கள் வெளியாகி வருகிறது. இதனால் வீட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் தங்களால் முடிந்த தொகையை செலுத்தி இதில் பங்கு பெற்று தங்கள் நேரத்தை விரைவாக கழிப்பார்கள். அதைத் தவிர்த்து வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் அளிக்கவும் உள்ளார்கள். இதன் மூலமாக சேகரிக்கப்படும் தொகைகளை சமூக சேவைக்காக பயன்படுத்த உள்ளார்கள்.

கொரோனா பாடல்

இதேபோல் சாண்டி மாஸ்டர் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று, இப்போது மிகப் பெரிய இடத்திற்கு சென்றுள்ளார். இவர் கொரோனா வைரஸிற்கான ஒரு பாடலை எழுதி உள்ளார். இந்த பாடலை ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியிட்ட இந்த பாடலும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த பாடலில் ஷெரின், சாண்டி மாஸ்டர், மா கா பா ஆனந்த், முகன், சாந்தனு மற்றும் சரவணன் போன்றவர்கள் நடித்துள்ளார்கள். இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் கொரோனா வைரஸிற்கான விழிப்புணர்வாக அமைந்துள்ளது. சீனர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட உணவுகளினால் இப்போது உலகில் இருக்கும் அனைத்து விதமான மக்களும் கை கழுவவும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது. எனவே அவர்களை கண்டித்தும் மக்கள் இதை சரியாக பின் தொடர வேண்டும் என்ற அறிவுரையையும் இந்த பாடல் நமக்கு கூறியிருக்கிறது.

மேலும் படிக்க – ஒடிடி வெளியீடு சர்ச்சையில் தியேட்டர் உரிமையாளர்கள்..!

கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக நம் நாட்டில் இருந்து விலகும் வரை இதுபோன்ற ஊக்கமளிக்கும் காணொளிகள் மற்றும் போட்டிகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். இதன் மூலமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று தங்கள் மனநிலையை எப்போதும் அமைதியாக வைத்துக்கொள்ள முடியும். உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்த வைரஸ் தொற்றுடன் வாழும் சூழ்நிலை நிகழ்ந்துள்ளதால் அதை ஏற்றுக்கொண்டு உங்களையும் அதற்க்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன