சந்திர கிரகண தோசம் பெறும் நட்சத்திரங்கள்

  • by

இந்தாண்டில் இன்று தொடங்கும்  சந்திரகிரகண நேரம் இரவு 10. 37 மணிக்கு தொடங்கி   ஜனவரி 11 அதிகாலை 2. 42 மணி வரை சந்திர கிரகண நேரம் உள்ளது. இதனை காண அறிவியல் ரீதியாக முயற்சிக்க வேண்டாம். 

இந்த நாளில் நேரத்தில் நீங்கள் நினைத்தது நடக்கச் செய்ய  நினைத்தை அடைந்த மாதிரியான ஒரு கற்பனை செய்து இரவு 10.30 மணி வாக்கில் தனி அறையில் அமர்ந்து உங்கள் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்துங்கள். 

சந்திர கிரகண நேரத்தில் பொதுவாக உடல் மற்றும்  பூமியில் அதிக மாற்றங்கள் ஏற்படும். புவியில் காந்த   அலைகள் அதிகரித்து காணப்படும். நமது எண்ணங்கள் நிறைவேற   ஒருநிலைப்படுத்தி ஒரு நோட்டில் நினைத்தது நடந்தது போல் கற்பனை செய்து அதனை உணர்வு பூர்வமாக எழுத வேண்டும். 

மேலும் படிக்க – இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

எழுதியதை உணர்வு பூர்வமாக   நடந்ததாக படிக்க வேண்டும். அதன்படி எழுதுதல், படித்தல் ஆகியவற்றை செய்தால் நினைத்தது நடக்கும்.

சிவனின் ருத்ர மந்தரம்: 

 ஆருத்ரா தரிசனம் நடக்கும் இந்த  நாளில் சந்திர கிரகண நேரத்தில் 4 மணி நேரம் கிழே குறிப்பிடப்பட்டுள்ள சிவ மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் நாம் நினைத்தது நடக்கும், மந்திரம் சிக்தியாகும் சிவனின் பரிபூரணமான அருள் கிடைக்கும்.  4 மணி நேரம் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அதிகபலன் கிடைக்கும். அல்லது ருத்ர மந்திரத்தை பத்தாயிரம் முறையாவது பிரயோகியுங்கள் சந்திர கிரகண நேரத்தில் உச்சரிக்கும் ஒவ்வொரு மந்திரங்களும் சக்தி வாய்ந்தது ஆகும்.

ஓம் நமோ  பகவதே ருத்ரே

சிவனின் ருத்ர மந்திரமான  ஓம் நமோ பகவதே ருத்ரே சக்தி வாய்ந்தது சிவ பெருமானுக்கு உகந்தது ஆகும். 

சந்திர கிரகணத்தில்  தோசம் அடையும் நட்சத்திரங்கள்: 

உலகின் மிகமுக்கியமான இந்த வருடத்தில் துவக்கத்தில் வரும்  நீண்ட நேரம் இருக்கும் சந்திரகிரகணத்தில் 27 நட்சத்திரக்காரர்களில் எட்டு  நட்சத்திரக்காரர்களுக்கு பாதிப்பு இருக்கும். கிருத்திகை, ரோகிணி, உத்திரம், அஷ்டம், பூராடம்,  உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சதிரக்காரர்களுக்கு இதன் பாதிப்பு இருக்கும். 

செய்ய வேண்டிய பரிகாரங்கள்: 

 சந்திர கிரகணத்தால் பாதிப்பில் இருந்து மீள 8 நட்சத்திரக்காரர்கள் சந்திர பகவானுக்கு உரிய மந்திரங்களை நாம் உச்சரிக்க வேண்டும்.  இதனை செய்யும் பொழுது பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படுவோம். இந்த நாளில் அரிசி தானம் செய்யும் பொழுது அதிகபடியான சந்திரர் அருள் கிடைக்க பெறலாம். அண்ணதானம்  செய்வது பச்சிகளுக்கு அரிசி வைப்பது சிறந்த தானம் ஆகும். 

மேலும் படிக்க – சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்

செய்வினையை நீக்கும் சந்திர கிரகணம்: 

இந்த சந்திர கிரகணத்தில் நாம்  உச்சரிக்கும் காளி, சிவ மந்திரங்கள் நமக்கு மிகுந்த அளவில் சிக்தியாக இருக்கும். பூமியை சந்திரன் மறைக்கும் இந்நாளில் சந்திரனுடன்  தொடர்புடைய மனசை பாதிக்கும்., சந்திர கிரகண நேரத்தில் பக்திபூர்வமாக இருந்தால் சிறப்பானது ஆகும். குலத்திற்கான மந்திரங்கள், குரு மந்திரங்கள் உச்சாடணம் செய்வதால் அதற்கான பலன் கிடைக்கப் பெற்று செய்வினையை  நீக்கவும் செய்கின்றது. சந்திர கிரகணத்தின் பொழுது தண்ணீரை ஒரு கிளாஸில் வைத்து தண்ணீர் மீது தர்ப்பை வைத்து 100 முறை உச்சரிக்கவும்.

ஓம் யாஹா ராஹா லாஹா 

த்யாஜா தூரதா ஸ்வாஹா

முக்கிய மந்திரத்தை சந்திர கிரகணத்தில் உச்சரிக்கவும். 

சந்திர கிரகணத்தில் கடைபிடிக்க வேண்டியது: 

தண்ணீர் தொட்டியில் தர்ப்பை இட்டு வைக்கவும். 

ததி சங்க தூஷாராம் ஷீரோதார்ணவ ஸ்தம்பம் 

நயாமி சசினம் ஶோமம்  சம்போர் மகுடம் பூஷணம்  

போன்ற  மந்திரங்கள் உச்சரித்தால் சிறப்பான பலங்கள்  கிடைக்கப் பெறலாம். அவ்வ்வாறே சந்திரகிரகண காலத்தில்  கர்பிணி பெண்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன