காதலா வேலையா வாழ்க்கைக்கு இரண்டுமே அவசியம்..!

  • by
love or career , which is important for life

வாழ்க்கைக்கு எது அவசியம் என்ற பட்டிமன்றம் அமைத்தால் ஒரு சிலர் காதல் என்பார்கள், மற்றவர்கள் வேலை என்பார்கள். ஆனால் ஓர் முழுமையான வாழ்க்கைக்கு இரண்டுமே தேவை. காதல் மட்டும் வைத்துக் கொண்டு நம்மால் வாழ முடியாது, அதே போல் வேலையை மட்டுமே செய்து கொண்டு அன்பைப் பரிமாறாமல் நம்மால் வாழ முடியாது.

காதல் வாழ்க்கை

வாழ்க்கையை வாழ்வதற்கு மிக முக்கியமான ஒன்று தான் காதல். உங்களைச் சுற்றி உள்ள எல்லாப் பொருட்களையும், உறவுகளையும், அழகையும் உணரச் செய்வதுதான் இந்த காதல். எப்போது ஒருவர் காதலின் வலையில் விடுகிறாரோ அப்போதிலிருந்து தான் அவர் ஒரு முழு மனிதராக உருவாகிறார். இப்படி உங்களுக்கு எல்லாவிதமான பலத்தை தரக்கூடிய இந்த காதலை மட்டும் சார்பு நம்மால் வாழ முடியாது. ஏனென்றால் காதல் பரிமாறுவதற்கு நமக்கு ஒரு துணை வேண்டும், அந்த துணையுடன் நம்முடைய வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு பணம் தேவை. அந்த பணத்தை சம்பாதிக்க நமக்கு வேலை அல்லது தொழில் அவசியமாகிறது. இது இல்லாமல் நீங்கள் காதலை மட்டும் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியாது. அப்படி நீங்கள் வாழ முயற்சித்தாலும் உங்கள் துணையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிச்சயம் உங்களுக்கு பணம் தேவை, அதை பெறுவதற்கு வேலை அவசியமாகிறது.

மேலும் படிக்க – பழங்காலத் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் அவர்களின் ஆயுதங்கள்..!

வேலை மற்றும் தொழில்

நீங்கள் சிறுவயதிலிருந்து எல்லாப் பாடத்திலும் முதல் மதிப்பெண் பெறுபவராக இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வேலை செய்வீர்கள். இந்த இடத்தை அடைவதற்கு நீங்கள் என்னவெல்லாம் இழுந்தீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். அதில் நீங்கள் காதலை இழந்திருந்தால் இப்போது நீங்கள் பெற்றிருக்கும் வெற்றி முழுமையான வெற்றி அல்ல, ஏனென்றால் ஒரு மனிதனின் தரத்தையும், குணத்தையும் முடிவு செய்வது அவனின் காதல் வாழ்க்கைதான். எனவே காதல் வாழ்க்கை இல்லாத வெற்றியை வெற்றியாக கருத முடியாது. இதுவரை நீங்கள் ஏராளமான நபர்களை சந்தித்து இருக்கலாம். அவர்கள் மூலமாக உங்களின் அறிவு மற்றும் ஆற்றலும் அதிகரித்து இருக்கலாம். ஆனால் காதல் இல்லாமல் இது போன்ற அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையை இறுதிவரை மகிழ்ச்சியாக கொண்டு செல்லாது. எனவே வேலை மட்டும் தொழில்களின் பின்னால் செல்பவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் சிறிய இடைவெளிவிட்டு, காதலுக்களான பகுதியையும் இணைத்து விடுங்கள்.

உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்

காதலிக்கும் போது எல்லாமே இனிமையாக இருக்கும், ஆனால் எப்போது அந்த காதல் திருமணத்திற்கு செல்கிறதோ அப்போது வேலை என்ற விஷயம் அதற்குள் நுழையும். அச்சமயங்களில் புனிதமான காதல், உண்மையான காதல் என்று வசனங்களை பேசாமல் உங்களுக்கான வேலையை தேர்ந்தெடுத்து அதை செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் காதல் வெற்றி அடையாது. அதேபோல் வேலையின் பின்னால் சென்று, என்னுடைய லட்சியம் இதுதான், என்னுடைய வாழ்க்கை இதுதானென்று மாயைக்குள் செல்லாமல் உங்கள் காதலை தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் திருமணத்திற்கு நுழைந்து உங்கள் மனைவியை காதலியுங்கள்.

மேலும் படிக்க – நாடே முடக்கத்தில் இருக்கும் பொழுது உங்கள் பணத்தை எப்படி செலவு செய்வது..!

நம்முடைய வாழ்க்கை வாழ்வதற்கு அந்த வாழ்வை இன்னும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறுவயதில் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டு, அதை பருவத்தை சோதித்து, முதிர்ச்சி நிலையை அடைகிறோம். அச்சமயங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் நன்மைக்காகவும், உங்களை சார்ந்து வாழ்பவர்களின் வாழ்க்கைக்காகவும் உதவும்படி இருக்கவேண்டும். அதை தவிர்த்து ஒரு சில தவறான முடிவுகளில் உங்கள் வாழ்க்கை தவறான பாதைக்கு கொண்டு செல்லாதீர்கள். எனவே வாழ்க்கையின் சரியான பாதை கொண்டாட்டங்களுடன் இருந்ததாக இருக்க வேண்டும். அதற்கு வேலை மற்றும் காதல் இரண்டும் அவசியமாகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன