உணர்வுகளின் சங்கமத்தில் உதிப்பது காதல்

  • by

புரிதலில் உள்ள காதல்: 

ஆணும் பெண்ணும் பார்த்தவுடன் வரும் காதல் குறித்து நாம் நிறைய படித்திருப்போம் பார்த்திருப்போம். ஆனால் புரிதலுள் உள்ள காதல் வேறு தினமும் பார்த்து பரஸ்பர பழக்கத்தின்பின் புரிதல்களாக வருவது காதல் வேறுவிதமானது ஆகும். வாழ்வில் எதார்த்தமான உறவுகளுக்கு என்றும் காதல் என்பது மிகுந்த சாதரணமாக வந்துவிடும் ஆனால் அவர்கள்  அதனை கையாளும் விதம் என்பதுதான் முக்கியமானது ஆகும்.

மேலும் படிக்க: எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

காதலில் இருவர்: 

 ஆறு மாதம்  முதல் ஒரு வருடம் வரை  ஒருவரை புரிந்தபின் வரும் காதல் என்பது  சிறப்பானது ஆகும். அனைவருக்கும் அமையாது என்பதுதான் உண்மை ஆகும். உங்களிடம் உள்ள தெளிவுதான் உங்களை வாழ்வின் ஒரு இடத்திற்கு இட்டுச் செல்லும்.  

வாழ்வில் என்றும்  சிறப்பானத் தருணம் என்பது  காதலில் இருக்கும் காலம் ஆகும். உங்களிடம் அது இருந்தால்   விண்ணையும் மண்ணையும் வெல்லும் திறனுடன் இருப்பீர்கள். என்னதான்  நாம் வாழ்க்கை நகர்வானது இருந்தாலும் சுவாரசியம் என்பது என்னவோ காதலில் மட்டும்தான் இருக்கும். கடித காலம் ஆனாலும் தற்பொழுதைய சுமார்ட் போன் காலம்  ஆனாலும் சரி காதலர்களுக்கான எதிர்பார்ப்புகள், அப்டேட்கள் எல்லாம் அவசியமானதாக இருக்கின்றது. இன்று வீடியோ கால்கள் எல்லாம் எளிதாகிவிட்டது ஆகையால் காதலில் சுவாரசியங்களும் அதன் சுபாவங்களும் மாறுபட்டு காணப்படுகின்றன. 

காதல் உணர்வு

முறையான பரிமாற்றம்: 

இன்றைய காதலர்களுக்கு 24 மணி நேரத்தில்  12 மணி நேரமும் காதலிப்பவர்களை தொடர்பு கொள்வது என்பது எளிதாக இருக்கின்றது. எல்லாம் டிஜிட்டல் மயம் என்பதால் உங்கள் விருப்பத்துக்குரியவர் இருப்பிடமும் எளிதில் அறிய முடியும். இது போன்ற அனைத்து வசதிகளும் காதலர்களுக்கு எளிதாக இருப்பதால் அவர்க்ளுக்கான இடைவெளி குறைவு ஆகையால் பரிமாற்றங்கள் என்பது அதிகரித்து காணபடுகின்றது. ஆகையால் உங்கள் அன்புக்குரியவர் எங்கு உள்ளார், என்ன செய்கின்றார் என அனைத்து தகவல்களும் நமக்கு அத்துப்படியாக இருக்கின்றது. 

காதல் உணர்வு

ஏன் சிக்கல்: 

நாம் ஒருவர்   மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பானது அவர்களை புரிய வைக்கும். இந்த புரிதலில் இருக்கும்  காதலானது ஊடலை எளிதாக கடக்க வைக்கும். இது உங்கள் காதலி அதிக அடமாக இருந்தாலும், அல்லது உங்கள் காதலர் அதிக கோபக்காரர் மற்றும் பொறுமை அற்றவராக இருந்தாலும் செயல்பட வைக்கும். அப்பொழுது   காதலில் இனிமை மட்டும் இருக்காது. ஆனால் முதிர்ச்சியற்ற உணர்வுகள் கொண்ட காதலர்கள் சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் சண்டை இடுவார்கள் குழந்தை தனமான போக்குகள் இருவருக்கும் அதிகமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு அது எப்பொழுதும்  பொருந்தாது. உங்கள் காதலில் தரம் இருக்கின்றதா முதலில் நீங்கள் உண்மையாக உங்கள் அன்புக்குரியவரை நேசிக்கின்றீர்களா அல்லது உங்கள் உணர்வு என்பது எது என பரிசோதியுங்கள் பின் தெரிந்து கொள்ளவும். பரிசோதித்து குறைகள் உங்களிடம் எதேனும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக்  கொண்டால் காதல் சுகமாகும். சுய பரிசோதனை என்பது வாழ்வில் அவசியமானது ஆகும். 

மேலும் படிக்க: எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

காதல் உணர்வு

ஐந்து நிமிடம்  அமைதியாக பேசவும்: 

காதலில் மகிழ்ச்சியோ துக்கமோ எதுவானாலும் ஐந்து முதல் பத்து நிமிடம் அனைத்து உணர்வுகளையும் ஆற போடுங்கள் பிறகு செயல்படும் பொழுது உணர்விலிருந்து செயல்படாமல் அறிவாக செயல்படுவோம்.  சுயபரிசோதனை செய்யும் பொழுது உங்கள் காதல் தரம் தெரியும். அநாவசியமாக பொய்யான மற்றும் பொழுதுபோக்கான காதலை வளர்க்காதீர்கள் உணர்வுகள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதனை  காக்கவிட்டால் பரவாயில்லை ஆனால் காயப்படுத்தாமல் இருப்பது சிறந்தது ஆகும். இன்றைய கல்லுரி வயதில் காதல் எதற்கெடுத்தாலும் காதல் எதுவும் தவறில்லை என்ற போக்கு நிகழ்கின்றது இது அவ்வளவு சரியான போக்கை எதிர்காலத்தில் உருவாக்காது. நாம் ஒரு மனதில் எதை விதை களைக்கின்றோமோ காலம் நமது மனதில் நிச்சயம் நம்மை வைத்து அறுவடை செய்ய வைக்கும். 

மேலும் படிக்க: காதலில் நீங்கள் எந்த வகை என தெரிந்து காதலியுங்கள் !

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன