கட்டாயப்படுத்தி வருவது காதல் அல்ல..!

  • by
love cannot be forced

உண்மையில் காதல் என்றால் என்ன, ஒரு ஆண் பெண்ணின் அழகை பார்த்தவுடன் தோன்றுவது காதலா.? அல்லது ஒரு பெண் ஆணின் எதிர் காலத்தை கணக்கிட்டு அதனால் ஏற்படுவது காதலா.? உண்மையான காதல் ஒருவரை துன்புறுத்தியும், வற்புறுத்தியும் தோன்றுவதில்லை ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு தன்னை அறியாமல் பிறரை பற்றி சிந்திக்கும் தருணம் எப்போது வருகிறதோ அதுதான் உண்மையான காதலாக பார்க்கப்படுகிறது. காதல் உண்மையில் உடல் சார்ந்ததா அல்லது மனம் சார்ந்ததா இதை சரியாக புரிந்துகொள்ளாமல் உண்டாகும் காதல் விரைவில் முடிவுக்கு வருகிறது.

சினிமா காதல்

சினிமாவில் தோன்றும் கதாநாயகன் செய்வது அனைத்தும் சரி என்ற மன நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஒரு கதாநாயகன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவளை பின் தொடர்ந்து துன்புறுத்து, ஏராளமான பிரச்சனையில் சிக்க வைத்து அவளை காதலிக்கிறான். வேறு வழியில்லாமல் அவளும் அவனை காதலிக்க தொடங்குகிறாள், இப்படி காதல் உணர்வு இல்லாத ஒரு பெண்ணின் மனதை குழப்பிக் காதல் உணர்வை தூண்டி உண்டாகும் காதல் தான் இப்போது இருக்கும் இளைய சமுதாயம் பின் தொடர்ந்து வருகிறது. உண்மையில் காதல் என்பது இருவருக்குள்ளும் தோன்ற வேண்டும், அது எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் அவர்கள் முழுமையாக காதலிக்கத் தொடங்குகிறார்கள். அதைத் தொடர்ந்து அந்த காதல் சரியாக சென்றால் மட்டுமே திருமணம் செய்து கொள்கிறார்கள். இல்லை எனில் அந்த காதல் முடிவுக்கு வருகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உண்மையான கதாநாயகன் என்றால் காதலை உண்டாக்குங்கள், அதைத் தவிர்த்து கட்டாயப்படுத்தாதீர்கள்.

மேலும் படிக்க – உங்கள் காதல் வெற்றி அடைய இதை செய்யுங்கள்..!

இச்சையில் முடியும் காதல்

தோற்றத்தை வைத்து உண்டாகும் காதல் இறுதியில் இச்சையில்தான் முடிகிறது. சாதாரணமாக ஆண் பெண் இருவருக்கும் ஏராளமான ஈர்ப்புகள் இருக்கும். இயற்கையாகவே ஒரு ஆண் ஒரு பெண்ணை தழுவும் சுபாவம் கொண்டவன், அதேபோல் அதை அனுபவிக்கும் எண்ணமும் பெண்களுக்கு உண்டு. இருந்தும் இதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் உங்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்ற அச்சத்தினால் ஒரு சிலர் இதிலிருந்து விலகி இருப்பார்கள். ஆனால் ஆண்களின் தூண்டுதலினால் பெண்களுக்கு வேறு வழி இல்லாமல் இது போன்ற அற்ப சந்தோஷங்களில் இணைகிறார்கள். ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல் காதல் உணர்வுகளை தப்பாக எடுத்துக் கொள்ளும் ஒரு சில காதலர்கள் இதுபோல் இணைந்து தங்கள் காதலை கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்க்கையையும் அழித்து வருகிறார்கள்.

உண்மையான காதல்

ஒரு பெண்ணை பார்த்தவுடன் தோன்றுவது உடல் ரீதியான காதல், இதனால் அந்தப் பெண் தோற்றம் ஒன்றே போதுமானது என்று எண்ணி ஒரு ஆண் அவளின் குணத்தை முழுமையாக பொறுத்துக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு உடல் தேவைகள் பூர்த்தி அடையும் பொழுது அவளை சகித்துக் கொள்ள முடியாமல் சண்டையிடுகிறான். இதை சற்றும் புரிந்துகொள்ளாத பெண்ணும் போட்டி போட்டுக்கொண்டு சண்டையில் ஈடுபடுகிறார்கள். இதன்மூலமாக இல்லற வாழ்க்கையில் காதல் முழுமையாக அழிந்து கடமைக்கு என்று வாழ்கிறார்கள். எனவே பதின் பருவத்தில் தோன்றும் காதலில் காமத்தை கலக்காதீர்கள், நீங்கள் எப்போது முதிர்ச்சி நிலை அடைகிறார்களோ அப்போது உங்கள் காதல் பரிமாற்றத்தை தொடருங்கள். காதலித்த சில நாட்களிலேயே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் ஒரு சிலவற்றை எதிர்பார்க்கும் போது அந்த காதலில் ஏகப்பட்ட கேள்விகள் தோன்றும். எனவே இது போல் இருக்கும் காதலர்களை முடிந்தவரை அருகில் அனுமதிக்காதீர்கள். ஒருவரை ஒருவர் அணைக்காமல் உங்கள் காதல் எத்தனை வருடங்கள் வருகிறதோ அதை பொருத்துதான் அது உண்மையான காதலாக மாறும்.

மேலும் படிக்க – எச்சரிக்கையாக இருங்கள் இது உண்மையான காதல் இல்லை..!

இயற்கையின் விதி

ஆண் பெண் இருவரும் இணைய வேண்டும் என்பதுதான் இயற்கையின் விதி, அதற்கேற்ப உணர்வுகளைத்தான் நாம் கொண்டிருக்கிறோம். எனவே அந்த உணர்வுகளுக்கு முடிந்தவரை இடம் கொடுக்காமல் அன்பை வளருங்கள். எத்தனை ஆண்டுகள் நீங்கள் காதலிக்கிறீர்கள், உங்களுக்கு இடையே எத்தனை ரகசியங்கள் இருக்கிறது, இதை பொறுத்து தான் உங்கள் உண்மையான காதல் தீர்மானிக்கப்படுகிறது. காதலினால் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே. எனவே ஒரு பெண் உண்மையான காதல் எது வென்று உணர்ந்தாலே அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை ஆரம்பத்திலேயே தடுக்கப்படும். எனவே உங்கள் காதலின் எதிர்ப்பார்ப்பை கூர்ந்து கவனியுங்கள், அது எதில் முடிகிறதோ அதற்காக தான் உங்கள் காதல் தோன்றியது எனவே இதை நன்கு அறிந்து ஆண் பெண் இருவரும் சமுதாயத்தை மேம்படுத்துவதற்க்கு காதலை சரியாக பயன்படுத்துங்கள்.

காதல் என்ற பெயரில் இணையதளத்தில் ஏராளமான காணொளிகள் இருக்கிறது. இதுபோன்ற காணொளிகள் அனைத்தும் காதல் என்ற பெயரினால் எடுக்கப்பட்டது. இது போல் உங்கள் வாழ்க்கையும் இணையதளத்தில் பதிவனால் உங்கள் எதிர்காலம் என்னவாகும் என சிந்தியுங்கள். இதைத் தவிர்த்து அற்ப சந்தோஷத்திற்காக உண்டாகும் காதலை ஆரம்பத்தில் தடுத்து, அதற்கான நாள் வரும் வரை காத்திருங்கள். எனவே ஆண் பெண் இருவரும் காதலையும், காதலினால் உண்டாகும் உணர்வுகளையும் மதித்து வாழ வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன