செவ்வாயில் முருகனின் அருள் பெற பின்பற்றுங்கள்

  • by

செவ்வாய் அன்று முருகனுக்கு வழிபாடு செய்வது உகந்தது ஆகும். செவ்வாய் கிழமையானது .முருகனுக்கும் அம்மனுக்கும் உரிய நாள் ஆகும். அந்த நாளில் நாம் வேண்டியது அனைத்து பெற  விரதம் இருக்கலாம். செவ்வாய் கிழமைகளில் அனுமருக்கு வழிபாடுகள் நடத்துவது வழக்கில் உள்ளது. 

செவ்வாய் கிழமைகளில் சுப நிகழ்வுகள் நடத்துவது தமிழ்நாட்டில் வழக்கில் இல்லை . செவ்வாய்க்கு உரியவர் முருகர் அவரை எண்ணி வேண்டியதை பெறலாம். தொடர்ந்து செவ்வாயில் முருகனை வழிபடுதல் சிறந்தது ஆகும். செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் முருகப் பெருமான் பூமா தேவி வழிபாடு அவசியம் ஆகும். 
பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய் பகவான் ஆவார்.  செவ்வாயை கொண்டாடி பூமித்தாயின் அருள் பெறலாம். 

பூமாதேவியின் மகன்:

பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுவது  வழக்கில் உள்ளது அவ்வாறு நாமும் போற்றி வணங்கலாம்.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த சிவராத்திரி கொண்டாட்டங்கள்

. பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம்.

ராகு காலம்: 

செவ்வாயில்  துர்கை அம்மனுக்கு விளக்கு போடுவதுபோல் செவ்வாய்  ராகு காலத்தில் பெண்கள் முருகனை வழிபட்டு வந்தால் சீக்கிரம் திருமணம் நடைபெறும். தள்ளிப் போகும் திருமணங்கள் விரைவில் நடைபெறும். 

கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை   மேலோங்கச் செய்யும். செவ்வாய், வெள்ளியில் பெண்கள் தலைக்கு குளித்தல் சிறந்தது ஆகும்.  

செவ்வாய் கிழமை தோறும் காலையில் குளித்து முருகரை வணங்கி வந்து கந்த  சஷ்டி கவசம் பாடி வருதல் சிறப்பாகும். கந்த குரு கவசம் ஆகியவற்றை நாம் பின்பற்றி வரலாம்.  மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி ஆகும். 

மேலும் படிக்க – ராமர் பாலம் கற்பனையா அல்லது வரலாற்று உண்மையா?

செவ்வாய் தோசம் நீக்கும் முருகர்:

செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வர வேண்டியது ஆகும்.  விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன