இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும்..!

  • by
lockdown gets extended till may 3

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ், இந்தியாவை முழுமையாக பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் பாரதப்பிரதமர் கடந்த மூன்று வாரங்களுக்கு இந்தியாவை ஊரடங்கிற்க்குள் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். இதை சரியாக பின்தொடர்ந்தாலும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் எண்ணத்தில் மற்றும் மேலும் இதன் தாக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்கு நம்முடைய பாரத பிரதமர் இந்த ஊரடங்கை மேலும் 18 நாட்களுக்கு தொடரும் என்று அறிவித்துள்ளார்.

மாநில அரசு

ஊரடங்கை நீட்டிப்பதற்கான முடிவை முதலில் எடுத்த மாநிலமாக விளங்குவது ஒடிசா, அதைப் பின்தொடர்ந்து பஞ்சாப், தெலுங்கானா, உத்திர பிரதேஷ் போன்ற மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்தது. ஒரு சில மாநிலங்கள் விவசாயம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு விளக்கு அளித்துள்ளது. இதைதொடர்ந்து அவசர சேவைகளுக்காக பயணம் செய்வதற்கும் அனுமதியளித்துள்ளது. இருந்தும் இது அனைத்தும் முன்பை விட மிக அதிகமான கட்டுப்பாடுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது மாநில அரசுகள்.

மேலும் படிக்க – வைட்டமின் மற்றும் புரோட்டின்களில் இருக்கும் வித்தியாசம்..!

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசு ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு தொடர வேண்டும் என்ற கட்டளையை பிறப்பித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் கூறிவந்தார். அதே போல் புதுச்சேரி முதல்வரும் இதே முடிவை எடுத்துள்ளார். எனவே ஏப்ரல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் 144 சட்டம் நீடிக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று அறிவித்தார்.

மத்திய அரசு

ஏப்ரல் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொதுமக்களுக்கு காணொளி மூலமாக ஒரு சில செய்திகளை பரிமாறினார். அதில் அவர் இந்த ஊரடங்கு அடுத்த 18 நாட்களுக்கு தொடரும் என்று அறிவித்திருக்கிறார். இதைத் தவிர்த்து அத்தியாவசிய பயணத்தை மேற் கொள்பவர்கள் 21ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அடுத்த 5 நாட்களில் இந்த வைரஸ் தொற்று நோய் பரவல் குறைந்தால் எல்லாம் பழைய நிலைக்கு திரும்பும் என உத்தரவாதத்தையும் அளித்துள்ளார். ஆனால் இது அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால் இந்த ஊரடங்கை மிக மோசமான முறையில் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார்.

மக்கள் தவிப்பு

மக்களுக்கு சேவை செய்யும் வகையில் உணவுகளை ஏற்றுமதி செய்யும் அனைத்து வாகனங்களும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் ரயில் சேவை தொடங்கும் என்ற எண்ணத்தில் ஏராளமான மக்கள் தங்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவர்களுக்கான தெளிவான பதில் எதுவும் இன்னும் மத்திய அரசு அறிவிக்கப்படவில்லை. எனவே ஏராளமான மக்கள் முன்பதிவை மேற்கொண்டு, பயணத்தை மேற்கொள்ள வேண்டாமா என்ற பயத்தில் தவித்து வருகிறார்கள். ஊரடங்கு என்றவுடன் அனைத்து சேவைகளும் முடக்க வேண்டும். ஆனால் ரயில் சேவையின் முன்பதிவு மட்டும் இன்னும் முடக்காமல் அப்படியே வைத்துள்ளார்கள். எனவே மக்கள் இதற்கான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க – பசலைக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சலுகைகள்

தமிழக அரசு மேலும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவி தொகையை அளிக்க தீர்மானித்துள்ளது. அதைப்போல் ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் 15 கிலோ அரிசி என எல்லாவற்றம்றையும் கொடுத்து உதவுகிறது. மின்கட்டண சேவையையும், கட்டுவதற்கான கடைசி நாளை அதிகரித்துள்ளது. எனவே நாம் அடுத்த சில நாட்களுக்கு இதை சரியாக பின்பற்ற வேண்டும் என்பதே இம்மாநிலத்தில் வேண்டுகோள்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதினால் நமது நாட்டின் பொருளாதாரம் கிழ்நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இந்திய அரசு இதுபோன்ற செயல்களை செய்து வருகிறது. அதை உடனே மக்களாகிய நாம் அதற்கு ஒத்துழைத்து வெளியில் சுற்றாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன