அதிமதுரத்தை சித்த மருத்துவத்தில் ஏன் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்..!

  • by
Liquorice Health Benefits

உலக நாடுகளின் பார்வையில் அதிக மூலிகைகளைக் கொண்டுள்ள நாடாக இந்தியாவை தான் பார்க்கிறார்கள். இங்கே கிடைக்காத மூலிகைகளே கிடையாது, இதைத் தவிர்த்து சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற அனைத்தும் இங்கு உருவானதால் உலக மக்கள் அனைவரும் தங்கள் நாட்டிலும் இது போன்ற மூலிகை மருத்துவத்தை அதிகரிப்பதற்காக இந்தியாவில் தஞ்சம் அடைகிறார்கள். இப்படி இவர்கள் வருவதற்கான காரணம் என்னவென்றால் இங்கே கிடைக்கப்படும் பிரத்தியோகமான மூலிகைகள் அதில் மிக சிறந்த மற்றும் மற்ற நாடுகளில் கிடைக்காது மூலிகையாக கருதப்படுவது தான் இந்த அதிமதுரம்.

அதிமதுரத்தின் பயன்

சமீபத்தில் நாம் பயன்படுத்தக்கூடிய எல்லாம் மூலிகை பொருட்களிலும் இந்த அதிமதுரத்தின் பங்கு நிச்சயம் இருக்கும். மேலை நாடுகளில் உற்பத்தி செய்யும் ஷாம்பூ, பேஸ்ட், பல்பொடி மற்றும் நம் உணவுகளுக்கு பயன்படுத்தக் கூடிய ஏராளமான பொருட்களில் இந்த அதிமதுரம் நிச்சயம் இருக்கும். இதன் இலை, தண்டு மற்றும் வேர் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளும் மூலிகை குணத்தைக் கொண்டது. இதில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதினால் தான் இதை மருதம் என்கிறார்கள்.

மேலும் படிக்க – ஹோம்லியாக ஹோமியோ சிகிச்சை தரும் ஆசா லெனின்.!

மருத்துவப் பயன்பாடு

ஆயுர்வேத மருத்துவத்தை தவிர்த்து எல்லாம் மருத்துவத்திலும் இதன் பயன்கள் அதிகமாக இருக்கிறது. இதை மாத்திரைகளாகவும் மற்றும் மூலிகைகளாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். அதிமதுரத்தை எல்லா வைத்தியத்திற்கும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பொருத்து எடுத்துக் கொள்ளலாம். இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும், இதைக்கொண்டு மூலிகை கசாயம் செய்து தினமும் காலையில் குடிக்கலாம்.

உடல் உபாதைகள்

அதிமதுரத்தை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு உண்டாகும் கண் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அதை தவிர்த்து உடல் உஷ்ணத்தினால் உண்டாகும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களை முழுமையாக குணப்படுத்தும் தன்மை அதிமதூரத்திற்கு உண்டு. இரும்பல், தலைவலி மற்றும் உடல்களில் ஏற்படும் ஏதேனும் புண்கள் போன்ற அனைத்தையும் குணப்படுத்தும்.

வலிப்பு பிரச்சினைகள்

காக்கை வலிப்பு மற்றும் நரம்புகளின் மூலமாக ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் குணப்படுத்தும் தன்மை இந்த அதிமதுரத்தின் உண்டு. உடல் உஷ்ணத்தினால் மூக்கில் வடியும் ரத்தத்தை கட்டுப்படுத்தும். உடனடி தாகம், விக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும். காலையில் உணவு தவிர்ப்பவர்கள் வயிற்றில் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும், இதை குணப்படுத்துவதற்கு நீங்கள் அதிமதுரத்தை நீரில் கலந்து சாப்பிட்டால் போதும்.

மேலும் படிக்க – ஊரடங்கால் செலிபிரட்டிகள் சேட்டை இயற்கையின் ஆஸ்வாசம் அரங்கேற்றம்

சுகப்பிரசவம்

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவத்திற்கான அதிமதுரத்தை பயன்படுத்தலாம். அதிமதுரம் மற்றும் தேவாரம் என்ற இரண்டு மூலிகையும் இனைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் இவர்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும். அதேபோல் ஆண்மை சக்தி குறைவாக இருக்கும் ஆண்களுக்கு அதிமதுரம் உதவுகிறது. சிறுநீரகத் தொற்று, சிறுநீரக கல் போன்ற அனைத்தையும் தீர்த்து உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.

எனவே இரவு முழுவதும் அதிமதுரத்தை நீரில் ஊறவைத்து அதை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலமாக உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். தமிழகத்தில் மிக எளிதாக கிடைக்கப்படும் இந்த மூலிகையை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன