இளஞ்சிவப்பு இதழுக்கு இது அவசியமுங்க

  • by

இளஞ்சிவப்பு இதழ் பராமரிப்பு என்பது  நமக்கு அவசியம் ஆகும். நாம் உண்ணும் உணவில் இருக்கும் குறைபாடுகள், உடலில் இருந்த குறைப்பாடுகளால் உதடுகள் கருத்திருக்கலாம். சில சமயம்   சரியான பராமரிப்பு குறைவாக இருப்பதால் உதடுகள் கருத்து காணப்படும். சிகரெட் பிடிப்பதாலும் உதடுகள் கருத்து போகலாம். காரணம் சரியாக இருக்கும் பொழுது காரியம் கைகூடுவது எளிதாகும். 

உதடுகளின் வறட்சி:

உடலில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உதடுகள் வறட்சியாக  நிறம் மங்களாக இருக்கும். உடலில் ஆரோக்கியமற்ற நிலை காரணமாக உதடுகளில் நிறமங்கு வறட்சி மற்றும் பிளவுகள்  ஆகியவை காணப்படலாம். 

மேலும் படிக்க – டெட் செல்களை நீக்கி சருமம் அழகுப் பெற இதுபோதும்

சிகரெட்டை பிடிப்பதை  விட்டுவிடுதல் உதடு கருப்பை  போக்கச் செய்யும். அத்துடன் அதனைப் போக்க வீட்டில் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் எளிதாக உதட்டின் அழகைப் பராமரிக்கலாம். 

இதழ் பராமரிப்பு

எலுமிச்சையில் ப்ளீச்சிங் பொருளாக இருந்து உதடுகளை காக்க பயன்படுத்தலாம்.  சாற்றை உதட்டில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்தபின் அதனை துடைத்து எடுக்க வேண்டும். பின் அதனை கழுவலாம். பின் லிப் பாம் போட்டு கொள்ளலாம். 

தயிர் பொதுவாக ஒரு நீர்மைத் தன்மையை கொடுக்கும். உடலில்  பொலிவுக்கு தயிர் எவ்வாறு பயன்படுமோ அது போல் அதனை வைத்து நாம் இதழ்களையும் இளஞ்சிவப்பு நிறமாக்க முடியும்.   தயிர் ஒரு ஸ்பூன் கொஞ்சம் எடுத்து அதனை இதழ்களில் மசாஜ் செய்து வந்தால் விரைவில் இதழின் நிறம் மாறும். 

வெணணெய்: 

வெண்ணெய் உதட்டில்  ஏற்படும் புண்களை ஆற்றும, வெடிப்புகளை ஆற்றும் தன்மை கொண்டது வெண்ணெயை  தினமும் தடவி வந்தால் இதழானது மென்மையாகும். இதழ் நிறமாறும்.

கிளீன் கிளிசரின்:

இதழ் பராமரிப்பு

கிளிசரானது லிப் பாமைவிட சிறப்பானது அதனை தினமும் தடவிவந்தால்  உதடானது நீண்ட நேரம் உதடுகள் ஈரபசையுடன் இருக்கும். 

சர்க்கரை:

சர்க்கரை ஸ்கரப்  செய்து வரும் பொழுது உதடுகள் மெண்மையாகும் நிறமாறும். இறந்த செல்களை நீக்கும்.

மேலும் படிக்க – இந்திய நவீன ஆடைகள் சந்தை அதன் போக்கு

பீலீங் செய்யும் பீட்ரூட்:

பீலிங்  உதட்டில் கருமையை  நிரந்தரமாக போக்கும், உதட்டி உள்ள கருமை தன்மை போக்கும் இயற்கையான லிப்ஸ்டிக் வேண்டுமா பீட் ரூட்டை பீசா  மாற்றி அதனை சிறிய பிளாஸ்டிக் கவரால் மூடி பேக்கில் வைக்கவும். தேவைப்படும் பொழுது அதனை எடுத்து அப்ளை செய்து கொள்ளலாம்.

தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன