தீபம் தினமும் ஏற்றி வருவதால் வாழ்வில் திருப்பம் நடக்கும்.

  • by

தீபம் ஏற்றுதல் பழங்காலம் முதல் நமது வாழ்வில் பின்ப்பற்றப்படும் ஒரு முக்கியமான வாழ்வியல் முறைகளில் ஒன்றாகும். இது இருளுக்கு ஒளி கொடுத்தலுடன் ஒளி மயமான எதிர்காலத்தை நமக்கு கொடுக்கும். தீப ஒளியானது நம்மை வாழ்வில் திருப்பம் தரக்கூடிய ஒன்றாகும். காலை மாலையில் தீபம் ஏற்றுவது நமது வீட்டில் முக்கியமான சம்பிராதாயங்களுள் ஒன்றாகவுள்ளது. தீப ஒளி இருள் என்ற அறியாமையைப் போக்கி அருள் என்ற ஆன்மாவை ஆற்றல் மிக்கதாக்குகின்றது.

மூதேவியர் வாசம் செய்யும் தீபம்:

தீபத்தில் மூன்று தேவிகளான துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் ஒளிமயமான முன்னேற்றம் வீட்டில் கிடைக்கின்றது. தீபம் ஏற்றி தினமும் பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்க முடியும். இது உள்ளத்தின் இருளை போக்குகிறது. வாழ்வில் உயரத்தை கொடுக்கின்றது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று முன்னோர்கள், பெரியோர்கள் கட்டாயமாகச் செய்ய பணிப்பாரள்.

மேலும் படிக்க – சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்

தீபங்கள் பேசும் ஒளிமயமான வாழ்வு

பெண்கள் ஏற்றினால் சிறப்பு:

தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் பூஜை செய்து விளக்கு ஏற்றும் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கின்றாள் என்கின்ற ஒரு தார்பரியம் உண்டு. விளக்கேற்றுவது லட்சுமியின் சொருபமான பெண்கள்தான் ஏற்ற்வார்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆண்கள் செய்யலாம். பொதுவாக தீப ஏற்றுவது வீட்டில் உள்ள பெண்கள் செய்தால் சிறப்பாக இருக்கும்.

விளக்கேற்றும் இடங்கள்:

தினமும் காலை மாலை வீடு பெருக்கி விளக்கேற்றி பூஜை செய்வது நமது வாழ்விய் கோவிலில் கூட்டாக தீப வழிபாடு செய்யலாம். சாமி படத்திற்கு முன் விளக்கேற்றி சுலோகம் அல்லது கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். வீட்டில் அரை மணி நேரமாவது விளக்கு தீபம் எரிய வேண்டியது அவசியம் ஆகும். மெல்லிய இசை அல்லது தேவிகளின் சுலோகம், மந்திரம் அல்லது பாடல்களை ஒலிக்கவும் செய்யலாம். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளையும் தீப பூஜையில் ஈடுபடுத்தலாம்.

பெண்கள் தீபம் ஏற்றுவது சிறப்பு

வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் விளக்கேற்றி வழிபட்டால் வறுமை நீங்கி வியாபாரம் பெருகும். பள்ளிக்கு மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளையும் தீப பூஜையில் ஈடுபடுத்த வேண்டும் ஒளிமயமான வாழ்வு நடக்கும்.

மேலும் படிக்க – காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

வீட்டில் அல்லது வியாபாரம் சம்மந்தமாக ஏதேனும் தொடங்கும் பொழுது குத்து விளக்கை ஏற்ற வேண்டும். சுபகாரியங்கள் செய்யும் பொழுது வெள்ளி, பித்தளை  குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் விளக்கு மற்றும் குத்து விளக்கை தவிர்த்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன