“கொலவெறி” அனிருத் ரவிச்சந்திரனின் வாழ்க்கை.!

  • by
lifestyle of music director anirudh

2012 ஆம் ஆண்டு “3” என்ற திரைப்படத்தில் தான் இசையமைத்த முதல் பாடல் உலகெங்கும் மெகா ஹிட்டானது. இன்று வரை உலகெங்கும் அதிகமாக பார்க்கப்பட்ட தமிழ் பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இந்த பாடல்தான். அப்பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அது தான் “ஒய் திஸ் கொலவெறி” அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். இவர் சினிமா வாழ்க்கையை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆரம்ப காலம்

தமிழக ராக்ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படும் அனிருத் ரவிச்சந்திரன் சினிமா வாரிசுகளில் ஒருவர் ஆவார். இவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் உறவினர், அதைத் தவிர்த்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடிகராக வலம் வந்த ரவி ராகவேந்திரன் அவர்களின் மகன். இவரின் தாய் ஓர் கிளாசிக்கல் நடனம் ஆடுபவர், இவரின் பெயர் லட்சுமி ரவிச்சந்திரன். 16 அக்டோபர் 1990 ஆண்டு பிறந்த இவர் 2012 ஆம் ஆண்டு “3” என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

அப்போது அவரின் வயது வெறும் 21. தனது பத்தாவது வயது முதல் இவர் இசைமேல் அதிகமான ஆர்வத்தை கொண்டுள்ளார்.

மேலும் படிக்க – சிவாஜி கணேசனின் பேரனும் விக்ரம் பிரபுவின் வாழ்க்கைமுறை.!

பள்ளி மற்றும் கல்லூரி

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர், அதைத் தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து லண்டனுக்கு சென்று இசை பற்றிய படிப்புகளையும் படித்து வந்தார். தனது பள்ளிப் படிப்பில் ஏ ஆர் ரகுமான் நடுவராக இருக்கும் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.

வெற்றிப் படங்கள்

தனுஷ்ன் “3” படத்தை தொடர்ந்து “எதிர்நீச்சல்”, “வணக்கம் சென்னை” போன்ற படங்கள் வெளிவந்தன, அதைத்தொடர்ந்து “வேலையில்லா பட்டதாரி” என்ற படம் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது, “மான்கராத்தே”, “கத்தி”, “காக்கி சட்டை” போன்ற படங்களிலும் இசையமைத்திருந்தார். “நானும் ரவுடிதான்” அதைத்தொடர்ந்து அஜித்தின் “வேதாளம், “விவேகம்” பிறகு சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பேட்டை”, தர்பார் வரை இவரின் இசை பட்டி தொட்டி எங்கும் பரவி உள்ளது.

வரவிருக்கும் படங்கள்

விஜய் அவர்களின் “மாஸ்டர்” திரைப்படத்தையும் இவர் தான் இசையமைத்து வருகிறார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் “டாக்டர்” பத்மஸ்ரீ கமல்ஹாசனின் “இந்தியன்2” மற்றும் விக்னேஷ் சிவனின் அடுத்தப் படமான “காற்றுவாக்கில் இரண்டு காதல்” போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

மேலும் படிக்க – இறுதிச்சுற்று ரித்திகா சிங் வாழ்க்கை முறை.!

விருதுகள்

“3” திரைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட விருதுகளை அள்ளிய இவர் கிட்டத்தட்ட 9 தென்னிந்திய விருதுகளையும் வாங்கியுள்ளார். சோனி இசை நிறுவனம் இவரின் இசைக்காக கலை நிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்காக இவரை ஒரு பெரிய தொகை கொடுத்து பதிவு செய்து இருந்தார்கள். இவ்வாறு சச்சின் ஆன்த்தம் மற்றும் இப்போப் தமிழக உடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பின்னணிப் பாடகராகவும் வலம் வருகிறார்.

காதல் உணர்வுகளை அள்ளி வீசும் அனிருத் ராமச்சந்திரனின் இசை எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவை. ஒரு சில ஏற்ற இறக்கங்கள் தன் வாழ்க்கையிலும் மற்றும் இசையில் இருந்தாலும் இன்று மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வருகிறார் அனிருத்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன