விக்னேஷ் சிவனின் வாழ்க்கை தொடக்கம்..!

  • by
lifestyle of director vignesh shivan

விக்னேஷ் சிவன் என்றவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுபவர் நயன்தாராவின் காதலன், அவரின் கணவர் என்றுதான். ஆனால் இவர் நயன்தாராவின் பிம்பத்தை தவிர்த்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

போடா போடி

சிம்புவை வைத்து தனது முதல் திரைப்படமான “போடா போடியை” இயக்கினார். படம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும் படத்தில் இவர் அமைத்திருந்த காட்சிகள் மற்றும் காமெடிகள் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை தொடர்ந்து இவர் “நயன்தாரா”, “விஜய் சேதுபதியை” வைத்து “நானும் ரவுடிதான்” என்ற திரைப்படத்தை இயக்கினார். நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியடைந்த இத்திரைப்படம் பல விருதுகளை வென்றது. இதன் மூலமாகத்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஒருவிதமான நெருக்கம் ஏற்பட்டது.

மேலும் படிக்க – இறுதிச்சுற்று ரித்திகா சிங் வாழ்க்கை முறை.!

விக்னேஷ் சிவனின் திறமைகள்

இவர் முதன்முதலில் நடிகராக அறிமுகமாகி பிறகு இயக்குனராக வலம் வந்தார். இவர் இயக்கிய எல்லா படங்களிலும் இவரின் பாடல்கள் வரி இடம் பிடித்திருக்கும். இப்போது திரைப்படத் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து இவர் “தானா சேர்ந்த கூட்டம்” என்ற படத்தை சூர்யாவை வைத்து இயக்கி இருந்தார். ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் போதுமான வசூலை ஈட்ட முடியவில்லை. இதனால் சற்று இடைவெளி விட்டு இப்போது “காற்றுவாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பாடல் வரிகள்

“போடா போடி” படத்தில் “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” என்ற பாடலை எழுதியதன் மூலமாக எழுத்தாளராக உருவெடுத்து “என் ஜி கே”, “நம்ம வீட்டு பிள்ளை”, “ரெமோ”, “அச்சம் என்பது மடமையடா” போன்ற படங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க – ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

காதல் வாழ்க்கை

“நானும் ரவுடிதான்” படத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக பழகி கிட்டத்தட்ட திருமணம் வரை சென்றுள்ளது அவர்களின் காதல். இந்த வருடம் நிச்சயம் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நயன்தாரா வெளிப்படையாக செய்தியை வெளியிட்டார். எனவே “காற்று வாக்கில் இரண்டு காதல்” படம் நிறைவடைந்தவுடன் இவர்களின் திருமணத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

இயக்கத்தில் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் தனது திறமையை பாடல் வரிகள் மூலமாக வெளிப்படுத்தி அதற்கான விருதுகளையும் பெற்றுள்ளார். திறமை என்பது வெற்றி தோல்வியை பொருத்தது அல்ல, நாம் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளார் விக்னேஷ் சிவன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன