குக் வித் கோமாளி “சிவாங்கியின்” வாழ்க்கை முறை..!

  • by
lifestyle of cook with comali shivangi

கடந்த சில மாதங்களாகவே விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிக பிரபலம் அடைந்தது. இதற்குக் காரணம் இந்த நிகழ்ச்சியில் சமைப்பது மட்டுமல்லாமல் சமையல் செய்பவர்களுக்கு துணை செய்யும் வகையில் சில கோமாளிகளை உதவி புரிய வைத்தார்கள். இதனால் நிகழ்ச்சி மிகப் பிரபலமடைந்தது. சொல்லப்போனால் கடந்த சில மாதங்களில் அதிக டிஆர்பி ரேட்டிங் கொண்ட நிகழ்ச்சிகளில் பட்டியலில் இது நுழைந்தது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாகவும், சமையல் செய்வதற்கு உதவியாகவும், சில சமயங்களில் சமயல் செய்பவராகவும் இருந்தவர்தான் சிவாங்கி.

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் பங்குபெற்ற சிவங்கி தனது திறமையின் மூலமாக எல்லோரையும் கவர்ந்தார். தான் மேடையேறி பாடிய முதல் பாடலிலேயே எல்லா நீதிபதிகளையும் கவர்ந்து தனது திறமைக்கான முத்திரை பதித்தார். இவரை உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா அவர்களின் குழுவில்  அழைக்கப்பட்டார். இவர் இறுதிப்போட்டி வரை செல்ல முடியாமல் போனாலும் தனது திறமைக்கான அங்கீகாரம் முழுவதையும் அதற்கு முன்பே பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க – நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை முறைகள்..!

ஆரம்ப வாழ்க்கை

சிவாங்கி கேரளாவில் கிருஷ்ணகுமார் மற்றும் பிண்ணி கிருஷ்ணகுமார் என்பவர்களுக்கு 1 ஜனவரி 2002 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையும் ஒரு பாடகர் என்பதினால் இசையை மிக எளிதில் கற்றவர். இதைத் தவிர்த்து இவரின் தாய் பிண்ணி, சிவாங்கிக்கு பாடுவதற்கான வழிமுறைகளை கற்பித்தவர். இவர் தற்போது சென்னையில் சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். சிவாங்கி தனது பட்டப் படிப்பை சென்னையில் உள்ள எம்.ஒ.பி. வைஷ்ணவா கல்லூரியில் படித்து வருகிறார்.

குக் வித் கோமாளி

பாடல் பாடுவதில் திறமை மிக்கவராக இருந்தாலும் இவருக்கு மேலும் பல ரசிகர்களை அள்ளித்தந்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் வனிதாவாக இருந்தாலும் பல சூழல்களில் மறைமுகமாக அவர்களுக்கு உதவி புரிந்தவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்ததற்கு முழு காரணம் சிவாங்கி மற்றும் புகழ் என்று சொல்லலாம். சமையலை புதுமையான வழியில் வெளிக்காட்டியதற்காக இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்தது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளரும் எல்லோரையும் கவர்ந்தார்கள்.

மேலும் படிக்க – பஞ்சாபி தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

கேரளாவில் பிறந்து சென்னையில் பல ரசிகர்களை கொண்டுள்ள சிவாங்கி. இது அனைத்திற்கும் காரணம் தனது திறமை மற்றும் தன் திறமையை வெளி காட்டிய விதமும் தான். 18 வயதில் பல ரசிகர்களைக் கொண்டுள்ள சிவாங்கி மேலும் உயர வாழ்த்துகிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன