பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் வாழ்க்கை முறைகள்..!

  • by
lifestyle of bigg boss actress yashika anand

கவர்ச்சி நாயகியாக உருவெடுத்து வரும் யாஷிகா ஆனந்த் தனது பதினான்காவது வயதிலேயே சினிமா உலகிற்குள் நுழைந்தார். டெல்லியில் பிறந்த இவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நான்காம் தேதி ஆகஸ்ட் 1999 ஆம் ஆண்டு பிறந்தார். தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலமாக பிரபலமடைந்து இன்று சினிமா உலகிற்குள் நுழைந்துள்ளார்.

யாஷிகா ஆனந்த்

“இனிமே இப்படித்தான்” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த யாஷிகா ஆனந்த் சரியாக படப்பிடிப்புக்கு வராத வரமுடியாததினால் பட வாய்ப்பை இழந்தார். அதைத்தொடர்ந்து “துருவங்கள் பதினாறு” என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல் “கவலை வேண்டாம்” என்ற படத்திலும் ஒரு காட்சியில் வந்தார். இப்படி தனது திரை வாழ்க்கையை ஒருசில காட்சிகள் மூலமாக கடந்து வந்த இவருக்கு “இருட்டு அறையில் முரட்டு குத்து” மற்றும் “நோட்டா” போன்ற படங்களில் முழுநீள கதாபாத்திரங்கள் அமைந்தது.

மேலும் படிக்க – சிலம்பாட்டம் ஆடிய சிம்புவின் சீறிய வாழ்கை வரலாறு இதுதானுங்க..!

சினிமா வாழ்க்கை

“மணியார் குடும்பம்” மற்றும் “கழுகின்” இரண்டாம் பாகத்தில் வழக்கம் போல் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான “சோம்பி” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்போது அவர் “இவன் தான் உத்தமன்” மற்றும் “ராஜபீமா” என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

யாஷிகா ஆனந்தை பற்றி அனைவருக்கும் தெரிவதற்கான மிக முக்கியமான காரணமாக இருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் தொடங்கியவுடன் இவருக்கான அழைப்பு வந்தது, அப்போது அவர் இந்த அழைப்பை மறுத்து விட்டார். பிறகு பிக் பாஸ் இரண்டாம் பாகம் இவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தது. எனவே அதை சரியாக பயன்படுத்தி இவர் கிட்டத்தட்ட 98 நாட்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தார். அதை தவிர்த்து 5 லட்ச பரிசையும் வென்றார். எப்போதும் கவர்ச்சியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒருசில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க – நடிகையர் திலகம் ராதிகா அவர்களின் வாழ்வியல் ஒரு பார்வை..!

யாஷிகா ஆனந்த் இன் மதிப்பு

இவரின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 80 லட்சமாகும். இவரிடம் ஆடி கார் மற்றும் ராயல் என்பீல்ட் பைக் உள்ளது. இவர் தனது நேரத்தை பைக் சவாரி மூலமாகக் கழிப்பார். எனவே ஆண்களைப்போல் துணிச்சலுடனும், தைரியத்துடனும் வலம்வரும் யாஷிகா ஆனந்த் வெற்றியடைந்து இன்னும் பல படங்களில் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன