பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறைகள்..!

  • by
lifestyle of ancient Tamil people

பழங்காலத்தில் தமிழர்கள் என்பவர்கள் உலகம் முழுக்க பரவி இருந்தார்கள். இன்றும் இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வரலாறு மிகப் பழமையானது. தமிழ் மொழியும் மிகவும் பழமையான மொழியாகும். அக்கால தமிழர்கள் அவர்களின் கலாச்சாரத்தை எப்படி பின்தொடர்ந்தார்கள் மற்றும் அதன் உண்மை கதையை காணலாம்.

கலாச்சாரம் பரவியது

தமிழ் கலாச்சாரம் உலகம் முழுக்கப் அறிவதற்கான மிக முக்கியமான காரணம் தமிழ் மொழி. பின்பு கலாச்சாரம் பாட்டு வடிவில், இசை வடிவில், தற்காப்புக் கலைகள், ஓவியங்கள், கல்வெட்டுகள், கோவில்கள் என பலவிதமான வடிவில் மக்களுக்கு தமிழ் மொழியின் கலாச்சாரம் சென்றடைந்தது.

மேலும் படிக்க – கோடை விடுமுறைக்கு உங்கள் குழந்தைகளை எங்கெல்லாம் அழைத்துச் செல்லலாம்..!

கல்வெட்டின் மூலம் அறியலாம்

தமிழ்மொழியின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் கலாச்சாரத்தையும் இன்றும் ஏராளமான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் நாம் பார்க்கலாம். அக்காலத் தமிழ் மக்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள், அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை இந்தக் கல்வெட்டுகள் நமக்கு உணர்த்தியது.

கோவில்கள்

தமிழ் மொழியின் அருமையை அக்கால நூல்கள் நமக்கு அறிவுறுத்தியது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, நாலடியார், திருக்குறள் போன்ற நூல்கள் நமக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழ் கலாச்சாரம் இன்றுவரை நம் அறிவைப் பெறுவதற்கு மிக முக்கியமான காரணம் கோவில்கள் தான். அதில் பாதிக்கப்பட்டு கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்துள்ளோம். தமிழ் கடவுளாக கருதப்படுவது முருகன். இவருக்கு கோவில்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளது.

தமிழர்களின் கலை

தமிழ் இலக்கணத்தில் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார்கள். அடிமுறை, குட்டு வரிசை, வர்மக்கலை, சிலம்பாட்டம் ஆடி தண்டம், மல்யுத்தம் போன்றவைகளை அவர்கள் பயன்படுத்தி தங்கள் தற்காப்புக் கலையை வளர்த்து வந்தார்கள். தற்காப்புக் கலைகளைக் தவிர்த்தேன் நடனம் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களிளும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதைத் தவிர்த்து இவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் ஆயுதங்களையும் தயாரித்து வந்தார்கள். அதன் மாதிரி வடிவைக் கொண்டு இன்றும் பல விதமான ஆயுதங்கள் உருவாக்கி உள்ளார்கள்.

சிற்பக் கலைகள்

சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழர்கள். இதற்கு உதாரணமாக நாம் மகாபலிபுரத்தில் உள்ள கல்வெட்டுகளை சான்றாக எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் தஞ்சை பெரிய கோவிலில் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை பார்த்து புரிந்து கொள்ளலாம், அக்காலத் தமிழர்கள் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்று. பரதநாட்டியம், குச்சிப்புடி, கும்மி ஆட்டம், தேவராட்டம், கரகாட்டம் போன்ற 16 வகையான நடந்தவைகளை கற்று உலகம் முழுக்க பரப்பி வந்தார்கள்.

மேலும் படிக்க – பலிபீடம் என்றால் என்ன அதை எதற்கு பயன்படுத்தினார்கள்..!

உணவுகள்

அக்காலத் தமிழர்கள் மிக ஆரோக்கியமான முறையில் உணவுகளை தங்களே விளைவித்து சாப்பிட்டு வந்தார்கள். அதில் நாம் சிறுதானியங்கள் என்று அழைக்கப்படும் உணவுகள் மற்றும் தானியங்கள் என ஆரோக்கியமான உணவுகளை அவர்கள் சாப்பிட்டு வந்தார்கள். அதேபோல் ஆயுர்வேத மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

அதிகாலையில் எழுவது, பகல் முழுக்க உழைப்பது என மிக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி வந்த தமிழர்கள் இப்போது இயந்திரங்களின் இடையே சிக்கி நம்மிடையே வரலாற்றை மாற்றியமைக்கிறார்கள். நம்முடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களை மறவாமல் அதைப் பின்தொடர்ந்து தமிழின் பெருமையை உலகிற்கு சொல்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன