பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் வாழ்க்கை முறைகள்..!

  • by
lifestyle of amazing director shankar

தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் திரைப்படம் சமூக அக்கறை மூலமாக எடுக்கப்பட்டாலும் படத்தில் பிரம்மாண்டம் என்பது அதைவிட அதிகமாகவே இருக்கும். இப்படி சாதாரண திரைப்படத்தைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்டத்தை அளித்தவர் இயக்குனர் ஷங்கர். அவரைப்பற்றிய சுவாரசியமான தகவலை இப்பதிவில் காணலாம்.

ஜென்டில்மேன்

இயக்குனர் ஷங்கர் முதன் முதலில் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பவித்ரன் இவர்களுக்கு கீழ் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்பு எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் உதவியால் தனது முதல் படத்தை இயக்கினார். கதை அருமையாக இருந்தாலும் இதற்கான பட்ஜெட் மிக பெரிய அளவில் இருந்ததினால் படத்தயாரிப்பாளர்கள் சற்று சிந்தித்தார்கள். பின்பு முழு நம்பிக்கையுடன் படத்தை எடுக்கத் துவங்கினார் சங்கர். முதல் படத்திலேயே மிகப்பெரிய இயக்குனருக்கான முத்திரையை பதித்தார். இத்திரைப்படம் தமிழக அரசின் விருதையும் பெற்றது. அதேபோல் விமர்சன ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் படிக்க – குக் வித் கோமாளி புகழின் வாழ்க்கைமுறைகள்..!

ஷங்கரின் படம்

சங்கர் தனது சினிமா பயணத்தை 1993 ஆண்டு துவங்கினார். கிட்டத்தட்ட 27 ஆண்டுகளில் வெறும் 13 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அந்த 13 திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. “ஜென்டில்மேன்”, “காதலன்”, “இந்தியன்”, “ஜீன்ஸ்”, “முதல்வன்” போன்ற திரைப்படங்களில் ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்கள் மற்றும் ஒவ்வொரு விதமான காட்சியமைப்பை அளித்து ரசிகர்களை திருப்திபடுத்தினார். இவர் இயக்கிய “பாய்ஸ்” திரைப்படம் தவறான சித்தரிப்பு என்று பலராலும் பேசப்பட்டது. இறுதியில் அத்திரைப்படம் மெல்ல மெல்ல மக்கள் மூலமாக பேசப்பட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

கமல்ஹாசனை வைத்து “இந்தியன்” திரைப்படத்தை இயக்கி, அதைப்போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “சிவாஜி” திரைப்படத்தை இயக்கினார். இதற்கு இடையில் விக்ரமை வைத்து “அந்நியன்” திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

கனவு திரைப்படம்

தான் முதல் படமாக தனது கனவு படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த ஷங்கருக்கு தோல்வியே அமைந்தது. அக்காலத்தில் அதுபோன்ற திரைப்படத்தை எடுப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இந்தியாவில் இருந்ததினால் தன் கனவை மறந்து மற்ற படங்களில் கவனத்தை செலுத்தினார். ஆனால் 2010 ஆம் ஆண்டு தனது கனவின் கதவு திறந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அந்த கனவு திரைப்படம்தான் “எந்திரன்”. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உழைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் “எந்திரன்” அதைத் தொடர்ந்து சேத்தன் பகத் அவர்களின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 3 இடியட்ஸ், அதை தமிழில் மொழி பெயர்த்து நடிகர் விஜயை வைத்து “நண்பன்” என்ற பெயரில் இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் விக்ரம் அவர்களை வைத்து “ஐ” திரைப்படம் இயக்கினார். பிறகு மீண்டும் “எந்திரன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்காக மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டு “டூ பாயிண்ட் ஓ” என்று 2018ம் ஆண்டு வெளியிட்டார்.

ஷங்கரின் வருமானம்

தென்னிந்தியாவில் இயக்கத்திற்காக அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர் சங்கர். இவர் ஒரு படத்திற்கு சராசரியாக 32 கோடி முதல் 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இந்தியாவில் ஒரு சிலரே ரோல்ஸ்-ரோய்ஸ் கார் வைத்திருக்கிறார்கள், அதில் ஷங்கரும் ஒருவர்.

தயாரிப்பாளரான ஷங்கர்

திரைப் படத்தை இயக்குவதற்கு மத்தியில் தனக்கு உதவி இயக்குனராக பணி புரிபவர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் திரைப்படத்தை தயாரிக்கவும் செய்தார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “காதல்” திரைப்படத்தை முதன்முதலில் தயாரித்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதைத்தொடர்ந்து “இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி”, “வெயில்”, “கல்லூரி”, “அறை எண் 305ல் கடவுள்” போன்ற படங்களை தயாரித்தார். இதில் “இம்சை அரசன்” மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, ஓர் அரசனின் நகைச்சுவையான சித்தரிப்பை எல்லா மக்களும் வரவேற்றார்கள். அதேபோல் வசந்தபாலன் இயக்கிய “வெயில்” திரைப்படமும் மக்கள் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு இவர் தயாரிகத்த ஒரு சில படங்கள் வெற்றி அடையாமல் தோல்வியை தழுவியது.  இதனால் தான் தயாரிப்பை சிறிது காலம் நிறுத்தி வைத்த இயக்கத்தில் கவனத்தை.

மேலும் படிக்க – அருண் விஜய் மற்றும் பிரசன்னா கூட்டணியில் மாஃபியா!

ஷங்கரின் குடும்பம்

நடிகர் ஷங்கர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்சார். அவர்களுக்கு இரண்டு மகள்கள், ஐஸ்வர்யா மற்றும் அதிதி. பிறகு ஓர் மகன் அர்ஜித். ஷங்கர் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் 17 ஆகஸ்ட் 1963 ஆம் ஆண்டு சண்முகம் மற்றும் முத்துலட்சுமிக்கு பிறந்தார். இன்று வரை தனது இயக்கத்தை சிறப்பாக செய்துவரும் நடிகர் ஷங்கர் எந்த ஒரு சிக்கலிலும் சிக்காமல் தனக்கென ஒரு பாதையை அமைத்து வாழ்ந்து வருகிறார்.

தான் இயக்கும் ஒவ்வொரு படமும் சமூக அக்கறை கொண்ட தாகவே இருக்கும், இந்த வரிசையில் இவர் இயக்கிய “ஐ” திரைப்படம் மட்டும் பழிவாங்கும் கதைகளைக் கொண்டது. மற்ற அனைத்து திரைப்படமும் நம் சமுதாயத்தின் சூழல், அதற்கான தீர்வு என மிக அழகாக எடுத்து வைத்திருப்பார். இவர் கமலஹாசனை வைத்து இயக்கி வரும் இந்தியன் 2 படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு வெளியாகும் இந்த திரைப்படத்திற்காக பலரும் காத்திருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன