கம்பீரமான வனிதா விஜயகுமாரின் வாழ்க்கை..!

  • by
lifestyle of actress vanitha vijaykumar

சில மாதங்களுக்கு முன்பு “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் வில்லியாக வலம் வந்தவர் தான் வனிதா விஜயகுமார். ஆரம்பம் முதலே இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சக போட்டியாளர்களிடம் பிரச்சனைகளை உண்டாக்கினார். அதைத்தொடர்ந்து சில வாரங்களிலேயே மக்கள் அவரை வெளியேற்றினார்கள். அதன்பிறகு “பிக்பாஸ்” இல்லமே ஒற்றுமையாக சென்றுகொண்டிருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

அழகாக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த “பிக்பாஸ்” போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மீண்டும் வனிதா விஜயகுமார் “பிக்பாஸ்” இல்லத்திற்குள் அனுபப்பட்டார். அதன்பிறகு ஆட்டம் சூடு பிடித்து எல்லோரிடமும் சண்டைகள் ஏற்பட்டது. இது அனைத்துக்கும் காரணம் வனிதா விஜயகுமாரின் இயல்புதான். தான் நினைத்ததை நினைத்த நேரத்தில் சொல்லுவதினால் பலரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். இதன் மூலமாக மக்கள் மீண்டும் அவரை வெளியேற்றினார்கள். “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி யில் உள்ளே நுழைந்த முதல் போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் படிக்க – சிவாஜி கணேசனின் பேரனும் விக்ரம் பிரபுவின் வாழ்க்கைமுறை.!

ஆரம்ப வாழ்க்கை

வனிதா விஜயகுமார் அவர்கள் சினிமா குணச்சித்திர நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள். இவருடன் பிறந்தவர்கள் பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. அதை தொடர்ந்து தன்னுடைய தந்தை விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள், நடிகர் அருண் விஜய், அனிதா மற்றும் கவிதா இவர்கள் இவருடன் பிறக்காத சகோதர, சகோதரிகள்.

சினிமா வாழ்க்கை

வனிதா விஜயகுமார் அவர்கள் 1995 ஆம் ஆண்டு “சந்திரலேகா” என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் தளபதி விஜய் நடித்து இருந்தார். அதைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு ராஜ்கிரண் ஜோடியாக “மாணிக்கம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது அதை தவிர்த்து வனிதா விஜயகுமார் மற்றும் ராஜ்கிரணுக்கு இடையே சில கிசுகிசுக்களும் பத்திரிகைகளில் எழுதி வந்தார்கள்.

பிறமொழி சினிமாக்கள்

1997 ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஹிட்லர் பிரதர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்பு தெலுங்கு மொழியில் தேவி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2013ம் ஆண்டு “நான் ராஜாவாகப் போகிறேன்” என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்பு அதே வருடத்தில் “சும்மா நச்சுன்னு இருக்கு” என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்பு 2015 ஆம் ஆண்டு “எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

மேலும் படிக்க – இறுதிச்சுற்று ரித்திகா சிங் வாழ்க்கை முறை.!

சின்னத்திரையில் வனிதா

“கலாட்டா சிரிப்பு” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிமர் தொலைக்காட்சியில் “ஸ்டார் டே அவுட்” என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற “பிக்பாஸ்” மூன்றாம் பாகத்தில் போட்டியாளராக கலந்து கொண்டார். பல விதமான உணர்வுகளை வெளிக்காட்டிய அவருக்கு ரசிகர்கள் மற்றும் எதிரிகள் உருவாகினார்கள். இருந்தும் தன்னுடைய வெளிப்படையான குணத்தினால் பலரையும் கவர்ந்தார்.

திருமண வாழ்க்கை

வனிதா விஜயகுமார் 2000ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். பிறகு ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார், பின்பு 2012ஆம் ஆண்டு இவர்களுக்குள்ளும் விவாகரத்து ஏற்பட்டது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வரும் வனிதா விஜயகுமாருக்கு நிரந்தரமான துணை யாரும் இல்லாததை பற்றி இன்று வரை அவர் கவலைப்பட்டது இல்லை. எனவே தனக்கு பிடித்த வாழ்க்கையை தான் நினைத்ததை போல் வாழ்ந்து வரும் வனிதா விஜயகுமார் பலருக்கு முன்னுதாரணமாக இருப்பார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன