ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

  • by
sai pallavi

மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி தான் சாய் பல்லவி. இவர் முதன்முதலில் தனியார் தொலைக்காட்சியில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார். தனது வாழ்க்கையில் மருத்துவப் படிப்பை குறிக்கோளாக வைத்து படித்து வந்த இவர் இன்று பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார். இது போன்ற மாற்றங்களை தந்து நமக்கு பிடித்தால் எந்த துறைக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் அதற்கு முயற்சி மட்டும் போதுமென்று எல்லோருக்கும் புரிய வைத்துள்ளார்.

சாய்பல்லவி யின் வாழ்க்கை தொடக்கம்

செந்தாமரைக் கண்ணன் மற்றும் ராதா இருவருக்கும் 9 மே 1992 ஆம் ஆண்டு கோத்தகிரியில் பிறந்தார். இரட்டை சகோதரிகளாக பிறந்த இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள அவிலா பள்ளியில் படித்தார்கள். சாய்பல்லவி ஜார்ஜியாவில்  உள்ள பில்லிசி மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை பயின்று வந்தார்.

மேலும் படிக்க – விஜய் தேவர் கொண்டாவின் வாழ்க்கை முறைகள்..!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை

நடனம் ஆடுவதில் அதிக ஆர்வத்தைக் கொண்ட இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக “கஸ்தூரிமான்” என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சின்னத்திரையில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றார். இவர் நடந்ததற்கான எந்த பயிற்சியும் பெறாமல் தன் தாய் நடனம் ஆடுவதை பார்த்து பள்ளி, கல்லூரிகளில் நடனப் போட்டியில் கலந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் இந்த விருதை தட்டிச் சென்றார். தெலுகிலும் சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். 2008 ஜீவா இயக்கத்தில் வெளிவந்த “தாம்தூம்” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்திருந்தார்.

வாழ்க்கையை மாற்றிய படம்

2018 ஆம் ஆண்டு தான் எதிர்பார்க்காத நேரத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் அழைப்பு வந்ததுள்ளது அவரின்  அடுத்த படத்தில் சாய் பல்லவியை கதா நாயகியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் விளையாட்டாக அழைக்கிறார்கள் என்று எண்ணி தயங்கிய சாய்பல்லவி நடிக்க ஒப்புக்கொண்டார். அதுதான் இன்றளவும் பேசப்படும் மிகப்பெரிய வெற்றிப்படமான “பிரேமம்”. இந்த படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றார்.

மேலும் படிக்க – மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

தமிழ் மற்றும் தெலுங்கு

இதைத் தொடர்ந்து மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் “காளி” என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான “பீடா” என்ற படத்தில் நடித்திருந்தார். அதை தமிழில் பானுமதி என மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள். இத்திரைப்படம் குடும்பத்தினர் அதிகமாக பார்த்த படம் என்ற பெருமையைப் பெற்றது.

தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் “தியா” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தனுஷுடன் “மாரி”, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் “என் ஜி கே” போன்ற படங்களில் நாயகியாக வலம் வந்தார்.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் வாழ்க்கை முறை..!

நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று மருத்துவப் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டு பல படங்களில் நடித்து அதில் மிகப்பெரிய வெற்றியும் அடைந்து, கனவுகளின் பின்னால் செல்லும் ஒவ்வொருவரும் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்துள்ளார் சாய் பல்லவி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன