இறுதிச்சுற்று ரித்திகா சிங் வாழ்க்கை முறை.!

  • by
lifestyle of actress rithika singh

“இறுதி சுற்று ” படத்தில் தனுஷ் ரசிகையாக வந்திருக்கும் ரித்திவிகா சிங்கிற்கு இப்போது ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதையும் தனது முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா சிங் முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக இந்தி படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழில் இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் எட்டாத உயரத்திற்குச் சென்று உள்ளார்.

ரித்திகா சிங் ஆரம்ப காலம்

16 டிசம்பர் 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகருக்கு அடுத்து இருக்கும் தானேவில் பிறந்தார். இவர் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை அங்கேயே முடித்துக் கொண்டு குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். இதன் மூலமாக 2009 ஆசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் கலந்துகொண்டார். அதில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியாமல் இருந்த அவருக்கு திரைப்பட உலகம் கதவைத் திறந்தது.

மேலும் படிக்க – பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் வாழ்க்கை முறைகள்..!

விருதுகளைக் குவித்தார்

சுதா கொங்கரா பிரசாத் அவர்களின் இயக்கத்தில் மாதவனுடன் இணைந்து நடித்த “இறுதிசுற்று” என்ற படம் “சாலே கூடாஸ்” “குரு” என மூன்று மொழிகளில் வெளியாகின. 2016 மற்றும் 2017 களில் இதற்கான பல விருதுகளையும் தட்டிச் சென்றார். அதில் தேசிய விருதுகளும் அடங்கும். அதைத்தொடர்ந்து “ஆண்டவன் கட்டளை” “சிவலிங்கம்” போன்ற படங்களை வெற்றிப்படமாக மாற்றினார். சமீபத்தில் “ஓ மை கடவுளே” “வணங்காமுடி” மற்றும் “பாக்ஸர்” என்று படங்களில் நடித்து வருகிறார்.

குத்து சண்டை

குத்து சண்டை பயிற்சியில் அதிகமாக எடுத்துக் கொண்ட ரித்திகா சிங் இப்போது அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறார். குத்து சண்டைகளில் அவரால் மிகப்பெரிய விருதுகள் பெற முடியாமல் இருந்தாலும் சினிமா துறை அவர்களுக்கு ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் கொடுத்தது. எனவே அவர் உண்மையில் குத்துச்சண்டையில் வென்றுள்ளார் என்றே சொல்ல முடியும். ஏனென்றால் அதன் உதவியால் தான் இவரால் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது.

மேலும் படிக்க – விஜய் தேவர் கொண்டாவின் வாழ்க்கை முறைகள்..!

இன்னும் திருமணம் ஆகாமல் எந்த காதலர்களையும் வைத்துக்கொள்ளாமல் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமா உலகில் நடித்து வருகிறார். இவர் வருடத்திற்கு பல படங்கள் தரவேண்டும் என்று இவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன