ராஜமாதா ரம்யா கிருஷ்ணாவின் வாழ்க்கை..!

  • by
lifestyle of actress ramya krishnan

“படையப்பா” படத்தில் நீலாம்பரியாக வலம்வந்து எல்லாவித தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த ரம்யா கிருஷ்ணா, சில வருடங்களுக்கு முன்பு வெளியான “பாகுபலி” மூலமாக இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். தனது வயது அதிகரித்தாலும் அவரின் அழகு குறையாமல் இன்றும் இளமையாகவே இருக்கிறார். இத்தகைய திறமை வாய்ந்த ரம்யா கிருஷ்ணா கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

ரம்யா கிருஷ்ணா

செப்டம்பர் 15, 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் ரம்யா கிருஷ்ணன். இவர் பசுபுலேட்டி கிருஷ்ணவம்சி என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தனது 14ம் வயதில் சினிமாவிற்குள் நுழைந்த இவர் இன்றுவரை கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க – பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் வாழ்க்கை முறைகள்..!

ஆரம்ப வாழ்க்கை

ரம்யா கிருஷ்ணா 1984ஆம் வருடம் ஒய் ஜி மகேந்திரன் உடன் “வெள்ளை மனசு” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 1986-ம் வருடம் “பலே மிருதுளா” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணா “பாகுபலி” படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானார்.

படையப்பா

1999 ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எதிராக களமிறங்கினார். இவர் ரஜினிகாந்திற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமை முழுவதையும் வெளிக்காட்டினார். இதற்கு இவர் பிலிம்பேர் விருதையும் பெற்றார். ஆரம்பத்தில் ரஜினிகாந்திற்கு வில்லியாக இவர்தான் நடிக்கிறாரா என்ற பதற்றத்தில் இருந்த ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்த பிறகு ரஜினிகாந்த் ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனின் ரசிகர்களாக மாறினார்கள். கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கிய இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதைத் தவிர்த்து ரம்யா கிருஷ்ணன் யார் என்று எல்லோருக்கும் தெரிய வந்தது.

எல்லா மொழியும் தெரிந்தவர்

ரம்யா கிருஷ்ணா தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற எல்லா மொழிகளையும் சரளமாகப் பேசி நடிப்பவர். அதைத்தொடர்ந்து இந்தியிலும் தேர்ச்சி பெற்று இப்போது எல்லா மொழிகளிலும் சிறந்தவராக இருக்கிறார்.

சிறந்த நடிகை

இவர் சிவாஜிகணேசன் முதல் கார்த்திக் சிவகுமார் வரை எல்லா நடிகரையும் பார்த்தவர். சொல்லப்போனால் பெரிய நடிகர்கள் அனைவரும் இணைந்து நடித்த ரம்யா கிருஷ்ணா, அவருக்கு போதுமான விளம்பரம் கிடைக்க வில்லை. இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து எல்லோரையும் கவர்ந்து உள்ளார்.

மேலும் படிக்க – பருத்திவீரன் “கார்த்திக்” வாழ்க்கை முறைகள்..!

ஏராளமான வெற்றிப் படங்கள்

இவர் அதிகமாக, படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து ஒரு பாடலுக்கு அல்லது கௌரவத் தோற்றத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் இவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை சரியாக தேர்ந்தெடுத்து தன்னுடைய பெயரை நிலைநாட்டி உள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” மற்றும் “தேவ்” போன்ற திரைப் படம் சரியாக போகவில்லை என்றாலும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள “பார்ட்டி” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படம் வெற்றி அடைய மற்றும் ரம்யா கிருஷ்ணன் மேலும் உயர எங்கள் குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன