ரகுல் ப்ரீத் சிங்கின் வாழ்க்கை..!

  • by
lifestyle of actress rakul preet singh

2009 ஆம் ஆண்டு “செவன் ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தை கன்னட மொழியில் “கில்லி” என்ற பெயரில் உருவாக்கினார்கள். இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால் கதாபாத்திரத்தை எடுத்து நடித்தவர்தான் ரகுல் ப்ரீத் சிங். அறிமுகமான முதல் படத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளி காட்டிய ரகுல் பிரீத் சிங்கிற்கு எல்லா மொழிகளிலிருந்தும் வரவேற்பு கிடைத்தது.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங், 10 அக்டோபர் 1990 ஆம் ஆண்டு புது டில்லியில் பிறந்தார். இவர் பஞ்சாபி ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர், டில்லியில் முழுமையாக குடிபெயர்ந்த இவர் அங்குள்ள ராணுவ பள்ளியில் படித்து வந்தார். அதைத் தொடர்ந்து ஜீசஸ் அண்ட் மரி என்ற கல்லூரியில் கணிதத்தை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். தனது 19-வது வயதில் கன்னட மொழியில் அறிமுகமான இவர் தனது 21-வது வயதில் தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகமானார்.

மேலும் படிக்க – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துல்கர் சல்மான்..!

சினிமா வாழ்க்கை

கன்னடம்”கில்லி” படத்தில் அறிமுகமான பிறகு “கிரீடம்” என்ற தெலுங்கு படத்தில் தெலுங்கு மொழியில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து “யுவன்” என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். ஆனால் இத்திரைப்படம் தமிழில் சரிவர ஓடாததால். ரகுல் ப்ரீத் சிங் ஒரு சில தமிழ் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். “புத்தகம்” மற்றும் “என்னமோ ஏதோ” என்ற திரைப்படத்தின் மூலமாக ரகுல் ப்ரீத் சிங் யாரென்று தமிழ் ரசிகர்களுக்கு தெரியவந்தது. இதற்கு இடையில் வெளிவந்த  “யாரியான்” என்ற இந்தி படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் தன் காலடியை பதித்தார்.

பெரிய படங்கள்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான “ஸ்பைடர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்பு “தீரன் அதிகாரம் ஒன்று” கார்த்திக் சிவகுமார் உடன் இணைந்தார் மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “என்ஜிகே” படத்தில் நடித்து தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்தார். தனது குழந்தைத்தனமான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

விருதுகள்

இவர் இந்தியில் நடித்த “கிக் 2” திரைப்படத்திற்காக புகழ்பெற்ற நடிகைக்கான விருதைப் பெற்றார். அதே வருடம் வெளிவந்த “புரூஸ் லீ பைட்டர்” என்ற திரைப்படத்திற்கும் இவர் புகழ்பெற்ற நடிகைக்கான விருதை பெற்றார். இதைத் தொடர்ந்து சில விருதுகள் மற்றும் அறுபத்தி நான்காவது தென்னிந்திய விருதையும் தனது நடிப்பிற்காக பெற்றுள்ளார்.

மேலும் படிக்க – கங்கனா ரனாவத் வாழ்க்கை முறைகள்..!

இந்தியன் 2

இந்த வருடம் “அயலான்” மற்றும் அடுத்த வருடம் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய மெலிந்த உடல் தோற்றம், அழகிய புன்னகை மற்றும் குழந்தைத்தனமான நடிப்பின் மூலமாக படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பல படங்களில், பல மொழிகளில் நடித்து வருகிறார்.

ரகுல் ப்ரீத் சிங் இன்னும் பல படங்களில் நடித்து எல்லா ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதை தவிர்த்து இன்னும் ஏராளமான படங்களை அவர் தமிழில் நடிக்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன