நடிகையர் திலகம் ராதிகா அவர்களின் வாழ்வியல் ஒரு பார்வை..!

lifestyle of actress radhika

கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான ராதிகா அவர்கள் ஆரம்பத்தில் இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழில் பல படங்களில் நடித்து வெற்றியும் அடைந்தத இவர் ரஜினி, விஜயகாந்த், மோகன் என அக்காலத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப் படங்களை தந்துள்ளார்.

ராதிகா சரத்குமார்

இவர் நடிகையாக அறிமுகமாகி, இப்போது மெகா தொடர்களை தயாரித்து நடித்து வருகிறார். அதை தவிர்த்து தனியார் தொலைக்காட்சி நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு நீதிபதியாகவும் மற்றும் கோடீஸ்வரி என்ற பெண்கள் சம்பந்தமான விளையாட்டுப் போட்டியின் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இவர் செய்த திருமணம் தோல்வியில் அடைந்ததனால் கடைசியாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்தார். இந்த உறவு பல வருடங்களாக நீடித்து இன்றும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க – கடினமான வாழ்க்கையை கடந்து வந்த தமிழ் கதாநாயகர்கள்..!

ராதிகா சரத்குமாரின் வருமானம்

இவர் ஒரு படத்திற்கு 10 லட்ச ரூபாயை சம்பளமாக பெறுபவர். இவரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 120 கோடி. இதைத் தவிர்த்து இவர் மெகா தொடர், தனியார் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகள், திரைப் படத்தில் நாயகனுக்கு அம்மா என ஏராளமான வழியில் நாளுக்கு நாள் தன் வருமானத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.

ராதிகாவின் கார் கலெக்ஷன்

ராதிகா சரத்குமார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கார்களில் வலம் வருகிறார். அவரிடம் ரேஞ்ச்ரோவர், பென்ஸ் இ கிளாஸ், நிசான் எஸ்யூவி, பஜிரோ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜீப் கிரண்ட் செரோகே போன்ற கார்களை வைத்துள்ளார்கள். ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றார்போல் இவர் இவரின் கார்களை பயன்படுத்துகிறார்.

மேலும் படிக்க – ஆளுமையுடன் அழகு கொண்டபிரியங்காவின் வாழ்வியல்

ராதிகா சரத்குமாரின் குடும்பம்

இவர் சென்னையில் வசித்து வருபவர் இவருக்கான பங்களாவும் சென்னையில் இருக்கிறது. அதே சமயத்தில் சரத்குமார் அவர்களின் பங்களாவில் இவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர் நடிகர் பிரதாப்பை முதலாக திருமணம் செய்தார், அதன்பிறகு ஹார்டி என்ற வெளிநாட்டவரை இரண்டாவது திருமணம் செய்து இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறாள். அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு ராதிகா, சரத்குமார் அவர்களை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். இன்று வரை இவர்களின் உறவு வலுவாக இருக்கிறது.

ராதிகா சரத்குமார் ராடன் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலமாக திரைப்பட தயாரிப்புகள், மெகாத்தொடர் தயாரிப்பு என பல பிரிவில் தொழிலதிபராக வலம் வருகிறார். இதற்கான அலுவலகமும் பெரிதாக சென்னையில் அமைத்துள்ளார்.

மேலும் படிக்க – ஸ்ருதிஹாசனின் வாழ்க்கை முறைகள் பிடித்தது பார்போம்

இவர் நடிப்புக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக இதுபோன்ற தயாரிப்புத் துறையிலும் பெரிதாக சாதிப்பார் என்று இவரை வாழ்த்துகிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன