நடிகை நதியாவின் வாழ்க்கை முறை..

  • by
lifestyle of actress nadhiya

“பூவே பூச்சூடவா” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தன் கதாபாத்திரத்தின் மூலமாக எல்லோர் மனதுக்குள் நுழைந்த நடிகை நதியா தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த இவர் அக்காலத்தில் மிகப் பெரிய நடிகையாக இருந்தார். இன்றும் இளமையான தோற்றத்தைக் கொண்டிருக்கும் நடிகை நதியா கடந்துவந்த வாழ்க்கையை காணலாம்.

ஆரம்ப வாழ்க்கை

25 அக்டோபர் 1966 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் அமெரிக்காவை சேர்ந்த சிரிஷ் கோட்பால் என்பவரை 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நதியாவின் இயற்பெயர் சாரா மொய்தின். நதியாவின் தந்தை மொய்தின் இவர் இஸ்லாமியத்தை சேர்ந்தவர், இவரின் தாய் லலிதா இந்து மதத்தை சேர்ந்தவர் எனவே எந்த ஒரு மதத்திற்கும் பின்னால் செல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் வாழ்பவர்.

மேலும் படிக்க – கங்கனா ரனாவத் வாழ்க்கை முறைகள்..!

நதியா பெற்ற பட்டங்கள்

நதியா தனது பள்ளிப்படிப்பை மும்பையில் நிறைவு செய்து அதை தொடர்ந்து கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டார். இதற்குக் காரணம் மலையாளத்தில் “நோக்காத தூரத்து கண்ணும் நட்டு” என்ற திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக மோகன்லால் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பத்மினி நடித்திருந்தார். இதைதான் 1985 ஆம் ஆண்டு “பூவே பூச்சூடவா” என்று தமிழில் வெளிவந்தது.

சினிமா உலகம்

1984 ஆம் ஆண்டு மலையாள மொழியில் அறிமுகமான இவர் அடுத்த வருடமே நான்கு மலையாள படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, “நோக்காத தூரத்து கண்ணும் நட்டு” என்ற படத்தை தமிழில் “பூவே பூச்சூடவா” என்று எடுத்து அதில் நதியா நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து “மந்திரப்புன்னகை”, “உயிரேஉனக்காக”, “சின்னதம்பி பெரியதம்பி” போன்ற படங்களில் நடித்து வெற்றிப் படமாக மாற்றினார். 1989ஆம் வருடம் ரஜினிகாந்துடன் இணைந்து “ராஜாதி ராஜா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு அடுத்த ஐந்து வருடங்களில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தார் அவர் 1994 ஆம் ஆண்டு “ராஜகுமாரன்” என்ற படத்தில் நடித்து கிட்டத்தட்ட பத்து வருடத்திற்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டு “எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி” என்ற படத்தில் நடித்திருந்தார். மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. ஆனால் தன் முதல் படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருந்ததோ அதேபோல் இந்தப்படத்திலும் இளமையாக இருந்தார்.

இரண்டாம் கட்ட நடிப்பு

திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் குடிபெயர்ந்த நடிகை நதியா அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து மிகப் பெரிய இடைவெளி விட்டு “எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி” என்ற படத்தில் நடித்தார். பின்பு விஷால் நடிப்பில் வெளியான “தாமிரபரணி” என்ற படத்தில் வில்லியாக வந்தார். கடைசியாக அவர் “பட்டாலும்” மற்றும் “சண்டை” என்ற படத்தில் நடித்திருந்தார் கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு மேல் அவரின் படம் எதுவும் தமிழில் வெளிவரவில்லை.

மற்ற மொழிகளில் நடித்து வருகிறார்

தமிழ் இல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கில் இவர் இன்றும் பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2018 ல் வெளியான “நா பேரு சூர்யா” என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார், இப்போது “ஒரு ராத்திரி ஒரு பகல்”, “மிஸ் இந்தியா” போன்ற படங்களில் நடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

மேலும் படிக்க – பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் வாழ்க்கை முறைகள்..!

நதியாவின் விருதுகள்

எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான தோற்றத்தை கொண்ட நதியா தன்னுடைய இளமையை இன்றும் பாதுகாத்து வருகிறார். தான் நடித்த முதல் படத்தில் பிலிம்பேர் விருதைப் பெற்ற இவர் கடைசியாக “அட்டரின்டிகி தரெடி” என்ற படத்திற்கு நந்தி விருதை பெற்றார்.

தான் நடித்த முதல் படத்தில் நடிப்பதற்காக விருதைப் பெற்ற இவர் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்காமல் தன்னுடைய சுய வாழ்க்கைக்கு பின்னால் சென்றார். இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சில படங்களில் நடித்து பலபேர் மனதை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து சின்னத்திரையில் ஜெயா டிவி நடத்திய “ஜாக்பாட்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தன்னால் முடிந்த எல்லாவற்றையும் சிறப்பாக செய்த இவர் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே இவரின் ரசிகர்களின் கனவு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன