பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் வாழ்க்கை முறை..!

  • by
lifestyle of actress losliya

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக 100 நாட்களில் பிரபலமடைந்து இன்று ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த வருடம் இறுதியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதிப் போட்டி வரை சென்ற லாஸ்லியா போட்டியில் தோற்று இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்துள்ளார்.

காதல் கதை

ஒவ்வொரு வருடமும் தமிழ் பிக் பாஸில் ஏதாவது ஒரு காதல் கதை இருக்கும். அதுபோல்தான் இந்த வருடமும் லாஸ்லியா மற்றும் கவின் அவர்களின் காதல் கதையும் மக்களால் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. இதன் தாக்கத்தினால் இது லாஸ்லியா மற்றும் கவின் இருவருக்கும் ரசிகர்கள் அதிகரித்தார்கள். இப்படி தனது இயல்பு குணத்தினால் பிரபலமடைந்த லாஸ்லியா ஸ்ரீலங்காவில் பிறந்து வளர்ந்தவர். 

இவர் 22 மார்ச் 1996 ஆம் வருடம் ஸ்ரீலங்காவிலுள்ள கிளிநொச்சியில் பிறந்தார். இவர் ஓர் இலங்கை தமிழி. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்த இவர் அங்கு இருக்கும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையை சிறப்பாக செய்து அதன் மூலமாக அதே தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பதவி ஏற்றார். 2015 ல் இருந்து 2019 வரை இந்த வேலையை சிறப்பாக செய்து வந்தார். அப்போது தான் விஜய் டிவி கண்ணில் தென்பட்டார். உடனே கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று இறுதிப் போட்டி வரை சென்றார்.

மேலும் படிக்க – சிலம்பாட்டம் ஆடிய சிம்புவின் சீறிய வாழ்கை வரலாறு இதுதானுங்க..!

லாஸ்லியாவின் குடும்பம்

இலங்கை கிளிநொச்சியில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த இவர். இவரின் தாய் மற்றும் தந்தை இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் திருகோணமலைக்கு குடிபெயர்ந்தார்கள். அதே இடத்தில் லாஸ்லியாவும் தனது பள்ளிப் படிப்பை பயின்று வந்தார். பின்பு வேலைக்காக கொழும்புவில் தங்கியிருந்து வேலையைத் தேடினார். அப்போதுதான் அவர்களுக்கு சக்தி டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலை கிடைத்தது.

மேலும் படிக்க – நடிகையர் திலகம் ராதிகா அவர்களின் வாழ்வியல் ஒரு பார்வை..!

பிக்பாஸில் இணைந்தார்

வறுமையில் சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் ஒளியைப் போல் வந்தது பிக்பாஸ். நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு சம்பளத்தை தருவார்கள் இதனால் தன் குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்ற நம்பிக்கையுடன் வந்த லாஸ்லியா அவருக்கு குடும்ப கஷ்டம் தீர்ந்தது அவருக்கான சொந்தங்களும் பிக்பாஸ் இல்லத்தில் கிடைத்தது. இன்று மகிழ்ச்சியுடன் தனது வாழ்க்கையை கழித்து வரும் லாஸ்லியா வெள்ளித் திரையில் காண வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன