கங்கனா ரனாவத் வாழ்க்கை முறைகள்..!

  • by
lifestyle of actress kangana ranaut

கங்கனா ரனவத் வெறும் 32 வயதில் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற பெருமை வாய்ந்த நடிகை. இவர் 2008 ஆம் ஆண்டு “தாம் தூம்” திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதற்கு முன்பு இவர் ஒரு சில இந்தி படங்களில் நடித்து வந்தார். இவர் முதன்முதலில் “கேங்ஸ்டர்” என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதுவரை கிட்டத்தட்ட  3 தேசிய விருதுகள் மற்றும் நான்கு ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். இதை தவிர்த்து போப்ஸ் பத்திரிக்கையில் சிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் ஆறு முறை இடம் பிடித்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை

கங்கனா ரனாவத் 23 மார்ச் 1987 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பம்பலா என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது பத்தொன்பதாவது வயது முதல் சினிமாவில் நடித்து வரும் இவர் 32 வயதில் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளார். இவர் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகை மற்றும் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

மேலும் படிக்க – குக் வித் கோமாளி “சிவாங்கியின்” வாழ்க்கை முறை..!

தாம் தூம் முதல் மணிகர்ணிகா வரை

2006 ஆம் ஆண்டு “கேங்ஸ்டர்” படத்தில் அறிமுகமானாலும் தமிழில் 2008ம் ஆண்டு வெளிவந்த “தாம்தூம்” படத்தில் அறிமுகமானார். முதல் தமிழ்ப்படம் என்ற பதட்டமில்லாமல் நேர்த்தியான நடித்தார். அதைத் தொடர்ந்து அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை இடையே “கிரிஷ் 3” திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மணிகர்நிக என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.

பாலிவுட்டின் பிரபலம்

கங்கனா ரானஉட் “ஃபேஷன்”, “ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை” போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த “தனு வெட்ஸ் மானு” தான் மிகப் பிரபலமடைந்தது. பாலிவுட் வட்டாரத்தில் இவருக்கென ரசிகர்களை உருவாக்கிய திரைப்படம்தான் “தனு வெட்ஸ் மனு”. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் இவரின் நடிப்பிற்காக தேசிய விருதையும் பெற்றார்.

குயின்

“தனு வெட்ஸ் மனு” திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தனது முழு திறமையை வெளிப்படுத்திய திரைப்படம்தான் “குயின்”. இத்திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விட்டு வேலை தெரிந்த பெண் முதன் முறையாக இந்தியாவை விட்டு பாரிஸ் நகருக்குச் செல்கிறார். அப்போது அவர் பெறும் அனுபவங்களை அழகாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் குயின். இந்தத் திரைப்படத்தை காஜல் அகர்வாலை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் மீண்டும் எடுத்து வருகிறார்கள். இந்தத் திரைப்படம் இவருக்கான ஏராளமான விருதுகளை அள்ளி தந்தது.

தொடர் வெற்றி

அதைத்தொடர்ந்து “தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்”, “ரக்கூன்”, “சிம்ரன்” போன்ற படங்களை வெற்றிப் படமாக மாற்றினார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான “மணிகர்ணிகா” திரைப்படம் இவர் இயக்கினார். இது ஜான்சிராணி உடைய வாழ்க்கை வரலாறாகும்.

தலைவி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்படும் “தலைவி” படத்தின் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார் கங்கனா. இத்திரைப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் அவர்கள் இயக்கி வருகிறார். பெரிய இடைவெளிக்குப் பிறகு இவர் தமிழில் நடிக்கும் படம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வேறு கோணத்தில் காட்ட இருக்கும் இப்படம் எல்லோரும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க – குக் வித் கோமாளி புகழின் வாழ்க்கைமுறைகள்..!

பத்மஸ்ரீ விருது

இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதை இவர் இளம் வயதில் பெற்றார். இதை தவிர்த்து ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். எனவே தனது எளிமையான தோற்றத்தை ஏராளமான ரசிகர்களைக் கொண்ட கங்கனா ரனவத் இன்னும் மிக உயரத்திற்கு சென்று பல படங்களை தமிழுக்கு தரவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன