இணையத்தை கலக்கும் அனுஹாசனின் வாழ்க்கை முறை.!

  • by
lifestyle of actress anu hassan

“இந்திரா” படத்தின் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமான அனுஹாசன், “காபி வித் அனு” என்ற நிகழ்ச்சியின் மூலமாக மிகப் பிரபலம் அடைந்தார். அதைத்தொடர்ந்து “ஜஸ்ட் ஃபார் உமன்” என்ற வார இதழில் தனது கட்டுரையை எழுதி வந்த இவர் அதே நிறுவனத்தை சார்ந்த யூடியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஹாசன் குடும்பம்

கமலஹாசனின் அண்ணனான சந்திரனின் மகள்தான் அனுஹாசன். இவர் சுஹாசினி இயக்கத்தில் வெளியான “இந்திரா” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் 15 ஜூலை 1970 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார்.

மேலும் படிக்க – மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

அனுஹாசன்

இவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர், நடிகர் மற்றும் மற்றவர்களை ஊக்குவித்து பேசுவதில் வல்லவர். இப்படியிருக்கையில் “காபி வித் அனு” என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல விருந்தினர்களை மகிழ்ச்சி படுத்தினார். அதை தொடர்ந்து சமீபத்தில் இணையத்தில் பெரிதாக பேசி வரும் “ஜஸ்ட் பார் வுமன்” என்ற யூட்யூப் சேனலில் இவர் சமையல் தொகுப்பாளராக இணைந்துள்ளார். இந்த சேனலில் உரிமையாளர் சுஜித் குமார் அவர்களின் நெருங்கிய நண்பர் தான் அனுஹாசன். எனவே இவர்கள் மிகப்பெரிய சமையல் நிகழ்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியை மொத்தம் 12 தொகுப்புகளாக பிரித்து வெளியிட உள்ளார்கள்.

சினிமா வாழ்க்கை

1995ஆம் ஆண்டு “இந்திரா” படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். “ஆளவந்தான்” படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாகவும் “ரன்”, “நளதமயந்தி”, “ஆஞ்சநேயா”, “தாம்தூம்”, “சந்தோஷம் சுப்பிரமணி”, “சர்வம்”, “ஆதவன்” என பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். இப்போது தனது வாழ்க்கையை முழுமையாக சின்னத்திரை பக்கம் திருப்பி வைத்துள்ளார்.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் வாழ்க்கை முறை..!

இவர் சினிமாவில் கலக்கியதைவிட சின்னத்திரை மற்றும் இணையதளங்களில் அதிகமாகவே கலக்கியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இணைய தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். மிகப்பெரிய கலைஞர் குடும்பத்தில் பிறந்த இவரும் சிறந்த கலைஞர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். இவர் சமீபத்தில் தொகுத்து வரும் நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன