யோகிபாபு-வின் வாழ்க்கை வரலாறு..!

  • by
lifestyle of actor yogi babu

2009ஆம் ஆண்டில் வெளிவந்த “சுப்பிரமணிய சிவா” இயக்கத்தில் “அமீர்” கதாநாயகனாக நடித்த “யோகி” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததினால் இவரின் பெயர் யோகிபாபு என்று வைத்துக்கொண்டார்.  இந்தப் படத்தைத் தொடர்ந்து வெவ்வேறு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு, 2014 ஆம் ஆண்டு வெளியான “யாமிருக்க பயமே” என்ற படத்தின் மூலமாக பிரபலமடைந்தார். அந்தப்படத்தில் “பன்னி மூஞ்சி வாயா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரின் நகைச்சுவை எல்லோரும் ரசிக்கும் வகையில் இருந்தது. படத்தில் மொத்தத்தில் இரண்டு நிமிடத்திற்கு வரும் இவரின் காட்சியை இவரின் வாழ்க்கையை திருப்பி போட்டது என்று சொல்லலாம்.

காமெடி நாயகன் யோகிபாபு 

ஜூன் 22, 1985 ஆம் ஆண்டு பிறந்த இவரின் தந்தை ஓர் இராணுவ அதிகாரி. இதனால் இவர் பள்ளிப்படிப்பை ஜம்முவில் படுத்திருந்தார். முதல் முதலில் இவரை சித்தார்த் சிவசாமி என்பவர் தனது நண்பர் நிகழ்ச்சியான “லொள்ளுசபா” விற்கு அழைத்துச் சென்றார். அங்கே இயக்குனர் ராம்பாலா இவரைப் பார்த்து நடிக்க அழைத்தார். லொள்ளுசபா நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நகைச்சுவை வசன எழுத்தாளராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து பணியாற்றினார்.

மேலும் படிக்க – சிலம்பாட்டம் ஆடிய சிம்புவின் சீறிய வாழ்கை வரலாறு இதுதானுங்க..!

வாழ்க்கையை மாற்றிய படம்

யோகி பாபு திரை உலகிற்கு அறிமுகமான பிறகு பலராலும் பார்க்கப்படாமல் இருந்தார், ஆனால் “யாமிருக்க பயமே” என்ற படத்தின் மூலமாக பிரபலமடைந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த “மான்கராத்தே” திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. அதைத்தொடர்ந்து இந்தியில் “சென்னை எக்ஸ்பிரஸ்”, “வேதாளம்”, “காக்கா முட்டை”, “ஆண்டவன் கட்டளை” என வெவ்வேறு கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். அதிலும் “ஆண்டவன் கட்டளை” என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் நகைச்சுவைக்காக ஆனந்தவிகடன் விருதுகளை பெற்றுள்ளார்.

பிரபல நடிகர்களுடன் யோகிபாபு

யோகி பாபு பார்ப்பதற்கு சினிமா நடிகர் போல் இல்லை என்றாலும் அவர் வசன உச்சரிப்பு மற்றும் தோற்றம் அவரை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மாற்றியது. இதைத்தொடர்ந்து பெரிய கதாநாயகன், பெரிய இயக்குனர்கள் என எல்லா படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் விக்ரமுடன் “ஐ”, அஜித்துடன் “வேதாளம்”, விஜயுடன் “பிகில்”, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “தர்பார்” போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

மேலும் படிக்க – நடிகையர் திலகம் ராதிகா அவர்களின் வாழ்வியல் ஒரு பார்வை..!

யோகி பாபுவின் வருமானம்

யோகி பாபு சென்னையில் தனக்கென ஒரு மாளிகையை கட்டி வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு நாளுக்கு 5 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறார். இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடி ஆகும். இவர் 2016 ஆம் ஆண்டு மட்டும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.

கதாநாயகனாக யோகி பாபு

பல படங்களில் நகைச்சுவை நாயகனாக வலம் வந்த யோகிபாபு “கோலமாவு கோகிலா” என்ற படத்தில், தான் கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு அவரின் கதாபாத்திரம் இருந்தது. அதைத் தொடர்ந்து என் “ஆளோட செருப்ப காணோம்” என்ற படத்தில் இன்னொரு கதாநாயகன் என்று சொல்லலாம், அப்படியிருந்தது இவரின் கதாபாத்திரம். இப்படியெல்லாம் இருந்தாலும் “பரியேறும் பெருமாள்” படத்தின் மூலமாக தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் இவர். அதைத் தொடர்ந்து முதன்முதலில் முழுநேர கதாநாயகனாக “தர்மபிரபு” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து “கூர்க்கா” படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி அடையாவிட்டாலும், போதுமான வெற்றியை கண்டது.

மேலும் படிக்க – வெற்றி நாயகர் தனுஷின் வாழ்வியல் வழக்கங்கள்

வாழ்வியல் முறை

யோகி பாபு “இனோவா கிருஷ்டல்” என்ற கார் வைத்திருக்கிறார். இதை சமீபத்தில் வாங்கிய புகைப்படங்கள் இணையதளங்களில் வலம் வருகின்றன. அதேபோல் இவரிடம் “ஜிப் காம்பஸ்” என்ற காரும் இருக்கிறது. தேவைக்கு ஏற்ப வாகனங்களை வைத்துள்ள இவர் திரைப்படம் நடிப்பதுதான் முழுநேர தொழிலாக வைத்துள்ளார்.

சாதாரண வாழ்க்கையில் இருந்து பிரபலமாகி மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் யோகிபாபு இல்லாத திரைப்படங்கள் என்பதை காண்பது அரிதாகி வருகிறது. அத்தகைய தனது நடிப்பின் மூலமாக எல்லா படங்களிலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பதித்து விடுகிறார். மற்ற காமெடி நடிகர்களை ஒப்பிடுகையில் தனக்கென தனி வசன உச்சரிப்பு, மட்டும் தனி தோற்றத்தை கொண்டுள்ளதால் இவர் ஒரு வெற்றிகரமான நடிகராக இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன