விஜய் சேதுபதியின் வாழ்வியல் முறைகள்..!

lifestyle of actor vijay sethupathi

தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடுவது என்பது ஆழ்கடலில் இருக்கும் முத்துக்களை தேடுவதற்கு சமம். ஒவ்வொரு வருடங்களும் ஒவ்வொரு கிராமங்களிலிருந்து ஆண்-பெண் பாராமல் பலரும் கோடம்பாக்கத்திற்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்கள், ஆனால் எல்லோரும் வெற்றி அடைவதில்லை. இதற்கு மாறாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி எப்படி வெற்றி அடைந்தார் என்பதை சுருக்கமாக காணலாம்.

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் ஒருவர் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் அவர் ஏகப்பட்ட அவமானங்கள் மற்றும் கஷ்டங்களை சந்திக்க நேரிடும். அதிலும், அவர் கதாநாயகனாக வரவேண்டுமென்றால் அவரின் தோற்றமும் உயரமும் உடல் வாகும் இயற்கைக்கு மாறாக இருக்க வேண்டும். ஆனால் இது எதுவும் இல்லாமல் மிக எளிமையான தோற்றத்தை கொண்ட விஜய் சேதுபதி முதன்முதலில் 2006இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர் திரையில் அற்புதமாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் இந்தப் படத்தில் எல்லாம் நடித்தார் என்பதே இவருக்கு கிடைத்த வெற்றி படங்கள் மூலமாக தான் அவரை திரும்பி பார்க்க வைத்தது.

மேலும் படிக்க – விக்னேஷ் சிவனின் வாழ்க்கை தொடக்கம்..!

சீனு ராமசாமி இயக்கத்தில் 2010இல் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் கதாநாயகியாகனாக அறிமுகமானார். கிராமத்துப் பின்னணி என்பதால் கதாநாயகனை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். இருந்தாலும் இந்த படத்தில் அவரின் நடிப்பும் முதல் படம் போல் இல்லாமல் அற்புதமாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படங்களில் நடித்து வெற்றியும் அடைந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் அதிகமானது. இவரின் நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சூதுகவ்வும் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் நான்கு கதாநாயகர்களில் ஒரு கதாநாயகன் என்றாலும் தனக்கான முத்திரையை ஆழமாகப் பதித்தார். இதைத் தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்திருந்தார் அதிலும் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்தும் வந்தார். சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஒவ்வொரு படத்திலும் பதித்து வந்தார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், ஜிகர்தண்டா என தொடர்ந்து வெற்றிப்படங்களை அளித்தார். இதில் கதாநாயகன், துணை கதாநாயகன், சிறிய வேடம் என தன் நடிப்பின் மூலமாக எல்லா இடத்தையும் பூர்த்தி செய்தார். நானும் ரவுடிதான் படத்தின் அழகிய காதலனாகவும், சேதுபதி திரைப்படத்தின் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், விக்ரம்வேதா என்ற படத்தில் வெறித்தனமான வில்லனாகவும் நடித்திருந்தார். என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் ஆழத்திற்கு சென்று அற்புதமான முறையில் நடித்துக் கொடுத்து இருந்தார். அதேபோல் சிறிய வேடம், வில்லன், துணை கதாநாயகன் என எதுவாக இருந்தாலும் நடித்திருந்தார்.

சினிமாவில் தன் பங்கிற்கு எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை என்ற திரைப்படத்தை தயாரித்தார். படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை பொருத்து இது வசூல் ரீதியாக வெற்றி அடையாது என்ற எண்ணம் இருந்தாலும் தரமான திரைப்படத்தை தயாரித்த பெருமை போதும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை தயாரித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜூங்கா படத்தை தயாரித்தார். அது அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை.

மேலும் படிக்க – “கொலவெறி” அனிருத் ரவிச்சந்திரனின் வாழ்க்கை.!

இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றிகளை குவித்தாலும் ஒருசில படங்கள் படு தோல்விகளும் அடைந்துள்ளது. இருந்தாலும் தன்னால் முடிந்தவரை தன் கதாபாத்திரத்தில் வித்தியாசங்களை பொருத்து சிறப்பாக நடித்து வந்தார் அதிலும் அவர் பெரிய இயக்குனர்களான மணிரத்தினம், கே வி ஆனந்த், தியாகராஜன் குமாரராஜா போன்றவர்களின் இயக்கத்திலும் நடித்திருந்தார்.

மாநகரம் கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ அவரின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் விஜயை வைத்து இயக்குகிறார். இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்த செய்தியை வெளியிட்டு நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் விஜய்சேதுபதி இன்னும் பல மடங்கு உயரத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எங்களின் விருப்பம், எனவே அவருக்கு எங்கள் குழுவின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன