மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

  • by
lifestyle of actor vijay sethupathi

மக்கள் செல்வன் என்று அன்பாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி இன்றைய தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவ்வளவு உயரத்திற்கு வருவதற்காக இவர் ஏகப்பட்ட தியாகங்களை செய்துள்ளார். தனது இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய எல்லா ஆசைகளையும் மறைத்துக் கொண்டு வெற்றியை நோக்கி ஓடியவர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலமாக நாயகனாக உருவெடுத்தார்.

விஜய் சேதுபதியின் ஆரம்பகால வாழ்க்கை

16 ஜனவரி 1978 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் பிறந்தவர் இவர். ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது சென்னை எண்ணூரில் குடிபெயர்ந்தார். அங்கிருந்து கோடம்பாக்கத்தில் உள்ள எம் ஜி ஆர் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்த பின்பு ஏஞ்சல் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் படித்தார்.

அதைத்தொடர்ந்து சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். தனது வறுமையின் காரணமாக உணவகத்தில், கடைகளில் மற்றும் தொலைபேசி கடைகளில் வேலை செய்து வந்தார் அப்படியே தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். பிறகு ஓர் சிமென்ட் கம்பெனியில் கணக்காளராக வேலைக்கு சேர்ந்தார். அவர் உடன் பிறந்தவர்களின் நலனை கருதி துபாய்க்கு வேலைக்கு சென்றார். இந்தியாவில் கிடைப்பதை விட நான்கு மடங்கு சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் அங்கு இரண்டு வருடங்கள் வேலை செய்து 2003ம் ஆண்டு ஜெஸ்ஸி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

மேலும் படிக்க – தளபதி விஜய் கடந்து வந்த பாதையும் அவரின் வாழ்க்கை முறையும்.!

சினிமா பயணம்

நடிகர் விஜய் சேதுபதி சென்னையிலேயே தங்கி சிறு சிறு தொழில்களை செய்து வந்தார். அதில் எதிலும் வெற்றி காண முடியாமல் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சிக்கு சென்றார். அங்கிருந்து நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும் படங்களில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து “நான் மகான் அல்ல” “புதுப்பேட்டை” போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் கதாநாயகனாக உருவெடுத்தார்.

அதைத்தொடர்ந்து “சுந்தரபாண்டியன்”, “பீட்சா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” போன்ற படங்களை வெற்றிப்படமாக மாற்றினார்.

சினிமாவின் ஆழத்திற்கு சென்றார்

அதன்பிறகு அவர் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, “பண்ணையாரும் பத்மினியும்” பிறகு “ஆரஞ்சு மிட்டாய்” என்ற படத்தை தயாரித்தார். ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். “விக்ரம்வேதா” என்ற படத்தில் வில்லனாகவும், “96” படத்தில் காதலனாகவும், “சேதுபதி” படத்தில் கடமை தவறாத போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தோற்றமாக இருந்தாலும் அதை கச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தும் வகையில் நடித்துக் கொடுத்தார்.

“தர்மதுரை”, “ஆண்டவன் கட்டளை”‘ “செக்கச்சிவந்த வானம்”‘ “சீதகாதி” என்ன தரமான படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்தார். இப்போது விஜய் நடிக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி “உப்பென”, “மாமனிதன்”, “லாபம்” போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க – சிலம்பாட்டம் ஆடிய சிம்புவின் சீறிய வாழ்கை வரலாறு இதுதானுங்க..!

முடிவில்லா பயணம்

சமீபத்தில் வெளியான அவேஞ்சர் திரைப் படத்தில் கதாநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி “ஜூங்கா”, “ஆரஞ்சு மிட்டாய்” போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவர் நாயகனாக ஒரு படத்திற்கு இரண்டு முதல் நான்கு கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார், அதிலும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்றால் சம்பளமில்லாமல் நடித்த படம் வெற்றியடைந்த பிறகு தன் சம்பளத்தை வாங்குகிறார். அதை தவிர்த்து திரைக்கதை மற்றும் கதை எழுதுவதிலும் கவனத்தை செலுத்தி வருகிறார் என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் விஜய் சேதுபதி தன்னலம் இல்லாமல் திறமையை நம்பி வாழ்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன