விஜய் தேவர் கொண்டாவின் வாழ்க்கை முறைகள்..!

  • by
Lifestyle of actor vijay devarkonda

ஆண்கள் மனதை கொள்ளையடிக்கும் நாயகிகள் ஒவ்வொரு வருடமும் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் மனதைக் கொள்ளையடிக்கும் நாயகன் எப்போதாவது ஒருமுறைதான் தோன்றுவார்கள் அப்படி உருவான தென்னிந்திய நாயகன்தான் விஜய் தேவர்கொண்டா. இவர் தெலுங்கு பட உலகை சேர்ந்திருந்தாலும் இவருக்கு தமிழ்நாட்டிலும் ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள். எல்லா நாயகர்களை போல் சிறிய வேடத்தில் தொடங்கிய தன் வாழ்க்கைப் பயணம் இன்று எட்டாத உயரத்திற்குச் சென்று உள்ளது. இவரைப் பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

தேவர்கொண்டா குடும்பம்

அச்சம்பேட், மகாபங்க் நகர் டிஸ்ட்ரிக்ட், ஆந்திர பிரதேஷ்யில் 1989 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் கோவர்தன் தேவர்கொண்டா, இவரின் தாயின் பெயர் மாதவி தேவர்கொண்டா வாகும். இவருக்கு ஒரு சகோதரன் இருக்கிறார், அவர் பெயர் ஆனந்த் தேவர்கொண்டா.

மேலும் படிக்க – யோகிபாபு-வின் வாழ்க்கை வரலாறு..!

திரையுலக பயணம்

2011 ஆம் ஆண்டு “நூவெல்லா” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார் விஜய் தேவர் கொண்டா. அதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்” என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் வந்திருந்தார். ஆனால் வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாத விஜய் தேவர்கொண்டா “எவடே சுப்பிரமணி” என்ற படத்தின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தார். இதில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தனது நடிப்பு திறமையை வெளிக் காட்டி இருந்தார்.

“பெல்லி சப்பலு” என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே விருதையும் தட்டிச் சென்றாது. இந்த படம் தெலுங்கு மொழியில் வெளியான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. இத்தகைய பெருமைக்குரிய இந்த படத்தில் நடித்த விஜய் தேவர்கொண்டா அதை தொடர்ந்து “அர்ஜுன் ரெட்டி” என்ற படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

மேலும் படிக்க – மனசுகுள்ள இருந்து பேசுவதுதான் சேரன்..!

தமிழ்ல் முதல் படம்

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் “நோட்டா” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். படத்தில் தனது பங்கை சிறப்பாக செய்த விஜய் தேவர்கொண்டா அவருக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக மாறியது. அதை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் “கீதா கோவிந்தம்” என்ற படத்தின் மூலமாக தெலுங்குப் உலகில் அதிக வசூல் சாதனை படைக்கும் நாயகர்களின் பட்டியலில் இணைந்தார்.

வெற்றி நாயகன்

“கீதா கோவிந்தம்” படத்தில் இவருக்கும் ரேஷ்மிகா மந்தானா இடையில் ஏற்பட்ட நெருக்கத்தின் மூலமாக இவர்கள் கூட்டணியில் அடுத்த திரைப்படம் உருவானது. “நீ நகரணிகி ஏமைந்தி”, “மகாநதி”, “டாக்ஸிவாலா”, “டியர் காம்ரேட்”, “நேக்கும் மத்திரமே செப்தா” மற்றும் “வேர்ல்ட் ஃபேமஸ்” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க – தளபதி விஜய் கடந்து வந்த பாதையும் அவரின் வாழ்க்கை முறையும்.!

விஜய் தேவர் கொண்டா தனது தோற்றத்தின் மூலமாக பல ரசிக்க எங்களை இழுத்தாலும், தனது நடிப்புத் திறமை மூலமாக பல ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் இன்னும் பல வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய நாயகனாக உருவாக வேண்டும் என்று நம்முடைய குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன