நம்ம வீட்டு பிள்ளை “சிவகார்த்திகேயன்” வாழ்க்கை முறை.!

  • by
lifestyle of actor sivakarthikeyan

ஒருவர் ஏதாவது ஒரு துறையில் வெற்றி அடைய வேண்டுமென்றால் அத்துறையை சார்ந்த ஏதேனும் ஒரு பிரபலத்தின் நட்பு அல்லது சிபாரிசுகள் அவர்களுக்குத் தேவையாக இருக்கும். ஆனால் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது திறமையால் தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியடைந்து ஏராளமான படங்களில் நடித்து இப்போது ஒரு தயாரிப்பாளராக உயர்ந்து நிற்கும் நாயகன்தான் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் ஆரம்பம்

சிவகார்த்திகேயன் சிவகங்கையில் உள்ள சிங்கம்புணரி என்ற கிராமத்தில் 17 பிப்ரவரி 1985 ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்லூரியில் நடக்கும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு பெற்று அதில் மிமிக்ரி செய்து தனக்கான ரசிகர்களை உருவாக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தனது நண்பர்களின் அறிவுறுத்தினாள் கல்லூரிப் படிப்பிற்க்கு இடையில் விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.

மேலும் படிக்க – இறுதிச்சுற்று ரித்திகா சிங் வாழ்க்கை முறை.!

கதாநாயகனான சிவகார்த்திகேயன்

தனது மிமிக்கிரி திறமையினால் சிறந்த காமெடியன் என்ற விருதைப் பெற்ற இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதைத்தொடர்ந்து முதன்முதலில் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் “மெரினா” திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை நன்கு பயன்படுத்திய சிவகார்த்திகேயன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருந்தார். அதே வருடம் “மூனு” என்ற திரைப்படத்தில் தனுஷ் அவர்களின் நண்பனாக நடித்திருந்தார். பின்பு எழில் இயக்கத்தில் “மனம் கொத்திப் பறவை” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் கதாநாயகனான தோற்றம் மற்றும் உடலமைப்பு சிவகார்த்திகேயனுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழும்பியது.

வெற்றியை ரசித்த சிவகார்த்திகேயன்

2013ம் ஆண்டு “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “எதிர்நீச்சல்” மற்றும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படங்கள் வெளியாகின. இதில் “எதிர்நீச்சல்” வசூல் ரீதியாக மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. சூரி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சேர்ந்து செய்த காமெடிகள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவியது. அதைத்தொடர்ந்து “மான்கராத்தே”, “காக்கி சட்டை”, “ரஜினிமுருகன்” போன்ற படங்களில் நடித்திருந்தார். இவரின் படங்கள் ஏற்ற இறக்கம் கண்டு வெற்றி, தோல்விகளை பெற்றிருந்தது.

மேலும் படிக்க – ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

வசூல் சாதனை படைத்தார்

நாயகனாக நடிக்க தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் வகையில் “ரெமோ’ மற்றும் “வேலைக்காரன்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதன் மூலமாக மிகப் பெரிய நாயகர்களின் பட்டியலில் இணைந்தார். பின்பு “சீமராஜா”, “மிஸ்டர் லோக்கல்” போன்ற படங்கள் இவருக்கு தோல்வியாக அமைத்திருந்தாலும், “நம்ம வீட்டு பிள்ளை”, “ஹீரோ” போன்ற படங்களில் மூலமாக மீண்டும் வெற்றிப் பாதைக்குல் நுழைந்துள்ளார்.

தயாரிப்பாளர் மற்றும் பாடகர்

நெல்சன் உதயகுமார் இயக்கத்தில் நடிகை “ஐஸ்வர்யா ராஜேஷ்” மற்றும் “சத்யராஜ்” அவர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த “கனா” திரைப்படத்தை தயாரித்தவர் சிவகார்த்திகேயன். இதைத் தவிர்த்து இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறந்த தயாரிப்பாளர் என பல விருதுகளைப் பெற்ற இவர் இப்படத்தை தெலுங்குலும் “கானா” உரிமையைப் விற்றார். இதனால் “கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி” என்ற பெயரில் இப்படம் தெலுங்கு மொழியிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ரியோ ராஜ் மற்றும் விக்னேஷ் அவர்கள் நடித்திருந்த “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற படத்தையும் தயாரித்தார். இதைத் தவிர்த்து “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “மிஸ்டர் லோக்கல்” வரை பல பாடல்களை பாடியுள்ளார். “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் “கல்யாண வயசு” என்ற பாடலை எழுதி இருந்தார்.

மேலும் படிக்க – மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

சாதாரண நகைச்சுவை தொகுப்பாளராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் தனது திறமையை வெளி காட்டிய சிவகார்த்திகேயன் இன்று எழுத்தாளர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என மிகப் பெரிய உயரத்திற்கு சென்றுள்ளார். இதை தவிர்த்து இவருக்கு நாளுக்கு நாள் ஏராளமான ரசிகர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். திலீப் குமார் இயக்கத்தில் “டாக்டர்” என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். எனவே இத்திரைப்படம் வெற்றியடைய மற்றும் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை வருகிற 17ம் தேதி கொண்டாட இருக்கிறார் எனவே இவருக்கு எங்கள் குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன