சிலம்பாட்டம் ஆடிய சிம்புவின் சீறிய வாழ்கை வரலாறு இதுதானுங்க..!

Lifestyle of Actor Silambarasan and his New style

சிம்பு என்கிற சிலம்பரசனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இவரைப் பற்றிய பிரச்சினைகள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் இது அனைத்திற்கும் மேலாக இவர் ஒரு சிறந்த கலைஞர் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். சிம்பு ஓர் சினிமா நட்சத்திரமாக மட்டுமல்லாமல் சமூக பிரச்சினைகளிலும் அதிகமாக குரல் கொடுத்தவர். இவர் கடந்து வந்த பாதையைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் இதுதான் சிம்புவின் இயற்பெயர். பிப்ரவரி 3, 1983 ஆம் ஆண்டு பிறந்தார். பிறந்த ஒரே வயதில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இவர் 2002 ஆம் ஆண்டு தனது தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் தனது தாய் உஷா தயாரிப்பில் வெளியான “காதல் அழிவதில்லை” என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.

மேலும் படிக்க – உலக நாயகனின் வாழ்வியல் குறிப்புகள் அறிவோம் !

பல கலைகளை கற்ற கலைஞன்

சிலம்பரசன் நடிகர் மற்றும் அல்லாமல் பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், நடனம் ஆடுபவர் மற்றும் சமூக போராட்டங்களில் ஈடுபாடு கொண்டவர் என பல அவதாரங்களை இவர் எடுத்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே இவரின் பெயர் கெடும்படி பல சம்பவங்கள் நடந்து வந்தது, அதற்கு ஏற்றார்போல் இவருக்கு எதிராக பல வழக்குகள் பதியப் பட்டது. இருந்தாலும் இது அனைத்தையும் பொருட்படுத்தாமல் தனது சினிமா வாழ்க்கையை தான் நினைத்ததை போல் நடத்தி வருகிறார் சிலம்பரசன்.

காதல் நாயகன் சிம்பு

இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல காதல் கதைகள் இருந்தாலும் உண்மையான காதலை இன்று வரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருபவர். காதல் அனுபவங்களை அதிகமாக கொண்டிருப்பதினால் இவர் நடிக்கும் படங்களில் காதல் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.

கோவில், தொட்டி ஜெயா, மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா என்று செக்கச் சிவந்த வானம் வரை இவர் பல வெற்றி படங்களை தந்துள்ளார். இதில் வல்லவன் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

தனக்கென ஒரு ஸ்டைல் அமைப்பை கொண்டுள்ள சிலம்பரசன் தன் வாழ்க்கையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ரசிகர்களை சம்பாதித்துள்ளார். ஆனால் தற்போது பல பிரச்சினைகளுக்கு இடையே இவர் நடித்துவரும் மாநாடு திரைப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு சந்தோஷப்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க – கடினமான வாழ்க்கையை கடந்து வந்த தமிழ் கதாநாயகர்கள்..!

சிம்புவின் வருமானம்

இவர் ஒரு படத்திற்கு சராசரியாக 5 லிருந்து 8 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 250 கோடிகள் வரை இருக்கும். டி நகர் மாசிலாமணி தெருவில் இருக்கிறது இவரின் வீடு. சென்னையில் பிறந்த இவர் தனது படிப்பை டான் பாஸ்கோ, சீனி வேளாங்கண்ணி, செஞ் ஜான்ஸ், சாந்தோம் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ன பல பள்ளிகளில் படித்துள்ளார். லயோலா கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்து முழுநேர தொழிலாக சினிமாவில் இறங்கினார்.

சிம்புவின் வாகனங்கள்

சிம்புவிடம் ஏகப்பட்ட கார் மற்றும் பைக்குகலள் இருக்கின்றன அதில் இவருக்கு மிகப் பிடித்தமான பிஎம்டபிள்யூ எக்ஸ் 6, ஆடி கியு 7 மற்றும் பிஎம்டபிள்யூ பைக் இருக்கிறது. இதைத் தவிர்த்து ஏராளமான வாகனங்களை வைத்து இருக்கிறார்.

மேலும் படிக்க – ஆளுமையுடன் அழகு கொண்டபிரியங்காவின் வாழ்வியல்

விருதுகள்

இவர் 2006 ஆம் ஆண்டு கலைமாமணி விருதை தமிழக அரசின் மூலமாக பெற்றார். அதை தவிர்த்து நடிப்புக்கும், நடனத்திற்கும், பாடலுக்காகவும் இவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இவருக்கு மிகப் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் குமார். இப்போது சிலம்பரசன் தனது அடுத்த படமான மாநாடு திரைப்படத்திற்காக தனது தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளார் அதன் முழு விவரம் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

காவிரி பிரச்சினை மூலமாக குரல் கொடுத்து சிலம்பரசன் சாதாரண நடிகர் மட்டுமல்லாமல் மக்களின் வலியை புரிந்து கொள்ளும் நல்ல மனிதர் என்ற பெயரை பெற்றார். இவருக்கு எதிராக இருப்பவர்கள் இவரைப்பற்றி குறைகூறிக் கொண்டே இருந்தாலும் இவர் உண்மையில் ஒரு சமூக அக்கறையுள்ள கலைஞன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன