பருத்திவீரன் “கார்த்திக்” வாழ்க்கை முறைகள்..!

  • by
lifestyle of actor karthi

அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு “பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. அறிமுகமான முதல் படத்திலேயே புதுவிதமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து தனது முழு திறமையை வெளிக்காட்டி சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதை பெற்றார். முதல் படத்திலே வெற்றியடைந்த கார்த்தியின் வாழ்க்கைமுறையை இப்பதிவில் காணலாம்.

ஆரம்ப காலம்

நடிகர் சிவக்குமார் மற்றும் லட்சுமி அவர்களுக்கு 25 மே 1977 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் . இவர் கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் தனது இலைகளை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து முதுகலை பட்டப்படிப்பை அமெரிக்காவில் தொழிற்சாலை பொறியியலை படித்தார். அச்சமயத்தில் இவர் சினிமாவில் உள்ள ஆர்வத்தினால் திரைப்பட இயக்கத்தை பற்றிய பகுதி நேர படிப்பையும் படித்தார். சிறு வயது முதல் அவருக்கு சினிமாவில் அதிக அளவிலான ஆர்வம் இருந்ததினால் அவர் சினிமாவில் நுழைய தன் தந்தையிடம் கேட்டுள்ளார், ஆனால் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக உனக்கென ஏதாவது படிப்பை படித்து கொள் என்று அவரை பொறியியல் படிக்க வைத்தார்.

மேலும் படிக்க – வெகு விரைவில் பெரிய திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!

சினிமாவின் முதல் நாள்

ஆரம்பத்தில் திரைப் படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்த நடிகர் கார்த்தி முதன்முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு தனது அண்ணன் நடித்த ஆயுத எழுத்து திரைப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் தனது அண்ணனின் தோழனாகவும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்த “பருத்திவீரன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்த இத்திரைப்படம் கார்த்தி வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாக இருந்தது. தனது முதல் படத்தின் வரிசையில் தனது இரண்டாவது படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கினார். தமிழக பண்டைய வரலாற்றை பற்றி கூறும் வகையில் எடுக்கப்பட்ட “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் கூலித் தொழிலாளர்களாக நடித்திருந்தார். இறுதியில் அவர்தான் சோழ நாட்டின் ராஜகுருவாக உருவெடுத்து அடுத்த தலைமுறையை காப்பாற்றுவார். இது போன்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நடித்த கார்த்தி வாழ்க்கை படிப்படியாக உயர்ந்தது.

சினிமா வாழ்க்கை

“நான் மகான் அல்ல”, “சிறுத்தை” போன்ற வெற்றிப்படங்களை அளித்த கார்த்திக்கிற்கு தொடர்ந்து சில தோல்விப் படங்களும் அமைந்தது. பிறகு 2011 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதைத்தொடர்ந்து “கொம்பன்”, “தோழா”, “காற்றுவெளியிடை”, “தீரன் அதிகாரம் ஒன்று” போன்ற படங்களை வெற்றிப்படமாக மாற்றினார்.

வசூலைக் குவித்து வரும் கார்த்திக்

“கடைக்குட்டி சிங்கம்” திரைப்படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டாலும் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. அத்திரைப்படத்தை இயக்கியவர் பாண்டிராஜ். பிறகு சமீபத்தில் வெளியான “கைதி” திரைப்படம் மீண்டும் கார்த்திக்கின் பழைய நடிப்பை வெளிக்காட்டியது. பாசம், கோபம், வீரம் என எல்லாவற்றையும் ஒன்றிணைத்து அற்புதமான நடிப்புத் திறனை வெளிக்காட்டி இருந்தார். கடைசியாக சித்து ஜோசப் இயக்கிய “தம்பி” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க – நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை முறைகள்..!

கார்த்திக்கின் குடும்பம்

நடிகர் சிவகுமாரின் மகனான கார்த்திக் தன் குடும்பத்தின் கடைசி மகனாகும். இவரின் சகோதரர் நடிகர் சூர்யா மற்றும் இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார் அவர் பெயர் பிருந்தா. 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமையாள் என்ற அழகிய 7 வயது மகளும் இருக்கிறார்.

நடிகர் கார்த்தி இயக்குனர் ஆவதை லட்சியம் என்று வாழ்ந்து வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக நடிப்புத் துறையில் நுழைந்து இப்போது ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். எனவே தன் பாதையை சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அமைத்துக்கொண்டு வெற்றி ருசித்த கார்த்தி சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். “மக்கள் நல மன்றம்” என்ற மக்களுக்கான உதவி செய்யும் மன்றத்தை துவங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இவரின் நடிப்பும் மற்றும் சமூக சேவையும் பெரிதளவில் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன