கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துல்கர் சல்மான்..!

  • by
lifestyle of actor dulquer salman

“ஓகே கண்மணி” படத்தில் நடித்ததன் மூலமாக இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த துல்கர் சல்மான் சமீபத்தில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” என்ற படத்தில் நடித்திருந்தார். மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்து இருந்தாலும் அதன் எதிர்பார்ப்பை அனைத்தும் போக்கும் வகையில் இத்திரைப்படம் அமைந்தது. தனது நடிப்பின் மூலமாக பல ரசிகர்களைக் கொண்டுள்ள துல்கர் சல்மானின் வாழ்க்கையை காணலாம்.

மம்முட்டியின் மகன்

28 ஜூலை 1986 ஆம் வருடம் நடிகர் மம்முட்டிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் துல்கர் சல்மான். தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் மம்முட்டியின் மகன் என்பதை நிரூபிக்கும் வகையில் தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார்.

மேலும் படிக்க – பருத்திவீரன் “கார்த்திக்” வாழ்க்கை முறைகள்..!

ஆரம்ப வாழ்க்கை

கேரளாவில் உள்ள கொச்சியில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை அங்கேயே நிறைவு செய்தார். பிறகு தனது பட்டப்படிப்பை அமெரிக்காவில் நிறைவுசெய்தார். அதன்பிறகு துபாய்க்குச் சென்று அங்கே தொழில்நுட்ப நிறுவனத்தை துவங்கினார், அதன் பிறகு மீண்டும் அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நடிப்பிற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். பின்பு “செகண்ட் ஷோ” என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

உஸ்தாத் ஹோட்டல்

2012 ஆம் ஆண்டு வெளியான “உஸ்தாத் ஹோட்டல்” திரைப்படம் இவருக்கு ஓர் அற்புதமான தொடக்கத்தை தந்தது. சமூக அக்கறை, சமூக சேவை போன்ற பல நல்ல விஷயங்களை கொண்டுள்ள இத் திரைப்படத்தில் சமையல் படிப்பை வெளிநாட்டில் படித்துவிட்டு அந்த வேலையை தனது ஊரில் செய்ய வந்திருக்கும் இளைஞராக நடித்திருந்தார். மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடையே உண்டாக்கிய இத்திரைப்படம் இவருக்கான முதல் பிலிம்பேர் விருதை பெற்றுத் தர உதவியது.

தமிழில் முதல் படம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான “வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தில் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் தமிழில் எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” திரைப்படத்தில் ஜெமினி கணேசனாக நடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த நான்காவது படமான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க – குக் வித் கோமாளி “சிவாங்கியின்” வாழ்க்கை முறை..!

சிறந்த மலையாள நடிகர்

இவர் மலையாளத்தில் “நீல கஷ்டம் பச்சைக் கடல் செவ்வக பூமி”, “சார்லி”, “காளி” “பெங்களூர் டேஸ்” போன்ற படங்களில் நடித்திருந்தார். இது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதை தவிர்த்து இவருக்கு பல விருதுகளை அள்ளி தந்தது.

இவரின் தோற்றத்தினால் எல்லோரையும் கவர்ந்து இப்போது நடிப்பின் மூலமாக பல சாதனைகளை செய்து வருகிறார். இவர் “குரூப்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவும் வெற்றியடைய எங்கள் குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன