தளபதி விஜய் கடந்து வந்த பாதையும் அவரின் வாழ்க்கை முறையும்.!

  • by
lifestyle and successful story of actor vijay

தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் தான் தளபதி விஜய். கடந்த சில வருடங்களாகவே இவர் நடித்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் 100 கோடியைத் தாண்டி மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது. இவர்தான் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் மற்றும் அதிகளவில் வசூலை பெறும் நடிகர்.

இளைய தளபதி விஜய் 

நடிகர் விஜய் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் சோபா இருவருக்கும் 22 ஜூன் 1974 ஆம் வருடம் பிறந்தார். அதன்பிறகு தனது தந்தை இயக்கத்தில் குழந்தை வேடங்களில் படங்களில் நடித்து வந்தார். இவர் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியதும் இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் அவர்கள். அதன்பிறகு விக்ரமன் இயக்கத்தில் வெளியான “பூவேஉனக்காக” என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தார். நாளடைவில் இவருக்கு இளைய தளபதி விஜய் என்ற பெயரும் கிடைத்தது.

மேலும் படிக்க – வெற்றி நாயகர் தனுஷின் வாழ்வியல் வழக்கங்கள்

விஜய்யின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படங்கள்

நடிகர் விஜய் கமர்சியலான திரைப் படங்களுக்கு முன்னுரிமை தந்து வந்தார். அதன் வரிசையில் திருப்பாச்சி, சிவகாசி, திருமலை போன்ற படங்கள் வெளிவந்தன ஆனால் இவர் வாழ்க்கையை திருப்பி போட்ட படம் எதுவென்றால் 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான “கில்லி” திரைப்படம் தான். அந்த வருடம் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்ற தமிழ்ப் படம் என்ற பெருமையை “கில்லி” படம் பெற்றது. பிரபுதேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

வெற்றி படங்களை குவித்தார்

இவரின் “காவலன்” “ஜில்லா” போன்ற படங்கள் வெற்றி அடைந்தாலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான “துப்பாக்கி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு தேடித்தந்தது. அது தவிர்த்து மிகப்பெரிய வசூலையும் இப்படம் ஈட்டியது. அதன் பிறகு விஜய் இயக்கத்தில் “தலைவா” என்ற படம் வெளியானது. இத்திரைப்படம் பல விமர்சனம் கன்டாலும், எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. அதன் பிறகு மீண்டும் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான “கத்தி” என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார், இதனால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதன்பிறகு அட்லி இயக்கத்தில் “தெறி” “மெர்சல்” மற்றும் பிகில் திரைப்படத்தில் நடித்து வந்தார். இதற்கிடையே மீண்டும் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் அனைத்து திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதில் “மெர்சல்” திரைப்படத்தில் மட்டும் விஜய் முதல் முறையாக மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க – உலக நாயகனின் வாழ்வியல் குறிப்புகள் அறிவோம் !

நடிகர் விஜய்யின் கடந்த காலம்

கோடம்பாக்கத்தில் உள்ள “பார்த்திமா” மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் படித்தார், அதைத்தொடர்ந்து விருகம்பாக்கத்தில் உள்ள “பலெனோ” பள்ளியில் படித்தார். பிறகு தனது கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை படித்தார்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்கிறார். இவரின் மனைவியின் பெயர் “சங்கீதா” இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.

விஜயின் வருமானம்

நடிகர் விஜய் ஒரு படத்திற்கு சுமார் 20 கோடியை சம்பளமாக வாங்கி வருகிறார். முடிந்தவரை ரசிகர்களை ஏமாற்றாமல் சரியான படங்களையே தேர்ந்தெடுப்பார். இவரிடம் பல முன்னாள் இயக்குனர்கள் கதை சொல்ல வந்தாலும் தான் முன்பு நடித்த படத்தைப் போல் இருக்க வேண்டும் என்ற முதல் விதியை விதைத்தார். ஆம் இதனாலேயே இவர் சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற இயக்குனர்களின் படத்திலிருந்து விலகி இருந்தார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கினார்.

இன்று மிகப் பிரபலமாக இருக்கும் இயக்குனர் ஷங்கர் ஒரு காலத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் உதவி இயக்குனராக இருந்தவர்.

மேலும் படிக்க – கடினமான வாழ்க்கையை கடந்து வந்த தமிழ் கதாநாயகர்கள்..!

தற்போது விஜய் நடிக்கும் படம்

மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை தந்த “லோகேஷ் கனகராஜ்” அவர்களின் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படத்திற்கு “மாஸ்டர்” என்ற பெயர் வைத்துள்ளார்கள். இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன