பழங்குடியினர்களின் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள்..!

  • by
lifestyle and food habits of tribal people

பழங்குடியினர்கள் என்பவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகவே தங்கள் வாழ்க்கையை அடர்ந்த காட்டுக்குள் வாழ்ந்து வருபவர்கள். இவர்களுக்கு வெளி உலகம் என்பதே தெரியாமல் தங்களுடைய முழு வாழ்க்கையை காட்டு மனிதனை போல் வாழ்வார்கள். அதனால் அவர்கள் மிக வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை இதில் காணலாம்.

பழங்குடியினரின் வாழ்க்கை 

நாம் விவசாயம் செய்வதைப் போல் பழங்குடியினர்கள் தங்கள் வீட்டை சுற்றி உள்ள மரங்கள் மற்றும் செடிகளை பராமரிப்பார்கள். இதன் மூலமாக அதில் காய்கள், கனிகள் மற்றும் செடிகள் அதிகமாக வளரும். இதையே அவர்கள் தினமும் உணவுகளாக எடுத்துக் கொள்கிறார்கள். பசிக்கும் போது சிறிது பழங்களும் தேவைக்கேற்ப காய்கறிகளும் உண்டு தங்கள் வாழ்க்கையை வலிமையாக அமைத்துள்ளார்கள். நாம் தான் மூன்று வேளை உணவு என்று உணவுக்கான நேரங்களில் வகுத்து நம் வாழ்க்கையை மற்றவர்களின் பார்வைக்காக வாழ்கிறோம். ஆனால் இவர்கள் தங்கள் உணவுகளை உற்பத்தி செய்து அதை மகிழ்ச்சியாக உண்கிறார்கள்.

மேலும் படிக்க – ஹோலி பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது!

இயற்கை உணவுகள்

இயற்கையே நமக்கு பலவிதமான உணவுகளை அளிக்கிறது. ஆனால் நாம் அதை வியாபாரமாக பார்த்து அதை உற்பத்தி செய்து மற்றவர்களுக்கு விற்கிறோம். ஆனால் பழங்குடியினர்கள் அதை இயற்கையின் சொத்தாகவே பார்க்கிறார்கள். காடுகளில் உள்ள அனைத்து மனிதர்களும் சமமாக இது போன்ற உணவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இதற்காக எந்த ஒரு தொகைகளையும் அவர்கள் வாங்குவதில்லை.

உறவுகளாகும் வனவிலங்கு

பழங்குடியினருக்கும் மாமிச உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் அவர்களுக்கு தேவையான போது மட்டுமே வனவிலங்குகளை வேட்டையாடி உன் வார்கள், மற்ற சமயங்களில் அதற்கு உணவு அளித்து வளர்ப்பார்கள். காடுகளில் உள்ள எல்லா வன விலங்குகள் மற்றும் பறவைகள் இவர்களுடைய குடும்பம் போல் பார்ப்பார்கள். அதைத் தவிர்த்து ஒரு படி மேலே சென்று விலங்குகளை கடவுளாக மதிப்பார்கள்.

ஓய்வுகள் இல்லாத வாழ்க்கை..!

காடுகளில் இருக்கும் பழங்குடியினர்கள் தினமும் ஓய்வுகள் இல்லாமல் உழைப்பார்கள். ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டே தங்களுடன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறார்கள். தங்கள் உடல் கட்டமைப்பு மற்றும் ஆற்றலை அதிகமாக இவர்கள் பெறுவதற்குக் காரணம் இவர்கள் எந்நேரமும் ஓய்வில்லாமல் மரங்களில் ஏறி இறங்குவது, வீடு கட்டுவது, அவர்களின் இடத்தை சுற்றி பல விதமான கட்டமைப்புகளை செய்வது என்று வாழ்வார்கள்.

மேலும் படிக்க – இந்திய தேசத்தின் பாதுகாப்பு வாரம்..!

மருத்துவத்தில் சிறந்தவர்கள்

தங்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சினைக ளையும் அவர்களை சரி செய்து கொள்வார்கள். முடிந்தவரை இவர்களுக்கு உடல் பிரச்சனை எதுவும் ஏற்படாது, மிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதினால் இவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள். அதைத் தவிர்த்து ஏதாவது நோய்த் தொற்று ஏற்பட்டால் அதில் இருந்து பாதுகாக்க இவர்கள் காடுகளில் இருக்கும் மூலிகைகளை பயன்படுத்துவார்கள்.

மிக சுத்தமான காற்றை சுவாசித்து வாழும் பழங்குடியினர் தங்கள் வாழ்க்கையில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் என்று ஒன்று இல்லாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். நாம்தான் தேவையற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து பல வியாதிகளுக்குள் சிக்கி வாழ்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன