மீண்டும் நெற்றிக்கண், ரஜினியின் வாழ்க்கை முறை எப்படியானது..!

life style of super star rajinikanth

உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அவர்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என்று கேளுங்கள். நிச்சயம் அவர்கள் குறிப்பிடும் கதாநாயகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பெற்றிருப்பார், எல்லா வயதினரின் கதாநாயகன் என்ற சிறப்புவாய்ந்த உண்மையான ஹீரோ தான் ரஜினிகாந்த். கடைசியாக இவர் தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் கிட்டத்தட்ட 70 வயது அதாவது நம் வீட்டில் இருக்கும் முதியவரின் வயது. இவர் 12/12/1950 ஆம் வருடம் பிறந்தார். இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு நகரில் பஸ் கண்டக்டராக வேலை செய்தார். வேலை செய்யும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் நாடகங்களிலும் நடித்து வந்தார், இதனால் நடிப்பின் மேல் அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. எனவே தன் வேலையை புறக்கணித்து சினிமாவில் வாய்ப்பு தேடினார். கிட்டத்தட்ட 45 வருடங்களாக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஆச்சரியப்படுத்தும் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை முறைகள்

ரஜினிகாந்த் எழுத்தாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர். ஆரம்பத்தில் வில்லன் வேடத்தில் நடித்த இவர் இன்று இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹீரோ அந்தஸ்தை பெற்றுள்ளார். ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 55 கோடியை சம்பளமாக வாங்குகிறாராம். சாதாரணமாகவே இவர் படம் வெளிவந்தால் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விடுகிறது, அதிலும் படம் வெளிவருவதற்கு முன்பே அவருக்கு அளிக்கப்படும் சம்பளம் தயாரிப்பாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். அத்தகைய லாபம் தரும் ரஜினிகாந்தின் திரைப்படம் தோல்வியடைந்தால், தான் வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை நஷ்டமடைந்த டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் திரைப்பட சங்கத்தினருக்கு கொடுத்து விடுவாராம்.

மேலும் படிக்க – தலைவர் மாஸ் பொங்கல் சும்மா தெறிக்கவிட்றாறு !

ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்ததினால் அவருக்கென்று தனி வீடு பெங்களூரில் இருக்கிறது. அதேபோல் ஆடம்பரமான மாளிகை ஒன்று சென்னையிலும் இருக்கிறதாம். ரஜினிகாந்திற்கு 1981-ஆம் ஆண்டு லதா அவர்களை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பரான வாழ்க்கை

ரஜினிகாந்திடம் டொயோட்டோ இன்னோவா, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பென்ட்லீ போன்ற கார்கள் இருக்கிறது. இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆனால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார் என்ற பயத்தினால் இரவு நேரங்களில் சில சமயம் ஓட்டுவார்கள் என்று அவருக்கு நெருங்கிப் பழகியவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் படிக்க – தார்பாருக்கு திறக்குமா திண்டுக்கல் பூட்டு..!

ரஜினிகாந்திற்கு படிப்பது, தியானம் செய்வது, நடிப்பதுதான் பொழுதுபோக்காம். இதை தவிர்த்து, இப்போது இவர் அரசியலிலும் நுழைந்துள்ளார். ஒவ்வொரு படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினிகாந்த் தனது வேலை அலுப்பைத் போக்குவதற்காக இமயமலை சென்று ஆன்மீக வழிபாடு செய்வாராம். பொதுவாக இமயமலைக்கு யாருடைய துணையிமில்லாமல் தனிமையாக செல்வாராம். நீங்கள் ஒரு வெறித்தனமான ரஜினிகாந்த் ரசிகர் என்றால் இமயமலைக்கு அவரை பின்தொடர்ந்து சென்று அவரிடம் கையொப்பம் வாங்கி வாருங்கள்.

ஆன்மீக சிந்தனையில் அதிகம் நாட்டம் கொண்டதினால் ரஜினிகாந்த் அதிகாலையில் எழுந்து ஆரோக்கியமான உணவை அருந்திவிட்டு யோகா பயிற்சி செய்வது வழக்கமாம். அதேபோல் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்துவிட்டு இரவு 8 மணிக்கெல்லாம் உறங்கச் சென்று விடுவாராம்.

மேலும் படிக்க – சாதரண கண்டெக்டர் சிவாஜிராவ், சூப்பர் ஸ்டாரன சரித்திர வரலாறு

ரஜினிகாந்தின் பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். அதில் நான்கு விருதுகள் சிறந்த நடிகருக்காக கிடைத்தவை, மற்ற இரண்டும் நடிப்புக்காக சிறப்பாக கிடைத்த விருதுகள். அதைத் தவிர்த்து இவர் பத்மவிபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, எம்ஜிஆர் விருது போன்ற பல விருதுகளை வாங்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

வருடத்திற்கு ஒரு படம் நடித்து தனது ரசிகர்களை குதூகலப்படுத்தும் ரஜினிகாந்த் வருடங்கள் ஏற ஏற இவரின் வயது குறைந்துகொண்டே போகிறது. கபாலியில் நரைத்த முடியுடன் வயதானவர்கள் போல் நடித்த இவர் காலா, பேட்டை, இப்போது தர்பார் என அவரின் வயதை படங்களுக்கு படங்கள் குறைத்துக் கொண்டே போகிறார். இதை மக்களும் ஏற்றுக் கொண்டு அவரின் நடிப்பை ரசிக்கிறார்கள்.

இப்போது நம் சமுதாயத்தில் இருக்கும் பல தாத்தா பாட்டிகலுடைய நண்பராக இருப்பவர் ரஜினிகாந்த். ஆனால் இன்றும் 30 வயது இளைஞர்போல் துடிப்புடன் சினிமாக்களில் நடித்து வருகிறார். அதிலும் இளம் நடிகையுடன் சேர்ந்து டூயட் பாடுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன