பஞ்சாபி தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

  • by
life style of indian cricket player harbhajan singh

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஏகப்பட்ட இலக்கண வார்த்தைகளை பதிவிட்டு வருபவர் தான் நமது இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் தனது வாழ்க்கையில் பல ஏற்றங்களும் அதற்குமேல் இறக்கங்களையும் கண்டுள்ளார். அவைகள் என்னவென்று இங்கே காணலாம்.

அவருடைய தொடக்க காலம்

ஹர்பஜன்சிங், சீக்கியர் குடும்பத்தில் 3 ஜூலை 1980 ஆண்டு பஞ்சாபில் உள்ள ஜொலாந்தோர் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை சர்தார் சர்வீசிங் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்தார். குடும்பத்தில் ஹர்பஜன் சிங் மட்டுமே ஒரே ஆண். அவருக்கு ஐந்து சகோதரிகள் உள்ளார்கள். தன்னை தொடர்ந்து தன் மகன் ஹர்பஜன் சிங் தனது தொழிலை எடுத்து நடத்த வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார் சர்தார் சர்வே சிங். ஆனால் ஹர்பஜன் சிங் கிரிக்கெட் மேல் அதிக அளவிலான ஆர்வத்தைக் காட்டினார். இதனால் தன் ஆசையை தகர்த்து தனது மகளின் ஆசையை நிறைவேற்ற முயற்சித்தார்.

ஹர்பஜன்சிங் முதலில் ஒரு பேட்ஸ்மேனாக பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவருக்குள் இருக்கும் பந்துவீச்சு திறமையை அவரின் பந்துவீச்சு பயிற்சியாளர் “தவீந்தர் அரோரா” கண்டுபிடித்து தினமும் தனது நேரத்தை ஹர்பஜன் சிங்கிற்க்காக அர்ப்பணித்தார். இன்று ஹர்பஜன்சிங் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தை உருவாக்கியவர் இவர்தான்.

மேலும் படிக்க – “கொலவெறி” அனிருத் ரவிச்சந்திரனின் வாழ்க்கை.!

2001 ஆஸ்திரேலியா

1997 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். அப்போது முதன்மை பந்துவீச்சாளராக அனில் கும்ப்ளே செயல்பட்டு வந்த நிலையில், அவர் இடத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு திறமை வாய்ந்த இளம் பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களம் கண்டார், இதுதான் அவரின் முதல் ஒருநாள் போட்டி. 2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்கும் நிலையில் இருந்த இந்தியாவை மீட்டெடுத்தவர் ஹர்பஜன்சிங். முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை சாய்த்து மிகப்பெரிய சாதனையை புரிந்தார். இந்தியா ஃபாலோ ஆன் ஆகி தவிர்த்து வந்த நிலையில் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிடின் சிறப்பான ஆட்டத்தினாள் இந்தியாவின் கை ஓங்க தொடங்கியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங், ஸ்ட்ய்வாக், மார்க் வாஹ், மேத்யூ ஹைடன், கில்கிறிஸ்ட் போன்ற முன்னணி ஆட்டக்காரர்கள் இருக்கும் நிலையில் ஹர்பஜன்சிங் அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை வெற்றி அடையச் செய்தார்.

பஞ்சாப் அரசின் காவல் அதிகாரி

2001 ஆம் ஆண்டு அவர் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதினால் அவருக்கு பஞ்சாப் அரசு நிலம் மற்றும் பரிசுத்தொகையை வழங்கியது. இதைத்தவிர்த்து பஞ்சாப் காவல் அதிகாரி பதவியையும் அவருக்கு கொடுத்து கௌரவப்படுத்தியது. கடைசியாக அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனைகளுக்குள் வாழ்ந்த ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் வாழ்க்கை பல பிரச்சனைகளுக்குள் நகர்ந்து வந்தது. பந்து வீச்சாளராக முதல் முதல் முதலில் களம் இறங்கிய பின்னர் அவரின் பந்து வீச்சில் சந்தேகம் எழும்பியது. அவர் பந்தை எறிவதாக குற்றம் சாட்டப்பட்டு பரிசோதனைக்கு பின்பு அவர் பந்து வீச்சு சரியானது என்று நிரூபிக்கப்பட்டது.

2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்திருந்தார் ஹர்பஜன்சிங். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆண்ட்ரூ சைமண்ட்சை குரங்கு என்று அழைத்ததற்காக அவர் மேல் இனவெறி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதைப்போல் எந்த வார்த்தையும் சொல்லவில்லை என்று நிருபவித்தார். அவர் மேல் உள்ள தடையும் விளகியது.

2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஹர்பஜன்சிங் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை விளையாட்டு மைதானத்தில் வைத்து அறைந்து விட்டார். இதனால் ஹர்பஜன்சிங் விளையாடுவதற்கு சில மாதங்கள் தடை பிறப்பிக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு ராயல் ஸ்டக் விஸ்கி விளம்பரத்தில் தனது தலப்பா கட்டி அணியாமல் நடித்ததற்காக சீக்கியர்கள் தங்களது எதிர்ப்பை ஹர்பஜன்சிங் மேல் காட்டினார்கள். இதனால் அவரின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் மேற்கொண்டார்கள். உடனே ஹர்பஜன் சிங் தான் செய்த தவறை உணர்ந்து எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார்.

மேலும் படிக்க – நம்ம வீட்டு பிள்ளை “சிவகார்த்திகேயன்” வாழ்க்கை முறை.!

திருமண வாழ்க்கை

ஹர்பஜன் சிங்கின் தந்தை இறந்ததற்குப் பின்னால் தனது சகோதரிகளைத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது. எனவே தனது மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்த பிறகு ஹர்பாஜன் சிங் தனது தோழியான நடிகை கீதா பஸ்ராவை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் இருக்கிறார்.

பிரபலமான ஹர்பஜன் சிங்

உலகம் முழுக்க சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஹர்பஜன்சிங் பிரபலமடைந்தார். இவர் பஞ்சாப் அணியை தொடர்ந்து இந்திய அணி மற்றும் லண்டனில் உள்ள சர்ரே என்ற அணிக்காக விளையாடினார். 2008 முதல் 2017ம் ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய இவர் பந்துவீச்சாளர் மற்றும் ஆட்டக்காரராக களம் இறங்கினார். ஒரு சில போட்டிகளில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியை தலைமைதாங்கி வழிநடத்தினார். அதைத் தொடர்ந்து 2018 ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நுழைந்து தனது தமிழ் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தமிழில் பதிவுகளை அவ்வப்போது மேற்கொண்டு வந்தார். இந்தியாவின் உயரிய விருதான பத்மா ஸ்ரீ விருதையும் பெற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன