நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை முறைகள்..!

  • by
life style of actress keerthy suresh

நடிகை சாவித்திரியின் குணத்தை தத்துரூபமாக உள்வாங்கி, “நடிகையர் திலகம்” என்ற படத்தில் தனது நடிப்பை வெளிக் காட்டி தேசிய விருதை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் “சுரேஷ் குமார்” அவர்களின் மகள், இவருடைய தாய் “மேனகா” தமிழ் நடிகை. சினிமா துறையில் இருப்பவரின் மகளான கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பு பயணத்தை குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் ஆரம்ப காலம்

கீர்த்தி சுரேஷ் மலையாள தயாரிப்பாளரின் மகளாக இருந்தாலும் அவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை கேந்திர வித்யாலயா என்ற பள்ளியில் படித்தார். இவர் 17 அக்டோபர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார். சினிமா குடும்பத்தில் பிறந்ததினால் இவர் தனது வாழ்க்கையை சினிமாவிற்காக அர்ப்பணிக்கலாம் என்ற முடிவை சிறுவயதிலேயே எடுத்தவர். 2000 ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். “பைலட்” “அச்சனின்ட இஷ்டம்” “குபேரன்” போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “கீதாஞ்சலி” என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். இத் திரைப்படத்தை இயக்கியவர் பிரியதர்ஷன்.

மேலும் படிக்க – இறுதிச்சுற்று ரித்திகா சிங் வாழ்க்கை முறை.!

கீர்த்தி சுரேஷின் சினிமா பயணம்

2013ஆம் ஆண்டு “கீதாஞ்சலி” படத்தில் அறிமுகமாகிய பிறகு மலையாளத்தில் “ரிங் மாஸ்டர்” என்ற படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு தமிழில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். விஜய் இயக்கிய இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியடையவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் அறிமுகம் எல்லோரையும் கவர்ந்தது. “ரஜினிமுருகன்”, தனுஷுடன் “தொடரி”, “ரெமோ” போன்ற படங்களில் நடித்து வந்த இவர் தளபதி விஜயுடன் “பைரவா” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பெரிய நடிகையாக உருவெடுத்தார்

2018ல் மட்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட எட்டு படங்களுக்கு மேல் நடித்திருந்தார். இந்த வருடம் இவர் நடித்த “சாவித்திரி” என்ற திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. நடிகையர் திலகம் என தமிழில் வெளியானது. “சண்டைக் கோழி” இரண்டாம் பாகம், “சாமியின் இரண்டாம் பாகம்”, மீண்டும் நடிகர் விஜயுடன் “சர்க்கார்” திரைப்படம் என மிகப் பெரிய படங்களில் நடித்து வந்தார்.

மேலும் படிக்க – ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

இனிவரும் பயணம்

2020 ல் தொடங்கி இவரின் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. ஆனால் “பெண்குயின்” மற்றும் “தலைவர் 168” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரே மாதிரியான நடிப்பை வெளியிட்டுவந்த கீர்த்தி சுரேஷ் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்தான் “சாவித்திரி” அதைத் தொடர்ந்து அவரின் நடிப்பு பாவனைகளை முழுமையாக மாற்றி உள்ளார். எனவே இனிவரும் படங்களில் அவரின் நடிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன