சூரரைப் போற்று சூர்யாவின் வாழ்க்கை முறைகள்.!

Life style of actor surya

நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் சூர்யா அவர்கள் முதன் முதலில் “நேருக்கு நேர்” என்ற படத்தின் மூலமாக திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் இயக்குனர் வசந்த். தான் சினிமா பின்புலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அதன் தாக்கம் தனது நடிப்பு மற்றும் முன்னேற்றத்தில் இருக்கக்கூடாது என்ற முயற்சியில் சினிமாவில் நுழைந்தவர். 

சினிமா வாழ்க்கை

ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் “காதலேநிம்மதி”, “சந்திப்போமா”, “பெரியண்ணா” போன்ற படங்களில் நடித்து வந்த சூர்யாவிற்கு “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “உயிரிலே கலந்தது” மற்றும் “பிரான்ஸ்” போன்ற படங்களின் மூலமாக மிகப்பெரிய வெற்றி நாயகனாக உருவெடுத்தார். நடிப்பு மற்றும் நடனத்தில் ஓரளவு பங்களிப்பு தந்த நடிகர் சூர்யா, பாலா அவர்களின் இயக்கத்தில் “நந்தா” திரைப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்த நந்தனார் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மற்றும் அதற்காக இவர் அளித்த பங்களிப்பு எல்லோரும் பாராட்டும் வகையில் இருந்தது.

காதல் உணர்வை ஏற்படுத்தும் வகையில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான “உன்னை நினைத்து” மற்றும் அமீர் இயக்கத்தில் வெளியான “மௌனம் பேசியதே” போன்ற படங்கள் இவருக்கு தனி ரசிகர்களை உண்டாக்கியது.

மேலும் படிக்க – ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

மாற்று கதாபாத்திரங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான புது விதமான கதைகளம் கொண்ட “காக்க காக்க” திரைப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதை தவிர்த்து இத் திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யா ஏராளமான விருதுகளையும் அள்ளினார். மீண்டும் பாலா இயக்கத்தில் “பிதாமகன்” படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளியாக “பேரழகன்” படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். மணிரத்தினத்தின் “ஆயுத எழுத்து”, ஏ ஆர் முருகதாஸ்ன் “கஜினி” என மிகப்பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றினார்.

தன்னை வருத்திக் கொள்ளும் நடிகர்

இவர் “சில்லுனு ஒரு காதல்”, “வேல்” போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவர் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான “வாரணம் ஆயிரம்” படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தன் உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்ட சூர்யா தனது நடனத்திலும் நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தார். ஒவ்வொரு காலகட்டங்களில் தன் வாழ்க்கை கடந்து செல்லும் அனுபவங்களை மிகத்துல்லியமாக நடித்து ஒரு அற்புத அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தார்.

மேலும் படிக்க – இணையத்தை கலக்கும் அனுஹாசனின் வாழ்க்கை முறை.!

கமர்சியல் திரைப்படங்கள்

“அயன்”, “ஆதவன்”, “சிங்கம் 1, 2, 3” என அதிகமான வசூல் பெற்ற படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த “ஏழாம் அறிவு” திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து “24”, “தானா சேர்ந்த கூட்டம்”, “என் ஜி கே” மற்றும் சமீபத்தில் வெளியான “காப்பான்” திரைப்படம் வரை இவர் தன் பங்கை சிறப்பாக செய்து வந்தார்.

சூரரைப் போற்று

கடந்த சில வருடங்களாகவே மிகப்பெரிய வெற்றியை தர முடியாமல் தவித்து வரும் சூர்யா தனது அடுத்த படமான “சூரரை போற்று” இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பலாம். இத்திரைப்படத்தின் முதல் பாடலை நூறு அரசு ஏழை குழந்தைகளை விமானத்தில் முதல்முறையாக பயணிக்கச் செய்து “சூரரைப்போற்று” படத்தின் முதல் பாடலை வெளியிட்டார். ஏர் டெக்கான் உருவாக்கிய ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த திரைப்படம்தான் “சூரரைப்போற்று” என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் வாழ்க்கை முறைகள்..!

சமூக சேவை

இவர் நடிப்பைத் தொடர்ந்து சமூக சேவையிலும் பெரிய அளவில் ஈடுபட்டு வருகிறார். இவர் பணம் மற்றும் படிப்பு உதவிகளை ஏழை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என எல்லாவற்றுக்கும் அளிக்கிறார்.

இவர் நடிப்பும், சமூக சேவை தொடர்ந்து பல படங்களை தயாரித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துள்ளார். 44 வயதை தொட்ட சூரியா இன்று வரை 45திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மூன்று தமிழ்நாடு அரசு விருதும், 4 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து இன்னும் ஏராளமான வெற்றிப் படங்கள் மற்றும் விருதுகளை வெல்ல வேண்டும் என்பதே இவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன