அட்டு ஆனந்தியான “அறந்தாங்கி நிஷா”.!

  • by
life story of tv actress aranthangi nisha

திறமை என்பது எல்லோரிடத்திலும் ஏதாவது ஒரு வகையில் இருக்கும். ஆனால் அதை வெளிக் காட்டுவது என்பது ஒரு சிலரே தொடர்ந்து செய்கிறார்கள். அதிலும் நிறம் குறைவாக பார்ப்பதற்கு அழகில்லாமல் உணர்பவர்கள் அவர்களின் திறமையை எங்கேயும் வெளிக்காட்டுவதில்லை. ஆனால் தன்னால் முடியும் என்ற எண்ணத்தில் ஒரு குறிக்கோள் அமைப்பு இன்று பெண் நகைச்சுவை நடிகராக உருவெடுத்து இருப்பவர்தான் அறந்தாங்கி நிஷா. அவர் கடந்து வந்த பாதையை இங்கே காணலாம்.

ஆரம்ப வாழ்க்கை

38 வயதாகும் அறந்தாங்கி நிஷா புதுக்கோட்டையில் உள்ள அறந்தாங்கி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் சென்னையில் வாழ்ந்து வந்தாலும் அவரின் பள்ளிப்படிப்பை அறந்தாங்கியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தார். பின்பு புதுக்கோட்டையில் உள்ள ஜெ ஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இவரின் கணவரின் பெயர் ரியாஸ் அலி இவர் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை செய்து வருகிறார்.

மேலும் படிக்க – இணையத்தை கலக்கும் அனுஹாசனின் வாழ்க்கை முறை.!

கலக்கப்போவது யாரு

தனக்கு நகைச்சுவை வரும் என்பதை உணர்ந்து விஜய் தொலைக்காட்சி நடத்தும் “கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றத்துடன் தொடங்கிய தனது நகைச்சுவை பயணம் படிப்படியாக எல்லோர் மனதையும் கொள்ளை அடிக்கும் அளவிற்கு இவரின் நகைச்சுவைகள் இருந்தன. பெண் நகைச்சுவை நடிகர்கள் மற்றும் நகைச்சுவை செய்பவர்கள் அதிகமாக இல்லாத சமயத்தில் இவர் தனது திறமையை விஜய் தொலைக்காட்சி மூலமாக வெளிக் காட்டினார். அதைத்தொடர்ந்து “மிஸ் அண்ட் மிஸஸ் சின்னத்திரை” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடித்து வந்தார்.

சினிமாவில் நுழைந்த அறந்தாங்கி நிஷா

நமது திறமைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுவது நம்முடைய முன்னேற்றம் தான். அறந்தாங்கி நிஷா விற்கு சுந்தர்சிங் அவர்கள் இயக்கும் “கலகலப்பு” இரண்டாம் பாகம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி தனது திறமையை வெளிக்காட்டினார். அதைத்தொடர்ந்து “இரும்புத்திரை”, “மாரி 2”, “கோலமாவு கோகிலா”, “ஆண்தேவதை” போன்ற படங்களில் நடித்து வந்தார். “மாரி 2” வில் இவர் தனுஷுடன் சேர்ந்து ஒரு சில ரொமான்டிக் காட்சிகளிலும் நடித்தார். நகைச்சுவைக்காக செய்யப்பட்ட இந்த காட்சியில் இவரின் கதாபாத்திரத்தின் பெயர் அட்டு ஆனந்தி.

மேலும் படிக்க – பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் வாழ்க்கை முறைகள்..!

இன்னும் பல படங்களில் சிறிய வேடங்களில் இவர் நடித்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகின ஆனால் அது எந்த திரைப்படம் என இன்னும் உறுதியாக வெளியிடவில்லை. அறந்தாங்கி நிஷாவின் வெற்றி அவரைப் போல் இருக்கும் எல்லா பெண்களின் வெற்றிக்குயாகும் எனவே இவரை பின் தொடர்ந்து ஏராளமான பெண்கள் நகைச்சுவை உலகிற்குள் வந்துள்ளார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன