மரண பயம் போக்கும் சித்திரகுப்தரின் மந்திரம்

  • by

மரணம்:

மரணம் என்பது எல்லோரின் வாழ்க்கையில் நிகழக் கூடிய ஒன்றாகும், ஆனால் ஒரு சிலர் வாழ்க்கையில் எதிர்பாராத விதத்தில் மரணம் ஏற்படுகிறது. அவரவர் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாத அளவிற்கு ஏதேனும் விபத்துக்கள் அல்லது நோய்களின் மூலமாக இவர்களுக்கு இளம் வயதிலேயே மரணம் ஏற்படுகிறது. இது அவருக்கு ஏற்பட்டிருக்கும் துரதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். இதை தடுப்பதற்கு சிவனுக்குரிய மந்திரம் ஒன்று உதவும்.

புராணங்கள்:

ஒருவரின் ஆயுள் முடியும் சமயத்தில் எமதர்மராஜா அவரின் பாசக்கயிறு மூலமாக ஆயில் முடிந்த நபரின் உயிரை எடுத்துக் கொள்கிறார். எமதர்மராஜா அவருக்கு உதவியாக இருப்பவர் சித்திரகுப்தன், இவரிடம்தான் யார் எந்த நேரத்தில் எந்த இடத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார் என்ற குறிப்புகள் வைத்திருப்பார். அதை தவிர்த்து ஒருவர் தன் வாழ்நாளில் செய்திருக்கும் பாவ புண்ணிய கணக்குகளை வைத்து அவருக்கான தண்டனைகளும் மரணத்தின் மூலமாக கிடைக்கின்றது. இதைத் தவிர்த்து அவர் மரணமடைந்த பிறகு எமலோகத்திலும் தண்டனைகள் கிடைக்கின்றன என புராணங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மிருத்யுஞ்ஜய மந்திரம்:


ஒருவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டால் அதைத் திரும்பப் பெறுவது என்பது இயலாத காரியம். ஆனால் நாம் மரணத்தருவாயில் இருக்கும் பொழுது ஒரு சில மந்திரங்கள் மூலமாக நம் மரணத்தை தள்ளிப்போட முடியும். அதே சமயத்தில் நமக்கு ஏற்படும் மரண பயத்தை போக்க முடியும். சித்திரகுப்தருக்கு ஏற்பட்ட மரண பயத்தை கூட இந்த மந்திரத்தின் மூலமாக தான் தகர்த்தார். அந்த மந்திரம் தான் மிருத்யுஞ்ஜய மந்திரம். இதை ஒருவர் ஜெபித்தால் விதிப்படி அவர்கள் எந்த வயது வரை வாழ வேண்டுமோ அந்த வயது வரை முழுமையாக வாழ்வார்கள். இவர்களுக்கு துரதிஷ்டவசமாக விபத்துக்கள் அல்லது நோய்களினால் மரணம் ஏற்படாது.

மேலும் படிக்க – யோகாவில் இருக்கும் முத்திரைகளை செய்வதினால் நமக்கு கிடைக்கும் பலன்கள்.!

மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் பொருள் என்னவென்றால், வெள்ளரி மரத்தின் பிடியிலிருந்து அந்த வெள்ளரிக்காய் எப்படி தானாக விழுகிறதோ அதே போல் மரணப் பிடியில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று சிவபெருமானை வணங்கி போற்றப்படுவதே இந்த மந்திரம்.

மிருத்யுஞ்ஜய மந்திரம்: ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.

மேலும் படிக்க – பகவத் கீதையின் சிறப்புகள் என்ன?

இந்த மந்திரத்தை நீங்கள் நோய்வாய் பட்டிருக்கும் சமயங்களில் அல்லது உங்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் தருணங்களில் இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். இதை முழுமனதுடன் சொல்லுவதன் மூலம் இறைவனின் பார்வை உங்கள் மேல் பட்டு, உங்களுக்கான முழு ஆயுளை தருவார் என்று பலராலும் நம்பப்படுகிறது. எனவே இத்தகைய சூழ்நிலைகள் வரை செல்லாமல் தினமும் பூஜைகள் மட்டும் பிரார்த்தனை செய்யும்போது கூடுதலாக இந்த மந்திரத்தையும் ஜெபியுங்கள். இந்த மந்திரமானது சித்ரகுப்தனின் வாழ்க்கையை பாதுகாக்கும் அளவிற்கு வலிமை படைத்தவை எனவே சாதாரண மனிதர்களுக்கு இது எந்த அளவு உதவும் என்பதை உணருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன