ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை..!

  • by
life of a common man

ஒவ்வொரு மனிதனும் தனது தினசரி வாழ்க்கையை ஒரு இயந்திரத்தைப் போல்தான் கழிக்கிறான். அதிகாலையில் எழுவது, குளிப்பது, உணவருந்துவது, வேலைக்கு செல்வது, மீண்டும் வீட்டிற்கு வருவது, தனக்கு பிடித்த ஏதேனும் பொழுதுபோக்கு வேலைகளை செய்து உறங்கச் சென்று அதே வேளையை மீண்டும் அடுத்த நாள் தொடங்குவது, எனவே இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்கு உண்மையில் என்ன தேவை என்பதை அறிந்து அதை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை காணலாம்.

வாழ்க்கை மற்றும் மருத்துவ காப்பீடு

ஒவ்வொரு சராசரி மனிதனும் தனது வாழ்க்கையில் எந்த வயது முதல் எந்த வயது வரை இருக்கப் போகிறோம் என்பதை அறிவதில்லை. எனவே இதற்கு இடைப்பட்ட காலங்களில் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உங்கள் வாழ்க்கையில் மருத்துவம் மற்றும் வாழ்க்கை காப்பீட்டு திட்டங்களை உருவாக்குங்கள். இதன் மூலமாக உங்கள் எதிர்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும்.

சிறிய தொகையாக இருந்தாலும் உங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை சமாளிப்பது இதுபோன்ற திட்டங்கள்தான். இல்லையெனில் நீங்கள் சிறிது சிறிதாக சேமித்து வைத்த மொத்த பணமும் ஏதேனும் எதிர்பாராத விபத்துகளின் மூலமாக பறிபோகும். எனவே காப்பீட்டு திட்டங்களில் ஒவ்வொரு சராசரி மனிதனும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க – சேமிப்பை பின்பற்றி செழிப்புடன் வாழ்வோம்

உணவு மற்றும் ஆடைகள்

அடிப்படைத் தேவையாகக் கருதப்படுவது உணவு மற்றும் ஆடைகள். எனவே இதை சரியாக திட்டமிடுவது மூலமாக நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அதிகமாக மிச்சப்படுத்தலாம். உணவுப் பொருட்களை மொத்த வியாபார கடைகளில் வாங்குவதன் மூலமாக உங்கள் பணம் மிச்சம் அடையும். எளிதில் கெட்டுப் போகும் பொருட்களை தவிர்த்து, சில நாட்களுக்கு மட்டும் நமக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்பெறலாம்.

வருடத்திற்கு நமது குடும்பத்திற்கு தேவையான ஆடைகளை மிகப்பெரிய சந்தைகளுக்கு சென்று வாங்குவது சிறந்ததாக இருக்கும். குடும்ப மொத்தமாக அழைத்து செல்வதற்கு பதிலாக அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து அல்லது புகைப்படங்களை பகிர்ந்து ஆடைகள் பிடிக்கிறத என்பதை அவர்களிடம் கேட்டு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ஆடைகளை வாங்கி பணங்களை சிக்கன படுத்தலாம்.

படிப்பு மற்றும் பொழுதுபோக்கு

வருடத்திற்கு இரண்டு முறை நாம் படிப்பிற்காக செலவு செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வந்ததால் இவர்களின் படிப்புச் செலவுகளை முன்பே திட்டமிட்டு இருக்க வேண்டும். இதன் மூலமாக ஒரு சிறந்த வாழ்க்கை அமையும்.

குடும்ப மனநிலை எப்போதும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால் அவர்களின் வாழ்க்கையில் பொழுது போக்கு மிக முக்கியம். எனவே வருடத்திற்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவர்களை வெளியே அழைத்துச் செல்வது சிறந்தது.

மேலும் படிக்க – வேலை செய்யும் இடங்களில் உங்களை எப்படி வெளிக்காட்ட வேண்டும்?

போக்குவரத்து மற்றும் விலை உயர்வு

நாம் தினமும் வாகனத்தில் வேலைக்கு செல்பவராக இருந்தால் பெட்ரோலை முடிந்தவரை சிக்கனப்படுத்த வேண்டும். தேவையற்ற சமயங்களில் வாகனத்தை நிறுத்துவதன் மூலமாக உங்கள் பெட்ரோல் சேமிக்கப்படும். சிறிய தொகை என்று எண்ணாமல் இதை தினமும் செய்வதன் மூலமாக உங்களால் பெரிய தொகையை சேமிக்க முடியும். பொது வாகனங்களில் செல்பவராக இருந்தால் மாதத்திற்கு தேவையான பஸ் பாஸ் அல்லது ட்ரெயின் பாஸ் போன்றவைகளை எடுத்து பணத்தை மிச்சப்படுத்தலாம்.

நாம் ஒரு வருடத்திற்கு தேவையான ஏராளமான திட்டங்களை தீட்டி வைத்து இருப்போம். ஆனால் திடீரென்று விலை உயர்வுகள் ஏற்படும் பொழுது நம் திட்டங்கள் அனைத்தும் வீணாகும். எனவே எப்போதும் முன்னெச்சரிக்கையாக விலை உயர்வுக்கு ஏற்றார்போல் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் எதிர்காலம் பிரச்சனைகள் தீர்ந்து, நிம்மதியான மற்றும் வளமான வாழ்க்கை அமையும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன