மரணத்தை வென்ற “இர்பான் கான்”..!

  • by
life history of bollywood actor irfan khan

“ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தின் மூலமாக தமிழக ரசிகர்களுக்கு பரிச்சயமான அற்புதமான நடிகர் தான் இர்பான் கான். அதைத் தொடர்ந்து இவர் “அமேசிங் ஸ்பைடர் மேன்”, “ஜுராசிக் வேர்ல்ட்” போன்ற படங்களில் நடித்திருந்தார். தனது சிறுவயதில் “ஜுராசிக் பார்க்” படத்தை பார்ப்பதற்கான பணம் இல்லாமல் தவித்த இவர் “ஜுராசிக் வேர்ல்ட்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது திறமையின் மூலமாக வறுமையைப் போக்கிக் கொண்ட சிறந்த நடிகர் இர்பான் கான், இன்று நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

சலாம் பாம்பே 1988

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் ஒருநாள் ஒரு பெட்டி நிறைய பணங்களுடன் தன் தாயை சந்திக்க வேண்டும் என்பதுதான் இவர் கனவாக இருந்தது, இதற்கு கிரிக்கெட் துறையைத் தேர்ந்தெடுத்த இர்பான் கான் சிறப்பாக விளையாடி வந்தார். இருந்தும் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழலிலினாள் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகினார். இதை தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு “சலாம் பாம்பே” என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கப்பட்டார். அது முக்கிய கதாபாத்திரம் என்பதினால் மிக மகிழ்ச்சியாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார், இருந்தும் அவரின் உயரம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் அவர் நடித்த பல காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இத்திரைப்படம் இந்தி தரப்பிலிருந்து ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது. இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தினால் இவர் கிட்டத்தட்ட 12 வருடங்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் வறுமையில் வாடினார்.

மேலும் படிக்க – “வாதி கம்மிங்” பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டி..!

பான் சிங் தோமர்

2001-ம் ஆண்டு இர்பான் கான் வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதை காட்சி அளித்தது, பிரிட்டிஷ் திரைப்படமான “தி வாரியர்” என்ற படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ராஜஸ்தான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க படுவதினால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை சரியாக பயன்படுத்தி பாலிவுட் உலகிற்குள் மீண்டும் நுழைந்தார். அதைத் தொடர்ந்து இந்தியில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் அவர் “லைஃப் இன் யா மெட்ரோ” மற்றும் “பான் சிங் தோமர்” என்ற படத்தின் மூலமாக தனது முழு திறமையை வெளிக்காட்டினார் இதற்காக “பான் சிங் தோமர்” நடித்ததற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

சிறந்த குணச்சித்திர நடிகர்

கதாநாயகனாக தான் நடிப்பேன் என்ற கர்வத்தில் இல்லாமல் கிடைக்கும் சிறந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினார், அதிலும் இவர் “லஞ்ச் பாக்ஸ்” என்ற இந்திப் படத்தில் 2013ஆம் ஆண்டில் நடித்திருந்தார் இந்தத் திரைப்படம் ஆஸ்கருக்கு செல்வதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தும் ஒரு சில காரணங்களினால் இந்திய தரப்பிலிருந்து “குட் ரோட்” என்ற திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பி வைத்தார்கள், இருந்தும் “லஞ்ச் பாக்ஸ்” திரைப்படம் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக இருந்தது. அதைத் தவிர்த்து பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பின்பு கேன்ஸ் திரைப்பட விருதுகளில் இத்திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். இந்தியாவைத் தவிர்த்து ஏராளமான நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட படம் இதுவாகும், இதனால் உலக அளவில் பிரபலமடைந்தார் இர்பான் கான்.

ஹாலிவுட் படங்கள்

2008 ஆம் ஆண்டு “ஸ்லம்டாக் மில்லினியர்” திரைப்படத்தில் தனது நடிப்பை உலகத்தரத்திற்கு வெளிக்காட்டினார். இத்திரைப்படமும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு கிட்டத்தட்ட 8 விருதுகளை பெற்றது. அதைத் தொடர்ந்து மற்றொரு திரைப்படமான “லைஃப் ஆஃப் பை” என்ற படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்திருந்தார். “அமேசிங் ஸ்பைடர் மேன்”, “ஜுராசிக் வேர்ல்ட்” மற்றும் “இன்பர்நோ” போன்ற படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பதற்கான தோற்றம் இவருக்கு இல்லை என்று கிண்டல் செய்தவர்களுக்கு மத்தியில் உலகத்தரம் வாய்ந்த நடிப்பை வெளிப் காட்டியவர் இவர்.

மேலும் படிக்க – டெண்டிங்காகும் சிவகார்த்திகேயன் ஹஸ்டாக்..!

இர்பான் கான்

2017 ஆம் ஆண்டு இவர் நடித்த “ஹிந்தி மீடியம்” திரைப்படம் அதிக வசூலைக் குவித்தது. அதைத் தவிர்த்து இவர் இந்த படத்தில் நடிப்பிற்காக பிலிம்பேர் விருதையும் பெற்றார். நகைச்சுவையையும் மற்றும் சிறந்த கதைக் களத்தையும் கொண்ட இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் “அன்கிரீஜி மீடியம்” இந்த ஆண்டு வெளியானது. ஆனால் இது தான் இவர் நடித்த கடைசி படமாக இருக்கப் போகிறது என்பதை இவரின் ரசிகர்கள் அறியவில்லை.

ஆறடி உயரத்தின் காரணமாக பல படங்களிலிருந்து இவரை கழட்டிவிட்டார்கள், இருந்தும் தன் கண்கள் மூலமாக சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதற்காக இவருக்கு “பத்மஸ்ரீ” போன்ற உயரிய விருதுகள் கிடைத்தது. இதைத் தவிர்த்து இரண்டு ஆஸ்கார் படத்தில் நடித்த முதல் இந்திய கதாநாயகன் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். ராஜஸ்தானில் பிறந்த இவர் உடல்நிலை கோளாறினால் இன்று இறைவனடி சென்றுள்ளார். இருந்தும் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர் மரணத்தை வென்றவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன